என் மலர்
நீங்கள் தேடியது "Sickle Cut"
- ராஜபாளையம் அருகே சொத்து பிரச்சினையில் விவசாயிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது.
- இதுகுறித்த புகாரின் பேரில் 4 பேர் மீதும், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் உமாகாந்த் (வயது40). இவரது பெரியப்பா சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது சொத்தை பிரிப்பதில் உமாகாந்த்துக்கும், உறவினர்களுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வந்தது.
சம்பவத்தன்று உமாகான் அதே ஊரில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு வந்த உறவினர்கள் சஞ்சய்குமார், ராஜ்குமார், தவ சத்தியபாமா, அச்சம்மாள் ஆகியோர் உமாகாந்த்திடம் சொத்து பிரச்சினை தொடர்பாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த சஞ்சய்குமார் தான்கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்து உமாகாந்த்தை சரமாரியாக வெட்டினார். ராஜ்குமார் இரும்பு கம்பியால் தாக்கியதாக தெரிகிறது.
இதற்கு தவசத்தியபாமா, அச்சம்மாள் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த உமாகாந்த் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் விசாரணை நடத்தி பெண்கள் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- திருமணத்திற்கு பின் ஆறுமுகமும், ஜெயந்தியும் மும்பையில் வசித்து வந்தனர்.
- ஜெயந்தியும், ஆறுமுகமும் பிரிவதற்கு பெருமாள் தான் காரணம் என வேல்கணேசன் கருதினார்.
களக்காடு:
களக்காடு வியாசராஜபுரம் சேனையர் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 56). தொழிலாளி. இவரது சகோதரி நம்பியம்மாள் மகன் ஆறுமுகத்திற்கும், அதே தெருவை சேர்ந்த முருகன் மகன் வேல்கணேசனின் (39) தங்கை ஜெயந்திக்கும் திருமணம் நடந்தது.
முன்விரோதம்
திருமணத்திற்கு பின் ஆறுமுகமும், ஜெயந்தியும் மும்பையில் வசித்து வந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுடக்கிடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இதையடுத்து கணவன், மனைவி இருவரும் பிரிந்தனர். ஜெயந்தி களக்காடு வந்து தனது தாயார் வீட்டின் அருகே தனியாக வசித்து வருகிறார்.
ஜெயந்தியும், ஆறுமுகமும் பிரிவதற்கு பெருமாள் தான் காரணம் என வேல்கணேசன் கருதினார். இதுசம்பந்தமாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலை யில் நேற்று பெருமாள் தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார்.
அரிவாள் வெட்டு
அப்போது அங்கு வந்த வேல் கணேசனுக்கும், பெருமாளுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வேல் கணேசன், பெருமாளை அரிவாளால் வெட்டினார். இதனால் காயமடைந்த பெருமாள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனை யில் அனுமதிக்கப்ப ட்டார்.
இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பச்சமால், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இது தொடர்பாக வேல் கணேசனை கைது செய்தனர்.
- நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி வடக்குத் தெருவை சேர்ந்தவர் வானுமாமலை (வயது51). இவர் கரந்தாநேரியில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஓட்டலில் மேலாளராக உள்ளார்.
- ஓட்டல் கட்டுமான பணியில் தெய்வநாயகபேரியை சேர்ந்த ராஜன் (26) எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி வடக்குத் தெருவை சேர்ந்தவர் வானுமாமலை (வயது51). இவர் கரந்தாநேரியில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஓட்டலில் மேலாளராக உள்ளார்.
ஓட்டல் கட்டுமான பணியில் தெய்வநாயகபேரியை சேர்ந்த ராஜன் (26) எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 நாட்களாக ராஜன் வேலைக்கு வரவில்லை. இதனால் வானுமாமலை அவரை வேலைக்கு வர வேண்டாம் என்று கூறி விட்டார்.
