என் மலர்
நீங்கள் தேடியது "rowdy arrested"
- விருதுநகர் வாலிபர் கொலையில் ரவுடி கைது செய்யப்பட்டார்.
- 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர்
விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் ராம லட்சுமி. இவரது மகன் முத்துப்பாண்டி (வயது 17). டிரம்ஸ் இசைக்கலைஞரான இவர் மதுரை யில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதற்கான கூலி வாங்குவதில் முத்துப் பாண்டிக்கும், அதே பகுதியை சேர்ந்த அஜித்குமா ருக்கும் பிரச்சினை ஏற்பட் டது.
இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் 2 பேரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து அஜித்குமார், முத்துப்பா ண்டியை கொலை செய்ய திட்டமிட்ட தாக தெரிகிறது.
இதற்காக சம்பவத்தன்று இரவு முத்துப்பாண்டியை வீட்டில் இருந்து வெளியே அஜித்குமார் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அதன்பின் முத்துப்பாண்டி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதற்கிடையில் அங்கு உள்ள ஜக்கம்மாள் கோவில் பின்புறம் முத்துப்பாண்டி காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தியதில், அஜித்கு மார், அவரது நண்பர்கள் செல்வம் என்ற விஜய், தனுஷ் உள்பட 4 பேர் முத்துப்பா ண்டியை கொலை செய்தது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இதற்கிடையில் அதே பகுதியில் பதுங்கி இருந்த அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது விருதுநகர் போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்கு கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பொதுமக்களை அச்சுறுத்தி ஆபாச வார்த்தைகளால் பொது இடத்தில் நின்று கொண்டு ஒருவர் பேசிவந்தார்.
- அவர் இதனை மீறியும் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தவே அந்த நபரை கைது செய்தனர்.
கடலூர்:
சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோவில் தெருவில் பொதுமக்களை அச்சுறுத்தி ஆபாச வார்த்தைகளால் பொது இடத்தில் நின்று கொண்டு ஒருவர் பேசிவந்தார். தகவல் அறிந்து சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்தில் இருந்த நபருக்கு அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்..
அவர் இதனை மீறியும் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தவே அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில் அதே பகுதியில் உள்ள நடராஜன் (வயது 42) என்பது தெரியவந்தது. இதனையடுத்து 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- கார் திருட்டில் ஈடுபட்டது பிரபல ரவுடியான புழல் சண்முகாபுரத்தை சேர்ந்த முரளி மற்றும் அவரது 2-வது மனைவி சங்கீதா என்பது தெரிந்தது.
- முட்டுக்காடு பகுதியில் பதுங்கி இருந்த முரளியை போலீசார் கைது செய்தனர்.
திருப்போரூர்:
சித்தாலப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம். ஐ.டி. நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர், மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து விட்டு காரில் வந்து கொண்டு இருந்தார்.
கேளம்பாக்கம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் காரை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் வரும் வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு பெண்ணை இடித்து விட்டதாக கூறி ராஜ லிங்கத்தை தாக்கி காரின் சாவியை பறித்தனர். மேலும் கார் சாவியை போலீஸ்நிலையத்தில் ஒப்படைப்பதாக கூறி அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் செய்வது அறியாமல் திகைத்த ராஜலிங்கம் அங்கிருந்து சென்றார்.
சிறிது நேரத்தில் அங்கு மீண்டும் வந்த தம்பதியினர் காரை திருடி தப்பி சென்றுவிட்டனர். இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜலிங்கம் இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் 250-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர்.
இதில் கார் திருட்டில் ஈடுபட்டது பிரபல ரவுடியான புழல் சண்முகாபுரத்தை சேர்ந்த முரளி மற்றும் அவரது 2-வது மனைவி சங்கீதா என்பது தெரிந்தது.
முட்டுக்காடு பகுதியில் பதுங்கி இருந்த முரளியை போலீசார் கைது செய்தனர். அவர் தப்பி ஓட முயன்றபோது வலது கைமுறிந்தது. சங்கீதாவையும் போலீசார் கைது செய்தனர். திருடிய காரை அவர்கள் குறைந்த விலைக்கு விற்று இருப்பதும் தெரியவந்தது. அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- அரிவாள் வெட்டுப்பட்டு காயமடைந்த கணேசனை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- கணேசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணேசன் திருப்பூர் 49-வது வார்டு பா.ஜ.க. தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர்:
திருப்பூர் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள மது பாரின் முன் பகுதியில் நேற்று இரவு கருவம்பாளையம் பகுதியை சேர்ந்த யோக நாராயணன் (வயது 25) என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்த இமாம்(28) என்பவர் யோக நாராயணனிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து யோக நாராயணன் தனது தந்தை கணேசனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். உடனடியாக கணேசன் விரைந்து வந்து இமாமிடம் தட்டிக்கேட்டார். இதில் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த இமாம் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கணேசனின் கையில் வெட்டினார். இதில் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது இமாம் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் அடிதடி, வழிப்பறி, கொள்ளை, கொலை உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும், தற்போது ஜாமீனில் வெளியே வந்த அவர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் அரிவாள் வெட்டுப்பட்டு காயமடைந்த கணேசனை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணேசன் திருப்பூர் 49-வது வார்டு பா.ஜ.க. தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க. பிரமுகரை பிரபல ரவுடி அரிவாளால் வெட்டிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் விரட்டி சென்று புளியந்தோப்பை சேர்ந்த அருண் என்பவரை கைது செய்தனர்.
