என் மலர்
செய்திகள்

ஆப்கானிஸ்தானில் சோதனைச் சாவடி மீது தலிபான்கள் ஆவேச தாக்குதல் - 30 போலீசார் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பரா மாகாணத்தில் சோதனைச் சாவடி மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 போலீசார் உயிரிழந்தனர். #Talibankill #30policemenkill
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் மேற்கு பகுதியில் தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த ஃபரா மாகாணத்திற்குட்பட்ட காக்கி சஃபெட் மாவட்டத்தில் உள்ள ஒரு சோதனைச் சாவடி மீது நேற்று தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அம்மாவட்ட போலீஸ் கமிஷனர் உள்பட 30 போலீசார் உயிரிழந்தனர்.
சுமார் 4 மணிநேரம் நீடித்த இந்த சண்டைக்கு பின்னர் அங்கிருந்து ஏராளமான ஆயுதங்களையும், வெடிப் பொருட்களையும் பயங்கரவாதிகள் அள்ளிச் சென்றதாகவும் எதிர் தாக்குதலில் 17 தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Talibankill #30policemenkill
Next Story






