என் மலர்
செய்திகள்

நெல்லை டவுனில் பட்டாசு வாங்குவதில் தகராறு: அண்ணன்-தம்பிக்கு அரிவாள் வெட்டு
நெல்லை:
நெல்லை டவுன் பாரதியார் தெருவை சேர்ந்தவர் மாரிச்செல்வம் (வயது 29). இவரது தம்பி சுடலைமுத்து (27). இவர்கள் நேற்று முன்தினம் பட்டாசு வாங்குவதற்காக அங்குள்ள கடைக்கு சென்றனர்.
அப்போது வரிசையில் நிற்பது தொடர்பாக அங்கு பிரச்சினை ஏற்பட்டது. இது குறித்து அங்கு டீக்கடை நடத்தி வரும் முத்தையா என்பவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
நேற்று அவரது கடைக்கு சென்ற மாரிச்செல்ம் மற்றும் சுடலைமுத்து ஆகியோர் எப்படி போலீசில் புகார் செய்யலாம் என கேட்டு அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் கடையில் உள்ள பொருட்களை அடித்து உடைத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த முத்தையா இருவரையும் அரிவாளால் வெட்டினார். இதில் இருதரப்பினருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் இருதரப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.