search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "policeman"

    ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பரா மாகாணத்தில் சோதனைச் சாவடி மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 போலீசார் உயிரிழந்தனர். #Talibankill #30policemenkill
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், அந்நாட்டின் மேற்கு பகுதியில் தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த ஃபரா மாகாணத்திற்குட்பட்ட காக்கி சஃபெட் மாவட்டத்தில் உள்ள ஒரு சோதனைச் சாவடி மீது நேற்று தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அம்மாவட்ட போலீஸ் கமிஷனர் உள்பட 30 போலீசார் உயிரிழந்தனர். 

    சுமார் 4 மணிநேரம் நீடித்த இந்த சண்டைக்கு பின்னர் அங்கிருந்து ஏராளமான ஆயுதங்களையும், வெடிப் பொருட்களையும் பயங்கரவாதிகள் அள்ளிச் சென்றதாகவும் எதிர் தாக்குதலில் 17 தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Talibankill #30policemenkill
    சேலத்தில் போலீஸ்காரர் உள்பட 6 பேரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் உள்பட 5 பேரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஓமலூர் பகுதியில் கடந்த 6-ந்தேதி இரவு சேலம் மாநகர ஆயுதப்படை போலீஸ்காரர் செல்லக்கண்ணு உள்பட 6 பேரிடம் மர்ம கும்பல் வழிப்பறி செய்தது.

    மேலும் சிலரை தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த நகை, பணம், மோட்டார் சைக்கிள், செல்போன் உள்ளிட்டவைகளை திருடிச் சென்றது. இந்த கும்பலை பிடிக்க போலீஸ் கமி‌ஷனர் சங்கர் 2 தனிப்படைகள் அமைத்தார்.

    இந்த தனிப்படை போலீசாரின் பிடியில் தற்போது சந்தேகத்தின் பேரில் ஓமலூர் பகுதியை சேர்ந்த 4 பேரும், சூரமங்கலம் பகுதியை சேர்ந்த ஒருவரும் சிக்கி இருக்கிறார்கள். இவர்களுக்கும், சம்பவத்தன்று கைவரிசை காட்டிய கொள்ளை கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா?, இவர்கள் மீது போலீஸ் நிலையங்களில் திருட்டு, கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளனவா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சிக்கிய 5 பேரில் சிலர் வாலிபர்கள் ஆவார்கள். ரகசிய இடத்தில் வைத்து நடைபெறும் இந்த விசாரணையில் மர்ம கும்பலை பற்றிய பல்வேறு விபரங்கள் வெளியாகலாம் என தெரிகிறது. #tamilnews
    ஒடிசா மாநிலம், பூரி நகரில் உள்ள ஜகநாதர் ஆலயத்துக்குள் துப்பாக்கி மற்றும் காலணிகளுடன் போலீசார் நுழைய சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. #PuriJagannathtemple #SC #PolicemanShoes
    புதுடெல்லி:

    ஒடிசா மாநிலம், பூரி நகரில் 12-ம் நூற்றாண்டு காலத்தில் அமைக்கப்பட்ட பூரி ஜகநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு தரிசனம் செய்யவரும் பக்தர்களுக்கு புதிய வரிசை முறையை உருவாக்க நிர்வாகம் தீர்மானித்தது.

    இந்த வரிசை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3-ம் தேதி 12 மணிநேர கடையடைப்புக்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. ஆரம்பத்தில் அமைதியாக நடைபெற்ற கடையடைப்பு போராட்டம், பின்னர் வன்முறையாக மாறியது.

    பூரி ஜகநாதர் ஆலயத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியை தகர்த்தபடி பலர் ஆலயத்தின் நிர்வாக அலுவலகத்தின் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 9 போலீசார் காயமடைந்தனர்.

    வன்முறைய கட்டுப்படுத்த கூடுதலாக போலீசார் உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி 47 பேரை கைது செய்தனர்.