- அருண் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சென்னை:
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை அருகே நேற்று நள்ளிரவு 3 இளைஞர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி செல்போன்களை பறித்தனர்.
ரோந்து போலீசாரை கண்டதும் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரும் இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு ஓடினர்.
போலீசார் விரட்டி சென்று புளியந்தோப்பை சேர்ந்த அருண் (18) என்பவரை கைது செய்தனர். இவர் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தப்பி ஓடிய புளியந்தோப்பை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி சந்தோஷ் என்கிற தவக்களையை போலீசார் தேடி வருகின்றனர். கைதான அருணிடம் நடத்திய விசாரணையில், சூளை நெடுஞ்சாலையில் சாவியுடன் நிறுத்தி இருந்த ஒரு இருசக்கர வாகனத்தை திருடி வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
- அற்புதராஜூடன் 2 பேர் பொன்ராஜின் வீட்டுக்குள் சென்று விட்டு முகத்தை மறைத்துக் கொண்டு வெளியில் வரும் காட்சி அப்பகுதியில் உள்ள கேமராவில் பதிவாகி இருந்தது.
- கேமரா காட்சிகளை வைத்து அற்புதராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை:
சென்னை அபிராமபுரத்தில் வசித்து வந்த காய்கறி வியாபாரி பொன்ராஜ். கடந்த 13-ந்தேதி வீடு புகுந்து வெட்டி கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடியை சேர்ந்த இவருக்கும், இவரது தம்பி குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இருந்து வந்த முன் பகையால் சென்னையில் வசித்து வந்த தம்பி மகனான அற்புதராஜ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து பொன்ராஜை வீடு புகுந்து கொலை செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக அபிராமபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதீப் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது அற்புதராஜூடன் 2 பேர் பொன்ராஜின் வீட்டுக்குள் சென்று விட்டு முகத்தை மறைத்துக் கொண்டு வெளியில் வரும் காட்சி அப்பகுதியில் உள்ள கேமராவில் பதிவாகி இருந்தது.
இதை வைத்து அற்புதராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அற்புதராஜூடன் சென்று பொன்ராஜை கொலை செய்தவர்கள் யார்? என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த ரவுடி வாண்டுமணி மற்றும் கூட்டாளியான சுப்ரமணி என்பது தெரியவந்தது.
இருவரையும் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த வாண்டு மணி, சுப்ரமணி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அற்புதராஜின் மைத்துனர் நடத்தி வரும் 'பாஸ்ட் புட்' உணவகத்துக்கு ரவுடி வாண்டு மணி சாப்பிட செல்வது வழக்கம். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில்தான் அற்புதராஜ், வாண்டு மணியையும் அவரது கூட்டாளி சுப்ரமணியையும் துணைக்கு அழைத்து சென்று பொன்ராஜை கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
- பாதிக்கப்பட்ட பெண் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
- முருகன், கோகுல்ராம் ஆகியோரை உடனடியாக கைது செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்த முருகன் என்ற கட்டை முருகன் (வயது27), அழகேசபுரத்தை சேர்ந்த கோகுல்ராம் (19) ஆகியோர் அந்த பெண்ணை வழிமறித்தனர்.
பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணை தங்களது மோட்டார் சைக்கிளில் கடத்தி தருவைக்குளம் சென்றனர். அங்கு முருகன் அந்தப்பெண்ணை கற்பழித்துள்ளார்.
பின்னர் அந்தப் பெண்ணை அவரது வீட்டின் அருகில் விட்டுச் சென்றனர். இதற்கிடையே அந்த பெண்ணின் செல்போனில் தொடர்பு கொண்ட கோகுல்ராம் அவரை ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்தி உள்ளார். அவர் மறுக்கவே அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் முருகன், கோகுல்ராம் ஆகியோரை உடனடியாக கைது செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வனிதா, மணிமாறன் ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா அடங்கிய தனிப்படையினர் அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் தாளமுத்துநகர் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவரை மிரட்டி முருகன் பணம் கேட்டுள்ளார். அவர் மறுக்கவே அரிவாளால் கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் அவரிடமிருந்து ரூ. 500-ஐ பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.
இது தொடர்பாக அவர் தாளமுத்துநகர் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு தனிப்படையினர் விரைந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற முருகன் தவறி கீழே விழுந்தார். அதில் அவருக்கு கையில் முறிவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து முருகனை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கோகுல்ராமும் கைது செய்யப்பட்டார்.
