search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Self destruction"

    • முத்து செல்வி அம்பை பகுதியில் ஒரு மில்லில் வேலை பார்த்து வருகிறார்.
    • முத்து செல்வி மட்டும் தனது குழந்தையுடன் அணைந்தநாடார்பட்டியில் வசித்து வருகிறார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே இடைகாலை அடுத்த அணைந்தநாடார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 31).

    இவருக்கு முத்து செல்வி(27) என்ற மனைவியும், பென்ஷிகா(7) என்ற மகளும் உள்ளனர். சுரேஷ் சென்னையில் தங்கி இருந்து அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    முத்து செல்வி அம்பை பகுதியில் ஒரு மில்லில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர் மட்டும் தனது குழந்தையுடன் அணைந்தநாடார்பட்டியில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மாலையில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த முத்து செல்வி தனது கணவருடன் செல்போனில் பேசி உள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் மன வேதனை அடைந்த முத்துசெல்வி வீட்டில் இருந்த எலிமருந்தை எடுத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். மேலும் தனது 7 வயது குழந்தைக்கும் அதனை கொடுத்துள்ளார்.

    சிறிது நேரத்தில் 2 பேரும் மயங்கி விழுந்தனர். வீட்டில் அவர்கள் மயங்கி கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவையில் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியாத விரக்தியில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை கரும்புக்கடை அருகே உள்ள ஆசாத் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் என்கிற அப்துல் ரகுமான் (வயது 55). கூலித் தொழிலாளி.

    மது பழக்கத்துக்கு அடிமையான இவர் தினசரி குடித்துக்கொண்டே இருந்தார். இதனால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அப்துல் ரகுமானை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இனிமேல் மது குடிக்க கூடாது என கூறினர். இதனால் கடந்த சில நாட்களாக அப்துல் ரகுமான் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட அப்துல் ரகுமானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கணபதி அருகே உள்ள சிந்தாமணி நகரை சேர்ந்தவர் சரவணன் (48). வேலைக்கு செல்லும் இவர் தினசரி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சரவணன் வி‌ஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சி அருகே வெவ்வேறு சம்பவங்களில் முதியவர் - வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி கருமண்டபம் வடக்கு தெருவை சேர்ந்த ராமசாமி (வயது 60). குடிப்பழக்கம் உடையஇவர் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இதில் அவர் மனைவி கோபித்துக் கொண்டு செல்லவே, மனம் உடைந்த ராமசாமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலைகைப் பற்றிய செ‌ஷன்ஸ்கோர்ட்டு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி திருவானைக் காவல் கீழகொண்டயம் பேட்டை, குமரன் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (34). இவரது மனைவி லட்சுமி (32). கொரோனா காலகட்டம் காரணமாக அவருக்கு சரியான வேலை இல்லாமல் இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த ரமேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடலை கைப்பற்றிய ஸ்ரீரங்கம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நன்னிலம் அருகே வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள அதம்பாவூர் மேல தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 46). இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். சமீபகாலமாக மனநிலை சரி இல்லாமல் இருந்து வந்தாநிலையில் 20ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். அக்கம் பக்கத்தினர் மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லும் வழியிலேயே அன்பழகன் இறந்தார். இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சித்தோடு அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    சித்தோடு, நடுப்பாளையம் பகுதியை சேர்தவர் கார்த்திபன் (29). பேக்கரி பொருள்கள் தயாரித்து ஊர் ஊராக விற்பனை செய்துவரும் தொழில் நடத்தி வந்தார்.

    கடந்த 6 மாதமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் ஈரோடு சென்று பணம் வாங்கி வருவதாக கூறி சென்றுள்ளார். பின் வாட்ஸ் அப்பில் ஏதோ தகவல் போட்டிருப்பதாக உறவினர் ஒருவரின் போன் மூலம் குடும்பத்தாருக்கு தகவல் தெரிந்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து, கார்த்திபன் பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் இடத்திற்கு சென்று பார்க்கும் போது இரும்பு ஆங்கிலில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்துள்ளார். உடனே அவரை மீட்டு சித்தோடு அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கார்த்திபன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சித்தோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    நெல்லை மாவட்டத்தில் மனைவி இறந்த துக்கத்தில் 2 முதியவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    பணகுடி அருகே உள்ள நெருஞ்சி காலனி பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 71).