மேலும் சம்பள பணத்தை உரிமையாளர் வந்ததும் தருகிறேன் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜன் மோட்டார் சைக்கி சென்று அரிவாளை காட்டி மிரட்டி வானுமாமலையிடம் சம்பளத்தை கேட்டு தகராறு செய்துள்ளார்.
தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த ராஜன், வானுமாமலையை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி, இதுதொடர்பாக ராஜனை கைது செய்தனர்.
- செல்வம் மும்பையில் இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.
- சப்பரம் தூக்குவதில் செல்வத்திற்கும், பலவேசத்திற்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழக்காடுவெட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் செல்வம் (வயது25). இவர் மும்பையில் இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கீழக்காடுவெட்டி அம்மன் கோவில் கொடை விழாவில் சப்பரம் தூக்குவதில் செல்வத்திற்கும், அதே ஊரை சேர்ந்த பலவேசத்திற்கும் (35) தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் செல்வம் ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று அங்குள்ள வீட்டு திண்ணையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பலவேசம், செல்வத்தை அரிவாளால் வெட்டினார்.
இதில் படுகாயமடைந்த செல்வம் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பச்சமால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி பலவேசத்தை தேடி வருகின்றனர்.
- இரு குடும்பத்தினரிடையே நடைபெற்ற மோதலில் கரூர் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
- போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ரவி (54). இவரது மனைவி விஜயா (49). அதே பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (50).இவரது மனைவி ராதிகா (45). இரு குடும்பத்தினர் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் விஜயாவின் வீட்டிற்கு அருகே வந்த சிவசுப்பிரமணியம் என்பவர் விஜயாவை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரம் அடைந்த சிவசுப்பிரமணியன் கையில் வைத்திருந்த அறிவாளால் வெட்டியுள்ளார். அப்போது அவரது மனைவி ராதிகா, அவரது சித்தி தமிழ்ச்செல்வி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து விஜயாவை தாக்கியுள்ளனர். இதில் விஜயா படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விஜயா, வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் விஜயாவை அரிவாளால்வெட்டி தாக்கியதாக ராதிகா, அவரது கணவர் சிவசுப்பிரமணியன், அவரது சித்தி தமிழ்ச்செல்வி ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். அதேபோல் ராதிகா கொடுத்துள்ள புகாரில் தன்னை வினோத் என்பவர் தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த அம்மிக்கல்லை எடுத்து வலது கை மேல் போட்டு காயப்படுத்தியதாகவும், சிந்து, விஜயா, ரவி ஆகியோர் தலை முடியை பிடித்து இழுத்து தன்னை தாக்கியதாகவும் கூறி வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அரிவாள் வெட்டில் காயமடைந்த சின்னத்துரை,சந்திரா செல்வி ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- மாணவரின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
நெல்லை:
நாங்குநேரி பெருந்தெரு பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை மற்றும் 9-ம் வகுப்பு படித்து வரும் அவரது தங்கை சந்திரா செல்வி ஆகிய இருவரும், சக மாணவர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும் பாளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரிவாள் வெட்டில் காயமடைந்து ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னத்துரை, சந்திரா செல்வி ஆகியோரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
மேலும், அவரது குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறினார். அதன் பிறகு மருத்துவர்களை சந்தித்து அவர்கள் இருவரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.
அப்போது முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, பாளை மேற்கு வட்டார தலைவர் கணேசன், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், ஜவஹர் பால் மன்ஞ் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ராஜா, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலை வர் ராஜ்குமார், காங்கிரஸ் நிர்வாகி சுடலை குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ஜோசப் ராஜஜெகனை அரிவாளால் வெட்டினர்.
- கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் வள்ளியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
நெல்லை:
வள்ளியூர் காமராஜர் முதல் தெருவை சேர்ந்தவர் ஜோசப் ராஜஜெகன் (வயது 46). வக்கீல். இவர் நேற்று காலை வள்ளியூர் மெயின் ரோட்டில் உள்ள தனது அலுவலகத்துக்கு வந்து கதவை திறந்து கொண்டிருந்தார்.
