search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் ஆய்வு
    X
    கலெக்டர் ஆய்வு

    இயற்கை வேளாண்மையில் அசத்தும் மதுரை விவசாயி-மாநில விருதுக்கு கலெக்டர் பரிந்துரை

    இயற்கை வேளாண்மையில் அசத்தும் மதுரை விவசாயிக்கு மாநில விருது வழங்க கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.
    மதுரை

    திருமங்கலத்தை அடுத்த சவுடார்பட்டியை சேர்ந்த இயற்கை விவசாயி சுப்புராஜ் என்பவர் தோட்டத்தில் நெல்லி 6 ஏக்கர், சப்போட்டா 4 ஏக்கர், கொய்யா 7 ஏக்கர், கொடிக்காய்புளி 2.5 ஏக்கர், அத்தி 3 ஏக்கர் போன்ற பழப்பயிர்களை 10 ஆண்டுகளாக பயிரிட்டு வருகிறார். 

    இதற்காக அவர் ரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை வேளாண் இடு பொருட்களான பஞ்சகாவ்யா, தசகாவ்யா, அமிர்த கரைசல், மீன் அமிலம் ஆகியவற்றை  பயன்படுத்துகிறார். இதன் காரணமாக அவருக்கு ஆண்டு தோறும் 125 டன் பழங்கள் வரை விளைச்சல் கிடைக்கிறது.

    விவசாயி சுப்புராஜ் கூறுகையில், இயற்கை வேளாண் இடுபொருட்களை மட்டுமே விவசாயத்திற்கு பயன்படுத்துவதால், உடலுக்கு கெடுதி இல்லை. மண் வளமும் மேம்படுத்தப்பட்டு உள்ளது  என்றார்.

    விவசாயி சுப்புராஜின் இயற்கை வேளாண்மை குறித்து பாராட்டு தெரிவித்த கலெக்டர் அனிஷ் சேகர்,  தமிழகத்தில் இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு, மாநில அளவில் விருது வழங்கப்படுகிறது. இதற்காக சுப்புராஜின் பெயரை பரிந்துரைத்து உள்ளோம்” என்று தெரிவித்தார்.

    அப்போது அவருடன் வேளாண்மை இணை இயக்குநர் விவேகானந்தன், தோட்டக்கலை துணை இயக்குநர் ரேவதி உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×