    இவரது மனைவி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மரணமடைந்து விட்டார். அப்போது முதல் ஜார்ஜ் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.

    அடிக்கடி மனைவி சென்ற இடத்திற்கு செல்ல போகிறேன் என்று கூறி வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது ஜார்ஜ் வி‌ஷம் குடித்தார்.

    அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாளை அருகே உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து (70), விவசாயி. இவரது மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இதைத்தொடர்ந்து இசக்கி முத்து, மனைவி சென்ற இடத்திற்கே செல்லப்போவதாக தன்னை பார்க்க வந்த உறவினர்களிடம் கூறி வந்தார். அப்போது இருந்து மிகவும் மனமுடைந்து காணப்பட்ட இசக்கிமுத்து நேற்று வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து பாளை தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை அருகே அடிதடி வழக்கில் மகன் சிறைக்கு சென்றதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள கோவிந்த நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47). கட்டிட தொழிலாளி.

    கடந்த 20 நாட்களுக்கு முன்பு இவரது மகன் சந்தோஷ் அந்த பகுதியில் நடந்த அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார். இதனால் முருகேசன் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். இதன் காரணமாக அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.

    சம்பவத்தன்று மது போதையில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கோவில் பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரெயில் முன்பு பாய்ந்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி திருவெறும்பூர் வேங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 35). இவர் அந்த பகுதியில் விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வேங்கூர் அருகே உள்ள ரெயில்வே தண்ட வாளத்தில் திடீரென திருச்சி வழி மயிலாடுதுறை சென்ற ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் திருச்சி ரெயில் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திருச்சி ரெயில் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லெட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரனை நடத்தினார்கள்.

    விசாரணையில் பாலமுருகனுக்கு கடுமையான வயிற்று வலி இருந்ததும் அதை குணப்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தததும் அதனால் தான் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் போலீசார் விசாரனையில் தெரிய வந்தது. ரெயில் நிலைய போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    நன்னிலம் அருகே குடும்பத்தகராறில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நன்னிலம்:

    நன்னிலம் அடுத்துள்ள அன்னதானபுரம், மேலே தெருவைச் சேர்ந்த ராஜன் மற்றும் அவரது மனைவி ருக்மணி ஆகிய இருவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நிஷாந்த் (வயது 8), சுதீஷ் (6) என்று இரண்டு குழந்தைகள் உள்ளனா.

    கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ருக்மணி, துப்பட்டாவால் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ருக்மணியின் தந்தை ராமதாஸ் காரைக்கால் அரசு மருத்துவமனை வைக்கப்பட்டிருந்த தனது மகளின் உடலை பார்த்த கதறி அழுதார். பின்னர் ராமதாஸ் பேரளம் போலீசில் தனது மகள் மரணத்திற்கு காரணமாக இருந்த மருமகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரித்து வருகின்றனர்.

    கோட்டயம் அருகே போலீஸ் நிலையத்தில் கைதி தற்கொலை செய்து கொண்டார். இதனால் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள மன்னர்காடு பகுதியை சேர்ந்தவர் நவாஸ் (33). காய்கறி வியாபாரி.

    கடந்த திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் நவாஸ் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் தகராறு செய்தார். இது குறித்து மன்னர்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நவாசை கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து அங்குள்ள அறையில் அடைத்தனர்.

    நேற்று மதியம் நவாஸை கோர்ட்டில் ஆஜர்படுத்த இருந்தனர். இந்த நிலையில் அவர் சிறுநீர் கழித்து விட்டு வருவதாக போலீஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார்.

    நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவரை போலீசார் தேடி சென்றனர். அப்போது நவாஸ் போலீஸ் நிலைய கழிவறையில் வேட்டியால் தூக்கில் தொங்கிய நிலையில் மயங்கி கிடந்தார்.

    அவரை மீட்டு கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். நவாசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனால் நவாஸ் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் திரண்டு வந்து மன்னர்காடு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு உருவானது.

    இந்த தகவல் மாநில டி.ஜி.பி. லோகநாத் ஜெகதாவுக்கு கிடைத்தது. அவர் நவாஸ் மரணம் குறித்து விசாரணை நடத்தவும், அப்போது பணியில் இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் கோட்டயம் போலீஸ் சூப்பிரண்டு ஹரி சங்கருக்கு உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கர் விசாரணை நடத்தி வருகிறார்.

    போலீஸ் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட நவாஸ் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    கோபி அருகே காதல் தகராறில் மனவேதனை அடைந்த டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோபி:

    கோபியை அடுத்த கடத்தூர் அருகில் உள்ள இண்டியம் பாளையம், விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி அமலா. இவர்களுக்கு ஒரு மகளும், மதன் குமார் (வயது 19) என்ற மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் சின்னசாமி கடந்த 5 வருடத்திற்கு முன் இறந்து விட்டார். மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். மதன்குமார் அரசூரில் மினிடோர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். மதன்குமார் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்தக் காதல் விவகாரத்தில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் மதன்குமார் கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்தார்.

    இந்நிலையில் மதன்குமார் அரசூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு கோவில் திருவிழாவுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    இதனால் அவரது தாய் அமலா மறுநாள் அரசூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்பாள் போட பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மதன்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மயிலாடுதுறையில் மகளிர் குழு கடனுக்காக அவமானப்படுத்தியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை வேதன் பிள்ளை காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33). கொத்தனார். இவரது மனைவி லலிதா (28). இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

    இந்த நிலையில் சுரேஷ், அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இதனால் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் வீட்டுக்கு வந்து செல்வாராம்.

    இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள தனியார் மகளிர் குழு நிறுவனத்திடம் லலிதா ரூ.30 ஆயிரம் கடன் பெற்றதாக தெரிகிறது.

    இதற்கிடையே கணவர் சுரேசுக்கு , கடந்த சில நாட்களாக வேலை சரிவர இல்லாததால் வருமானம் இல்லாமல் இருந்து வந்தார். இதனால் மகளிர் குழுவுக்கு கட்ட வேண்டிய கடன் தவணையை லலிதாவால் கட்டமுடியவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் நேற்று மகளிர் குழுவை சேர்ந்த சிலர் , லலிதா வீட்டுக்கு வந்தனர். கடன் தவணை பணம் கட்டாததால் லலிதாவை தகாத வார்த்தைகளால் திட்டினர்.

    பிறகு அவரை வீட்டு வாசலில் நிற்க வைத்து புகைப்படம் எடுத்து கொண்டனர். அப்போது லலிதாவை போட்டோ எடுத்த போது அதை அக்கம்பக்கத்தினர் பார்த்ததால் அவர் மிகவும் அவமானம் அடைந்தார்.

    தாய் லலிதாவை இழந்து தவிக்கும் குழந்தைகள்.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த லலிதா, அதே பகுதியில் உள்ள தனது தாய் முருகேஸ்வரி வீட்டுக்கு சென்றார். அங்கு திடீரென மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவியதால் அவர் அலறி கூச்சல் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லலிதா பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் பற்றி லலிதாவின் தாய் முருகேஸ்வரி மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மகளிர் குழு கடனுக்காக அவமானப்படுத்தியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    லலிதா தற்கொலை செய்து கொண்டதால் அவரது 3 வயது மகளும், 6 மாத ஆண் குழந்தையும் அனாதையாகி விட்டனர். தாயை இழந்த 2 குழந்தைகளையும் பார்த்து உறவினர்கள், கிராம மக்கள் கண்ணீர் விட்டு அழுதது பார்ப்போரின் கண்களை குளமாக்கியது.
    ×