    இந்த சம்பவத்தின்போது போலீசார் துப்பாக்கிகளுடனும், ஷூ காலுடனும் உள்ளே நுழைந்ததால் பூரி ஜகநாதர் ஆலயத்தின் புனிதம் மாசுபட்டதாக ஒரு அமைப்பின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் மதன் பி லோகுர்ம் தீபக் குப்தா ஆகியோர் பூரி ஜகநாதர் ஆலயத்துக்குள்  துப்பாக்கிகளுடனும், ஷூ காலுடனும் போலீசார் நுழைய கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டனர். #PuriJagannathtemple #SC #PolicemanShoes

    பிரேசிலில் சிறை மீது வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதற்கு பின்னர் சிறைக்குள் புகுந்த கும்பல் போலீஸ்காரரை சுட்டுக்கொன்று 92 கைதிகளை தப்பிக்க வைத்தனர். #BrazilPrison
    சர்வ பாலோ:

    பிரேசில் நாட்டின் வடமேற்கு பகுதியில் ரொமேயூ கான்கேல்வ்ஸ் அப்ரான்டெஸ் நகரில் மிகப்பெரிய சிறைச்சாலை உள்ளது. இங்கு பல தரப்பட்ட குற்றங்கள் புரிந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. இருந்தும் அவற்றை மீறி ஒரு கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தியது. பின்னர் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 92 கைதிகளை தப்பிக்க வைத்தனர்.

    முன்னதாக 20 பேர் கொண்ட கும்பல் 4 வாகனங்களில் வந்து சிறை வாசலில் இறங்கினர். துப்பாக்கி மற்றும் வெடி குண்டுகளை வைத்திருந்தனர். அதன் மூலம் சிறையின் முன்பக்க ‘கேட்’ உடைந்து நொறுங்கியது.

    பின்னர் உள்ளே புகுந்த கும்பலுக்கும் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் காயம் அடைந்த போலீசாரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார்.

    இதற்கிடையே கும்பல் விடுவித்ததால் தப்பி ஓடிய கைதிகளை தேடும் பணியில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் 41 பேரை போலீசார் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

    சர்வதேச அளவில் சிறை கைதிகள் அதிகம் உள்ள நாடுகளில் பிரேசில் 3-வது இடத்தில் உள்ளது. அங்கு 7 லட்சத்து 26 ஆயிரத்து 712 கைதிகள் சிறை கைதிகளாக உள்ளனர். #BrazilPrison
    தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவரை விலக்க சென்ற போலீஸ்காரரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் முத்துக்குமார். இவர் நேற்று இரவு பணியில் இருந்தார். அப்போது போலீஸ் நிலையத்திற்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர், புதுக்கோட்டை டி.வி.எஸ். ரவுண்டானா அருகே தகராறு நடப்பதாக கூறினார். உடனே முத்துகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.

    அங்கு புதுக்கோட்டை கலிப்நகரை சேர்ந்த கண்ணன் என்பவர் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அவரிடம் முத்துகுமார் விசாரணை நடத்தினார். 

    அப்போது அதே பகுதியை சேர்ந்த புகாரி மற்றும் யூசப் ஆகியோர் எப்படி கண்ணனிடம் விசாரணை நடத்தலாம் என்று கூறி முத்துகுமாரிடம் தகராறு செய்தனர். மேலும் ஆத்திரத்தில் போலீஸ்காரர் முத்துகுமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து முத்துகுமார் புதுக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பரவாசு தேவன் வழக்குபதிவு செய்து புகாரி, யூசப்சை கைது செய்தனர். 
    போலீஸ்காரர் வீட்டு முன் 2-வது மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கூடலூரைச் சேர்ந்தவர் அஜ்மல்கான். இவர் கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ளார்.

    இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்து கடந்த 2001-ம் ஆண்டு பரகத் நிஷா என்பவரை 2-வது திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.

    இது தொடர்பான வழக்கு உத்தமபாளையம் மகளிர் போலீசில் நிலுவையில் உள்ளது.

    இதனிடையே கடந்த ஆண்டு அஜ்மல்கான் கெங்குவார்பட்டியைச் சேர்ந்த சர்க்கரையம்மாள் என்பவரை 3-வது திருமணம் செய்து கூடலூரில் வசித்து வருகிறார். இந்த விபரம் 2-வது மனைவி பரகத் நிஷாவுக்கு தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர் கூடலூர் வந்தார்.

