search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி"

    • லாரி எதிர்பாராத விதமாக அண்ணாதுரை மீது மோதியது.
    • பிேரத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள திருக்கானூர்பட்டி பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 63) விவசாயி.

    சம்பவத்தன்று இவர் தான் வளர்த்து வரும் மாட்டை மேய்ச்சலுக்கு விடுவதற்காக வீட்டிலிருந்து ஓட்டி சென்றார்.

    சிறிய தூரம் சென்றபோது மாடு திடீரென மிரண்டு ஓட தொடங்கியது.

    இதையடுத்து மாட்டை பிடிப்பதற்காக அண்ணா துரை பின் தொடர்ந்து ஓடினார்.

    அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக அண்ணாதுரை மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அண்ணாதுரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திரா விவசாயிகளின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டே கிருஷ்ணா நீர் முன்னதாக பூண்டி ஏரிக்கு திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. பூண்டி ஏரியில் சேமிக்கப்படும் தண்ணீர் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கேற்ப செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். அதன்படி ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீர் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.

    கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெய்த பலத்த மழையால் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியதால் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஜனவரி மாதம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் குறைந்ததால் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அரசு ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

    அதன்படி கடந்த 5-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்தத் தண்ணீர் 8-ந்தேதி காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது. அன்று இரவே பூண்டி ஏரிக்கும் சென்றடைந்தது.

    கண்டலேறு அணையில் இருந்து முதலில் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. தற்போது தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,700 கனஅடி வீதம் திறக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரிக்கு வருவது தற்போது குறைந்து உள்ளது.

    கடந்த வாரத்தில் 650 கனஅடிவரை வந்த தண்ணீர் வரத்து தற்போது 385 கனஅடியாக குறைந்து உள்ளது. ஆந்திரா பகுதியில் விவசாயிகள் கிருஷ்ணா தண்ணீரை எடுப்பதே தண்ணீர் வரத்து குறைந்ததற்கு காரணம் என்று தெரிகிறது.

    ஆந்திரா விவசாயிகளின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டே கிருஷ்ணா நீர் முன்னதாக பூண்டி ஏரிக்கு திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    எனவே ஆந்திரா விவசாயிகள் தண்ணீர் எடுப்பது குறைந்ததும் கிருஷ்ணா நீர் முழுமையாக பூண்டி ஏரிக்கு வந்தடையும்.

    மேலும் கண்டலேறு அணையில் போதுமான தண்ணீர் இருப்பதால் பூண்டி ஏரிக்கு தடையின்றி தண்ணீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    பூண்டி ஏரியில் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. தற்போது ஏரியில் 1143 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 385 கன அடி தண்ணீர் வழங்கப்படுகிறது.

    ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக 841 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இயற்கை வேளாண்மையில் அசத்தும் மதுரை விவசாயிக்கு மாநில விருது வழங்க கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.
    மதுரை

    திருமங்கலத்தை அடுத்த சவுடார்பட்டியை சேர்ந்த இயற்கை விவசாயி சுப்புராஜ் என்பவர் தோட்டத்தில் நெல்லி 6 ஏக்கர், சப்போட்டா 4 ஏக்கர், கொய்யா 7 ஏக்கர், கொடிக்காய்புளி 2.5 ஏக்கர், அத்தி 3 ஏக்கர் போன்ற பழப்பயிர்களை 10 ஆண்டுகளாக பயிரிட்டு வருகிறார். 

    இதற்காக அவர் ரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை வேளாண் இடு பொருட்களான பஞ்சகாவ்யா, தசகாவ்யா, அமிர்த கரைசல், மீன் அமிலம் ஆகியவற்றை  பயன்படுத்துகிறார். இதன் காரணமாக அவருக்கு ஆண்டு தோறும் 125 டன் பழங்கள் வரை விளைச்சல் கிடைக்கிறது.

    விவசாயி சுப்புராஜ் கூறுகையில், இயற்கை வேளாண் இடுபொருட்களை மட்டுமே விவசாயத்திற்கு பயன்படுத்துவதால், உடலுக்கு கெடுதி இல்லை. மண் வளமும் மேம்படுத்தப்பட்டு உள்ளது  என்றார்.

    விவசாயி சுப்புராஜின் இயற்கை வேளாண்மை குறித்து பாராட்டு தெரிவித்த கலெக்டர் அனிஷ் சேகர்,  தமிழகத்தில் இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு, மாநில அளவில் விருது வழங்கப்படுகிறது. இதற்காக சுப்புராஜின் பெயரை பரிந்துரைத்து உள்ளோம்” என்று தெரிவித்தார்.

    அப்போது அவருடன் வேளாண்மை இணை இயக்குநர் விவேகானந்தன், தோட்டக்கலை துணை இயக்குநர் ரேவதி உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    கண்டமனூர் பகுதியில் திடீரென பெய்த கன மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்பயிர்கள் மடிந்து விழுந்தன பாய் போட்டது போல மடிந்து காணப்படுகிறது.

    கண்டமங்கலம்:

    கடந்த சில நாட்களாக மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்தது பொதுமக்கள் நிம்மதி அடைந்தார்கள்.

    நேற்று காலை முதல் வெயில் வெளுத்து வாங்கியது திடீரென மாலை முதல் மேகத்தில் மாற்றங்கள் காணப்பட்டன. இரவு 8 மணி முதல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கண்டமனூர் பகுதியில் திடீரென பெய்த கன மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்பயிர்கள் மடிந்து விழுந்தன பாய் போட்டது போல மடிந்து காணப்படுகிறது.

    இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட் டுள்ள நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சமயத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்தால் நெற்பயிர் மடிந்து விவசாயிகளுக்கு பெரிதும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திடீர் மழையால் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள நெற்பயிர்கள் மடிந்து விழுந்ததால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.

    ×