குஜராத் மாநிலம் சூரத்தில் பாஜக மகளிரணி நிர்வாகி தூக்கு போட்டு தற்கொலை

நேற்று வீட்டில் பாஜக மகளிரணி நிர்வாகி தீபிகா படேல் தூக்கில் தொங்கினார். தீபிகா படேல் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
குஜராத் மாநிலம் சூரத்தில் பாஜக மகளிரணி நிர்வாகி தூக்கு போட்டு தற்கொலை
Published on

குஜராத் மாநிலம் சூரத்தில் 30-வது வார்டு பாரதீய ஜனதா கட்சியின் மகிளா மோர்ச் பிரிவு தலைவராக தீபிகா படேல் (வயது34) என்பவர் இருந்து வந்தார். இவரது கணவர் விவசாயியாக உள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று வீட்டில் தீபிகா படேல் தூக்கில் தொங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தீபிகா படேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது செல்போன் அழைப்புகளை பட்டியல் சேகரித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

தீபிகா படேல் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com