    அங்கு கணவர் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் செய்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில் முறைப்படி விவாகரத்து பெறாமல் 3-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்று ஆவேசமாக கூறினார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தாம்பரத்தில் செல்போனை பறிக்கும் முயற்சியில் போலீஸ்காரரை கொள்ளையன் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேளச்சேரி:

    தாம்பரம், லட்சமி நகரில் வசித்து வருபவர் ஞானசேகர். ஆயுதப்படை போலீசில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு அவர் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். உடன் சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றும் கலைச்செல்வனும் தனியாக மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    தாம்பரம் ரெயில் நிலையம் அருகே வந்த போது போலீஸ்காரர் ஞானசேகர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிப்பதற்காக தண்டவாளம் அருகே தனியாக நடந்து சென்றார்.

    அப்போது அங்கு பதுங்கி நின்ற வாலிபர் திடீரென ஞானசேகரை மிரட்டி செல்போனை கொடுக்கும்படி கேட்டான். அதிர்ச்சி அடைந்த அவர் செல்போனை கொடுக்க மறுத்து கொள்ளையனை மடக்கி பிடிக்க முயன்றார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஞானசேகரின் கையில் வெட்டினான். இதில் அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த உடன் வந்த மற்றொரு போலீஸ்காரர் கலைச்செல்வன் அங்கு விரைந்து சென்றார். உடனே கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

    கையில் பலத்த காயம் அடைந்த ஞானசேகர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்போனை பறிக்கும் முயற்சியில் போலீஸ்காரரை கொள்ளையன் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தாம்பரம் ரெயில் நிலையம் அருகே இரவு நேரங்களில் தனியாக செல்பவர்களை மிரட்டி நகை, செல்போன் பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    பாகூரில் கடன் தொல்லையால் போலீஸ் காரரின் தந்தை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    உறுவையாறு பாகூர் மெயின் ரோட்டை சேர்ந்த வர் கார்த்திகேயன் (வயது 58). தனியார் கம்பெனி ஊழியர். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

    இவரது மனைவி முனியம்மாள். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் பாலமுருகன் ஐ.ஆர். பி.என். போலீசாக வேலை பார்த்து வருகிறார்.

    கார்த்திகேயனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. மேலும் ரூ. 5 லட்சம் கடன் இருப்பதால் கார்த்திகேயன் மனவருத்தத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கார்த்திகேயன் வீட்டு பின்புறம் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கினார்.

    மகன் பாலமுருகன் வீட்டுக்கு வந்து தந்தையை தேடினார். தந்தை தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து மங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சிஆர்பிஎப் கமாண்டோ மற்றும் போலீஸ்காரர் உயிரிழந்தனர். #JharkhandEncounter
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கு தீவிர நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. மாவோயிஸ்டுகள் பதுங்கியிருக்கும் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இவ்வாறு தேடுதல் வேட்டையின்போது மாவோயிஸ்டுகள் தரப்பில் மட்டுமின்றி, காவல்துறை தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

    இந்நிலையில், சராய்கேலா-கர்சவான் மாவட்டம் தல்பாகா அர்கி பகுதியில் மாவோயிஸ்டுகள் சிலர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியை இன்று காலையில் சிஆர்பிஎப் படையின் கோப்ரா கமாண்டோ பட்டாலியன் வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் சுற்றி வளைத்தனர்.

    பின்னர் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே கடுமையான சண்டை நடைபெற்றது. இதில், கோப்ரா கமாண்டர் ஒருவர் உயிரிழந்தார். ஒரு போலீஸ்காரர் பலத்த காயமடைந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார்.

    சிறிது நேர துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, மாவோயிஸ்டுகள் அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். #JharkhandEncounter

    பெரியகுளம் அருகே போதையில் மாற்றுத் திறனாளியான தந்தையை சுட்டுக் கொன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி பிள்ளைமார் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). இவருக்கு நாகேஸ்வரி என்ற மனைவியும், விக்னேஸ் பிரபு (32), ராம்குமார் (30) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். விக்னேஸ் பிரபு கடந்த 2009-ம் ஆண்டு முதல் ஆயுதப்படை போலீசில் பணிபுரிகிறார்.

