என் மலர்
நீங்கள் தேடியது "wife dispute"
திருபுவனை:
திருபுவனை அருகே உள்ளது ஆண்டியார் பாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 30). கார் மெக்கானிக். இவரது மனைவி வேல்விழி (24). இவர்களுக்கு சாதனாஸ்ரீ (3½) என்ற பெண் குழந்தையும், 2 வயதில் பிரசோத் என்ற மகனும் உள்ளனர்.
நேற்று மகன் பிரசோத்தின் பிறந்த நாளாகும். இதனையொட்டி பிறந்தநாள் விழாவை கொண்டாட மகேந்திரனும், வேல்விழியும் முடியு செய்தனர். ஆனால், பிறந்தநாள் விழா கொண்டாட பணம் இல்லாததால் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.
பின்பு வேல்விழி வெளியே சென்று விட்டார். அப்போது மகேந்திரன் வீட்டுக்குள் சென்று கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டார். சிறிது நேரம் கழித்து வேல்விழி வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்த போது, கணவர் மகேந்திரன் மின் விசிறியில் சேலையால் தூக்கில் பிணமாக தொங்கு வதை பார்த்து கூச்சல் போட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து தூக்கில் பிணமாக தொங்கிய மகேந்திரன் உடலை கீழே இறக்கினர்.
இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் பிரியா, ஏட்டு ஜெயதேவன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
கோரிமேடு ஆனந்தா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52). இவர் அங்குள்ள போலீஸ் குடியிருப்பில் பூக்கடை வைத்து பூ வியாபாரம் செய்து வந்தார்.
இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மது குடிக்கும் பழக்கம் உள்ள ஆறுமுகம் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம்.
அதுபோல் நேற்று மாலை பூ வியாபாரம் முடிந்ததும் ஆறுமுகம் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் குடிபோதையில் மனைவி மாரியம்மாளிடம் தகராறு செய்தார்.
மேலும் மாரியம்மாளை தாக்கியதில் அவர் காயம் அடைந்தார். பின்னர் போதை தெளிந்ததும் மனைவியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
ஆனாலும் மனைவியை தாக்கியதை நினைத்து ஆறுமுகம் மனமுடைந்தார். தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், ஏட்டு வெங்க டேசன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவனியாபுரம்:
மதுரை சொக்கிகுளம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது30). இவரது மனைவி பாண்டிச்செல்வி. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன.
முத்துப்பாண்டி அடிக்கடி மது அருந்தியதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பாண்டிச்செல்வி கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
அவரை சமரசம் செய்து வீட்டுக்கு வரும்படி முத்துப் பாண்டி அழைத்தார். ஆனால் பாண்டிச்செல்வி வர மறுத்து விட்டாராம்.
இதனால் மனவேதனை அடைந்து முத்துப்பாண்டி அளவுக்கு அதிகமாக மது அருந்தி உள்ளார். பின்னர் சின்ன அனுப்பானடி சிந்தா மணி தெருவில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்ற அவர் அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் மணிராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே விளமல் பதஞ்சலி மனோகரன் தெருவை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த சிவஞானராணி (21) என்ற இளம்பெண்ணை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது சிவஞானராணி 2 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 8-ந்தேதி கணவன்-மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது சிவஞானராணி, முரளிதரனை கண்டித்து பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த முரளிதரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டார். அந்த சமயத்தில் அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து முரளிதரனை மீட்டனர். பின்னர் அவர் திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முரளிதரன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து முரளிதரனின் தந்தை ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் திருவாரூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிரேகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






