search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suprme court"

    பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் திரைப்படத்தை பார்த்த தேர்தல் ஆணையம் வெளியிடக்கூடாது என கூறியது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட், படத்துக்கான தடையை நீக்க முடியாது என கூறியுள்ளது. #SupremeCourt #PMModiMovie
    புது டெல்லி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி ‘பி.எம். நரேந்திர மோடி’ படம் வெளியாக தேர்தல் ஆணையம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை தேர்தல் முடியும் வரையில் வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து தயாரிப்பாளர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

    இந்த திரைப்படத்தில் அரசியல் பிரசாரம் கிடையாது, உத்வேகம் அளிக்கும் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை தேர்தல் ஆணையத்திற்கு திரையிட தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டது.



    மேலும் தேர்தல் ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த திரைப்படத்தை பார்த்த தேர்தல் ஆணையம், படத்தை வெளியிடக்கூடாது என குறிப்பிட்டு  சீலிட்ட உறையில் அறிக்கையாக வைத்து கடந்த ஏப்ரல் 22ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

    இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவில் தலையிட முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. எனவே, தேர்தல் முடியும் வரை ‘பி.எம். நரேந்திர மோடி’ படத்தை வெளியிட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. #SupremeCourt #PMModiMovie


    ரபேல் போர் விமானம் பேர ஊழல் தொடர்பாக மத்தியில் காங்கிரஸ் தலைமையில் அமையவுள்ள அரசு விசாரணையை தொடங்கும் என மத்திய முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். #NDA #JPCprobe #Rafaledeal #Chidambaram
    பெங்களூர்:

    பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் போர் விமானம் கொள்முதல் செய்யும் விவகாரத்தில் பிரதமர் மோடி சிலருக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரை நேரடியாக குற்றம்சாட்டி நமது பிரதமர் நாட்டின் காவலாளி அல்ல. அவர் கொள்ளையடிப்பதில் வல்லவர் என பேசி வருகிறார்.

    இவ்விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. ரபேல் கொள்முதல் விவகாரத்தில் உரிய நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டதாக மத்திய அரசு தாக்கல் செய்த விளக்கம் திருப்தியளிப்பதால் இது தொடர்பான விசாரணைக்கு அவசியம் இல்லை என சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தது.

    இந்நிலையில், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் , ‘எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு செவிசாய்த்து ரபேல் போர் விமானம் பேர ஊழல் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணைக்கு இந்த அரசு உத்தரவிடாவிட்டால் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் ஆட்சிக்கு வரும் நாங்கள் அந்த காரியத்தை செய்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


    ரபேல் ஊழலை முன்வைத்து நாங்கள் நடத்திய பிரசாரங்களால் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் இவ்விவகாரத்தால் பா.ஜ.க.வுக்கு மக்கள் தகுந்த பாடத்தை கற்பித்தனர். வரும் பாராளுமன்ற தேர்தலிலும் இது முக்கிய  பிரச்சனையாக எதிரொலிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். #NDA #JPCprobe #Rafaledeal #Chidambaram

    நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளின் மரண தண்டனையை உடனே நிறைவேற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #Nirbhaya #SupremeCourt
    புதுடெல்லி:

    கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி இரவு, டெல்லியில், ஓடும் பஸ்சில் ‘நிர்பயா’ (கற்பனை பெயர்) என்ற மருத்துவ மாணவி, கற்பழித்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை கடந்த ஜூலை 9-ந் தேதி, சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

    இருப்பினும், 4 பேருக்கும் இன்னும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. அதை உடனே நிறைவேற்ற உத்தரவிடக்கோரி, அலக் அலோக் ஸ்ரீவஸ்தவா என்ற வக்கீல், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பொதுநல மனு தாக்கல் செய்தார்.  #Nirbhaya #SupremeCourt
    ×