கைதான முருகன் என்ற கட்டை முருகன் மீது தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட 16 வழக்குகளும், சிப்காட் மற்றும் விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி போலீஸ் நிலையத்தில் தலா ஒரு வழக்கு என 18 வழக்குகள் உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடித்தனம், பாலியல் குற்றம் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
- தினேஷ் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா கடத்தல் போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன.
- இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த வெங்கத்துார் காலனியைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 24). ரவுடி. இவரை கடந்த 11-ந் தேதி மணவாளநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் ஒரு கொலை முயற்சி வழக்கில் கைது செய்தார்.
பின்னர் தினேசை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
தினேஷ் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா கடத்தல் போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ரவுடி தினேசை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதற்கான உத்தரவை மணவாளநகர் போலீசார் புழல் சிறை சூப்பிரண்டிடம் வழங்கினார்.
கொடைக்கானல் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய காவலர்கள் உலகம்மாள், வனிதா ஆகிய 2 பேரும் லாஸ்காட் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கொடைக்கானல் அன்னை தெரசா நகரைச் சேர்ந்த சையது இப்ராகிம் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் மகளிர் போலீசார் மீது இடிப்பது போல வேகமாக வந்துள்ளனர்.
இதனை போலீசார் தட்டிக் கேட்டதால் அவர்களை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் உலகம்மாள் புகார் அளித்தார். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா, போலீஸ் ஏட்டுகள் சின்னச்சாமி, உதயகுமார், சீனிவாசன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
சையது இப்ராகிம் தனது வீட்டில் பதுங்கி இருந்தது தெரிய வரவே அங்கு சின்னச்சாமி மற்றும் சீனிவாசனை பட்டா கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடினார். இதனையடுத்து படுகாயமடைந்த இருவரும் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விரைந்து வந்து காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் சையது இப்ராகிமை பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் தனது மனைவியுடன் காரில் சையது இப்ராகிம் கோவைக்கு தப்பிச் செல்வதற்காக சென்று கொண்ருந்தார். அவரை அடையாளம் கண்ட போலீசார் மடக்கி பிடிக்க முயன்றபோது அவர்களிடமும் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இருந்தபோதும் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் போலீசார் சையது இப்ராகிமை பிடித்து கொடைக்கானல் போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது கொடைக்கானல் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாகப்பட்டினம்:
நாகை அடுத்த வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கை நல்லூரை சேர்ந்தவர் ஆனந்தவேலன் (வயது 30). லோடு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சரண்யா (28). இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளார்.
சரண்யா அந்த பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் திருட்டு குமார் என்கிற கணேஷ்குமார் (வயது29). பிரபல ரவுடியான இவர் மீது வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் 4 கொலை வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் சரண்யாவுக்கு அடிக்கடி ரவுடி கணேஷ்குமார், செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அவ்வப்போது பார்க்கும் போதெல்லாம் செக்ஸ் தொல்லை கொடுத்து வந்ததால் சரண்யா ஆத்திரம் அடைந்தார்.
இதனால் இந்த பிரச்சினை பற்றி அவர் , தனது கணவர் ஆனந்தவேலனிடம் கூறினார். இதை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனந்த வேலன், தனது நண்பர்கள் சிலருடன் சென்று ரவுடி கணேஷ்குமாரை கண்டித்தார். மேலும் இதுபற்றி வேளாங்கண்ணி போலீசில் புகாரும் செய்தார்.
இதையடுத்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசில் புகார் கொடுத்ததால் கணேஷ்குமார், ஆனந்தவேலன் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று ஆனந்தவேலன் மனைவி சரண்யா வீட்டில் இருந்தார். அப்போது அங்கு கணேஷ் குமார் கோபத்துடன் வந்தார். வீட்டு முன்பு நிறுத்தியிருந்த ஆனந்தவேலனின் லோடு ஆட்டோவை அடித்து நொறுங்கினார்.
பின்னர் ஆத்திரம் தீராமல், திடீரென குழந்தை கண்முன்னே சரண்யாவை கணேஷ் குமார் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்தவெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே சரண்யா பரிதாபமாக இறந்தார்.
சரண்யா இறந்ததும் அங்கிருந்து கணேஷ்குமார் தப்பி ஓடி விட்டார்.
இதற்கிடையே மனைவி இறந்த தகவல் அறிந்து ஆனந்தவேலன், மற்றும் அவரது தாய் விரைந்து வந்து இறந்துகிடந்த சரண்யாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த வேளாங்கண்ணி போலீசார் சரண்யாவின் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரும் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரண்யாவை வெட்டிக் கொலைசெய்த கணேஷ்குமாரை வலைவீசி தேடி வந்தனர்.
இநத நிலையில் கணேஷ்குமார் போலீசாருக்கு பயந்து தனது வீட்டுக்குள்ளேயே பதுங்கியிருந்தார். இதையறிந்த போலீசார் நேற்று இரவு வீட்டில் இருந்த கணேஷ்குமாரை கைது செய்தனர்.
செக்ஸ் டார்ச்சரால் பெண் பூ வியாபாரியை ரவுடி வெட்டி கொன்ற சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.