search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது - நிர்மலா சீதாராமன்
    X

    ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது - நிர்மலா சீதாராமன்

    மக்களவையில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக நடந்த விவாதத்தில் பேசிய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன், ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது என்றார். #RafaleDeal #BJP #NirmalaSitharaman #Congress
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன்  இன்று ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. ராணுவத்திற்கு உபகரணங்களை சரியான நேரத்தில் வாங்குவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும். 
     
    நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமே பாஜக அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது. காங்கிரஸ் கேள்விகள் கேட்பதை நிறுத்திவிட்டு, குற்றச்சாட்டுகளுக்கு முதலில் பதிலளிக்க வேண்டும், தற்போது காங்கிரஸ் அமளியில் ஈடுபடுவது உண்மைகளை மறைப்பதற்காகவே. அவர்களுக்கு (காங்கிரஸ்) விமானத்தை வாங்க  விருப்பம் கிடையாது, அவர்கள் எதுவும் செய்யவில்லை. 



    வரும் செப்டம்பர் மாதத்தில் முதல் ரபேல் விமானம் வழங்கப்படும். விமானம் இந்த ஆண்டு இந்தியாவிற்கு வழங்கப்படும். 36 விமானங்களில் கடைசி விமானம் 2022-ம் ஆண்டு வழங்கப்படும். ஒப்பந்தம், பேச்சுவார்த்தை, பேரம் என அனைத்திலும் வெளிப்படைத்தன்மை இருக்கிறது.

    பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் பாதுகாப்பில் ஒப்பந்தம் என்பதற்கு இடையே வேறுபாடு உள்ளது. தேசிய பாதுகாப்புக்கே நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.  #RafaleDeal #BJP #NirmalaSitharaman #Congress
    Next Story
    ×