அரிவாள் வெட்டு
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென அவரை அரிவாளால் வெட்டினர். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். இதில் 2 பேரை பொதுமக்கள் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் நெல்லை அருகே உள்ள மூன்றடைப்பு பேரின்பபுரத்தை சேர்ந்த கார்த்திக் (22), பிரவின் ராஜா (22) ஆகியோர் என்பதும், தப்பி சென்றவர் ஆனந்தராஜ் (40) என்பதும் தெரியவந்தது.
கூலிப்படையினர்
அரிவாள் வெட்டில் ஜோசப் ராஜஜெகனின் தலை மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் வள்ளியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
கைது செய்யப்பட்ட 2 பேரும் பணத்திற்காக இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. கடந்த வாரம் ஜோசப் ராஜஜெகனை இந்த கும்பல் வெட்டுவதற்காக வெள்ளை நிற காரில் வந்துள்ளனர். ஆனால் சில காரணங்களால் அவர்கள் திரும்ப சென்றுள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே காரில் வந்த கும்பல் பேரின்பபுரத்திற்கு சென்றுள்ளனர். இது அங்குள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி உள்ளது. இதனை கைப்பற்றிய போலீசார் வக்கீலை எதற்காக இந்த கும்பல் கொலை செய்ய முயன்றனர். முன் விரோதம் காரணமாக நடைபெற்றதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தப்பிச் சென்ற ஆனந்தராஜ் தான் இவர்களை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. எனவே அவரை பிடித்தால் தான் உண்மையான கார ணம் தெரியவரும் வரும் போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 2 பேரையும் காவலில் எடுத்து விசா ரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
வள்ளியூரில் மூத்த வழக்கறிஞர் ஜோசப் ராஜ ஜெகனை அவரது அலுவலகத்தில் வைத்து நேற்று கூலிப்படையினர் வெட்டியதை கண்டித்தும், அவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கோரியும் வள்ளியூர் மற்றும் நாங்குநேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் வக்கீல்கள் இன்று கோர்ட்டுகளை புறக்கணித்தனர்.இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டது.
- தேவகோட்டையில் மாற்றுத்திறனாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
- கடன் பிரச்சினையில் இந்த விபரீத சம்பவம் நடந்தது.
தேவகோட்டை
தேவகோட்டை அருகே அடசிவயல் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி நாகநாதன் (வயது36). இவர் கட்டுமான பணிக்கு தேவை யான பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் நேற்று இரவு திருப்பத்தூர் சாலையில், ஸ்டேட் பேங்க் வீதி அருகே உள்ள செல்போன் கடை முன்பு நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு நல்லாங்குடியை சேர்ந்த பாண்டி மகன் மணிகண்டன் (30), புதுக்குடி கிராமத்தை சேர்ந்த செல்வம் மகன் காளீஸ்வரன் (31) ஆகியோர் வந்தனர்.
அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த வாள், அரிவாளால் நாகநாதனை வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் தலை, கைகள் மற்றும் கால் பகுதியில் நாகநாதனுக்கு காயம் ஏற்பட்டது. ரத்த காயத்துடன் கீழே விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் நமச்சிவாயம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மணிகண்டன் டாக்சி டிரைவராகவும், காளீஸ்வரன் கடை மற்றும் பைனான்ஸ் தொழில் நடத்தி வருவதாகவும் தெரியவந்தது.
மேலும் காளீஸ்வரனிடம் தொழில் தேவைக்காக நாகநாதன் பல தவணை களில் ரூ.60 ஆயிரம் கடன் பெற்றதும், அதில் ரூ.40 ஆயிரம் திருப்பி கொடுத்த நிலையில் ரூ.20 ஆயிரம் திருப்பிக் கொடுக்க வேண்டியுள்ளதும் தெரியவந்தது. கடன் பிரச்சினை காரணமாக நாகநாதனை அவர்கள் வெட்டியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் மற்றும் காளீஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர்.
- சரண்குமார் கூலி தொழிலாளியாக உள்ளார்.