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். விக்னேஷ்பிரபு குடிபழக்கத்தால் மனைவி மற்றும் குழந்தைகள் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இதனால் அவர் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். தற்போது விக்னேஸ் பிரபு ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பாதுகாப்பு பணியில் உள்ளார்.

    நேற்று மாலை போதையில் விக்னேஷ் பிரபு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த மாற்றுத்திறனாளியான அவரது தந்தை செல்வராஜ் பணியில் இருக்கும் போது போதையில் இருக்கிறாயே? என கண்டித்தார். இதனால் ஆத்தரமடைந்த விக்னேஷ் பிரபு தான் வைத்திருந்த எஸ்.எல்.ஆர். துப்பாக்கியால் அவர் மார்பில் சுட்டார்.

    இதில் சம்பவ இடத்திலேயே செல்வராஜ் உயிரிழந்தார். விக்னேஷ் பிரபுவிடம் ஆயுதப்படை சப்- இன்ஸ்பெக்டர் ராஜ சேகர் மற்றும் ஒரு போலீஸ்காரர் தங்களது கைத்துப்பாக்கி, எஸ்.எல்.ஆர். துப்பாக்கியை வைத்திருக்குமாறு கொடுத்துள்ளனர். அந்த துப்பாக்கியால்தான் அவர் செல்வராஜை சுட்டுக் கொன்றது தெரிய வந்தது.

    இதனையடுத்து பெரியகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் விக்னேஷ்பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    திருப்பூரில், கடன் தொல்லை காரணமாக ரெயில் முன் பாய்ந்து ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார்.
    திருப்பூர்:

    திருப்பூர்–வஞ்சிபாளையம் ரெயில் நிலைய தண்டவாளப்பகுதியில் நேற்று காலை முகம் மற்றும் உடல் சிதைந்த நிலையில் ஒரு வாலிபரின் உடல் கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்படி அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும், அவர் அருகில் கிடந்த செல்போனை கைப்பற்றிய போலீசார் அதில் இருந்த சிம்கார்டை பயன்படுத்தி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த வாலிபர் திருப்பூர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த மோகன் என்பது தெரியவந்தது.

    போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கிடைத்த விவரம் வருமாறு:–

    தேனி மாவட்டம் போடி அம்மாபட்டியை சேர்ந்தவர் மோகன்(வயது 29). ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பணியாற்றி வந்த இவர் கடந்த 2013–ம் ஆண்டு முதல் திருப்பூர் பூலுவப்பட்டி பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கி இருந்து திருப்பூர் ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பணியாற்றி வந்தார். இவருக்கு அதிக அளவு கடன் இருந்து வந்ததாக தெரிகிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவருக்கு கடன் கொடுத்தவர்கள் கடனை உடனடியாக திரும்ப கொடுக்கும்படி மோகனிடம் வற்புறுத்தியுள்ளனர். இதனால் இவர் சில நாட்களாகவே மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவில் இருந்து மோகனை அவருடைய அறையில் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த வீட்டின் உரிமையாளர், மோகனின் அறைக்கு சென்று பார்த்துள்ளார். ஆனால் அறையில் யாரையும் காணவில்லை. மோகன் வேறு எங்காவது சென்றிருக்கலாம் என்று நினைத்த வீட்டின் உரிமையாளர், அவரின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.

    வழக்கமாக செல்ல வேண்டிய கவாத்து பயிற்சிக்கும் மோகன் செல்லவில்லை. இதனால் போலீஸ் அதிகாரிகளும் மோகனை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த நிலையில், மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த மோகன் நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக சென்ற ரெயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீசார், மோகன் கடன் தொல்லையால் தான் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தற்கொலை செய்து கொண்ட மோகனுக்கு, ரமா என்ற மனைவியும் 6 மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளனர். கடன் தொல்லையால் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் போலீஸ் வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், அம்மாநில காவல்துறைக்கும் இடையே அடிக்கடி மோதல் நிலவி வருகிறது. பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், பிஜ்பெகாரா பகுதியில், போலீஸ் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த பிலால் அகமது என்ற காவல்துறை அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து, பயங்கரவாதிகளை கண்டறிந்து களையெடுக்க, அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். #militantattack #policemanshoted
    ×