- சரண்குமார் அரிவாளால் பிரேம்குமாரை வெட்டினார்.
கோவை,
கோவை ஏரிபட்டி மரம்புடுங்கி கவுண்டனூரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது23). டிரைவர். இவரது உறவினர் சரண்குமார்(21). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த சரன்குமார் பிரேம்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டினார்.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த சரண்குமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பிரேம்குமாரை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர்.இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து சரண்கு மாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மூன்றடைப்பு அருகே உள்ள முதலைகுளத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 71). விவசாயி.
- தற்போது தென்னை மரம் அமைந்துள்ள இடம் செல்வராஜிக்கு ஒதுக்கப் பட்டு, அவரது பெயரில் பட்டாவும் உள்ளது.
களக்காடு:
மூன்றடைப்பு அருகே உள்ள முதலைகுளத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 71). விவசாயி.
இவருக்கும், இவரது சகோத ரர்களுக்கும் சொந்தமான இடத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தென்னங்கன்று வைத்தனர். தற்போது தென்னை மரம் அமைந்துள்ள இடம் செல்வராஜிக்கு ஒதுக்கப் பட்டு, அவரது பெயரில் பட்டாவும் உள்ளது.
இந்நிலையில் நேற்று செல்வ ராஜின் சகோதரர் சுப்பையா வின் மகன் ராஜகோபால் தென்னை மரத்தில் தேங்காய்களை பறித்தார். இதைப்பார்த்த செல்வராஜ் தேங்காய்களை பறிப்பதை தட்டிக் கேட்டார். இதில் அவர்க ளுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆத்திரம் அடைந்த ராஜ கோபால், அவரது தந்தை சுப்பையா, அதே ஊரை சேர்ந்த முத்துக்குட்டி மனைவி செல்வி ஆகியோர் சேர்ந்து செல்வராஜை கல்லால் தாக்கி, அரிவாளால் வெட்டினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனால் காயமடைந்த செல்வராஜ் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் அனும திக்கப்பட்டார். இதுபற்றி செல்வராஜின் மகன் முருகன் (47) மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராஜகோபால், சுப்பையா, செல்வி ஆகியோரை தேடி வருகின்றனர்
- கிருஷ்ணராயபுரம் அருகே விவசாயி அரிவாளால் தாக்கப்பட்டார்.
- ராஜேந்திரன் பலத்த வெட்டு காயத்துடன் குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கரூர்:
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே வலையார்பாளையத்தை சேர்ந்தவர் பிச்சை மகன் ராஜேந்திரன். இவரது தாய் பெயரில் 6 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலத்தை ராஜேந்திரன் மற்றும் அவரது அண்ணன்கள் 3 பேரும் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சித்தலவாய் மஞ்சமேட்டை சேர்ந்த நடேசன் மகன் ரமேஷ் (வயது 48)என்பவர் இந்த 6 ஏக்கர் நிலம் தனக்கு சொந்தம் என்றும், அதில் ராஜேந்திரன் மற்றும் அவரது அண்ணன்களுக்கு உரிமை இல்லை என கூறி பிரச்சனை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் ராஜேந்திரன் தனது மனைவி மகேஸ்வரியுடன் தான் பயன்படுத்தி வரும் இடத்தினை சுத்தம் செய்த போது அங்கு வந்த ரமேஷ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. ரமேஷ் அப்போது ராஜேந்திரனை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் ராஜேந்திரன் பலத்த வெட்டு காயத்துடன் குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- ஜவுளி வியாபாரிக்கு அரிவாள் வெட்டு
- அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்த்தனர்
கரூர்,
கரூர் திரு.வி.க., சாலையை சேர்ந்த ஜோதி லிங்கம் மகன் கார்த்தி (வயது34) இவர், கரூர் உழவர் சந்தை அருகே, ஜவுளி கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை, ஜவுளி கடையில் இருந்த போது கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள்இரண்டு பேர் , கார்த்தியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட் டனர். அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து கரூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.