search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Piyush Goyal"

    • குறு, சிறு, நடுத்தர தொழில்களின் வெற்றிக்கு கோவை மாநகரம், சிறந்த உதாரணம்.
    • குறைந்த விலையில் ஆடைகள் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கமான சைமா (SIMA) சார்பில், கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் சைமா ஜவுளி கண்காட்சி 2022-ஐ மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல் இன்று தொடங்கி வைத்தார். மாநாட்டு மலரை வெளியிட்டு அவர் பேசியதாவது:

    கோவை மாநகரம் ஜவுளி உற்பத்திக்கு மட்டுமின்றி, நூற்பாலை எந்திரங்கள், உதிரி பாகங்கள் மற்றும் இத்தொழில் சார்ந்த உபபொருட்கள் உற்பத்தியில் நாட்டின் முன்னணி தொழில் மையமாக திகழ்கிறது. உலகளவிலும், ஜவுளி உற்பத்திக்கு பெயர் பெற்ற இடமாக கோவை திகழ்கிறது. இப்பகுதியில் உள்ளவர்களின் தொழில்முனைவு திறன் பாராட்டத்தக்கது.

    குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்துறையின் வெற்றிக்கு மிகச்சிறந்த உதாரணமாக திகழும் கோவையில், பல்லாயிரக்கணக்கான குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஜவுளி தவிர பாதுகாப்பு துறை சார்ந்த பொருட்கள் உற்பத்தியிலும் முக்கிய இடம் வகிக்கிறது.

    கொரோனா பெருந்தொற்று பாதிப்பதால் ஏற்பட்ட இழப்புகளை சமாளிக்க அரசு அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி இப்பகுதியை சேர்ந்த தொழில்முனைவோர் தொழிலை மேம்படுத்தியதற்கு பாராட்டு. சவால்களை வாய்ப்பாக பயன்படுத்தியதன் மூலம் கடந்த ஆண்டில் 440 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

    பெருந்தொற்று பாதிப்புக்கு பிந்தைய காலத்தில் இந்திய ஜவுளி மற்றும் ஆடை தயாரிப்பு தொழில்துறை 44 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற சாதனை அளவை எட்டியிருக்கிறது. இந்திய தொழில் கூட்டமைப்பான சிஐஐ மற்றும் சர்வதேச ஆலோசனை அமைப்பான கியர்னி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைகளின் படி, 2026-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 81 சதவீதம் அதிகரித்து, 65 பில்லியன் டாலரை எட்டும்.

    இதன் மூலம் 7.5 லட்சம் முதல் ஒரு கோடி வரை புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் உரிய காலத்தில் செயல்படுத்தப்பட்டதே இதற்கு காரணம்.

    கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் வேளாண்துறைக்கு அடுத்தபடியாக ஜவுளித்துறை இரண்டாவது இடம் வகிக்கிறது. அத்துடன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் வருவாயிலும் முக்கிய பங்காற்றி வருகிறது.

    நாட்டில் குறைந்த விலையில் ஆடைகள் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்சார்பு இந்தியாவுக்கு மிகச்சிறந்த உதாரணமாக ஜவுளித்தொழில் திகழ்கிறது. இந்தியா பஞ்சு பற்றாக்குறை உள்ள நாடாக ஏற்கனவே அறிவிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஐக்கிய அரபு எமிரேட், ஆஸ்திரேலியாவுடன் கடல்சார் பொருள் வர்த்தகத்தில் தடையில்லா ஒப்பந்தம்
    • இங்கிலாந்து, கனடாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை

    கொச்சி:

    கேரளா மாநிலம் கொச்சியில் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தில் ஆய்வு செய்த மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி தற்போது 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவாக உள்ளது. 5 ஆண்டுகளுக்குள் அதை இரட்டிப்பாக்கி ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.

    மீன் பிடித்தலை அதிகரித்தல், தரம் மற்றும் வகைகளை உறுதி செய்தல் மற்றும் மீன்வளர்ச்சித் துறைக்கு தேவையான ஆதரவை வழங்குதல் மூலம் இந்த இலக்கை அடைய முடியும்.

    ஐக்கிய அரபு எமிரேட், ஆஸ்திரேலியாவுடன் தடையில்லா ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து, கனடாவுடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஜரோப்பிய யூனியனுடனான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்கள் வரும் 17ம் தேதி தொடங்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் உள்ள ரெயில்வே பணிகளுக்கு தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள ரெயில்வே பணிகளுக்கு தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 20–ந்தேதி சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில்(ஐ.சி.எப்.) ‘அப்ரண்டிஸ்’ பணிகாக விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியானது.

    இதில் தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரெயில்வே வேலையில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளித்ததற்காக தமிழக பா.ஜ.க. சார்பில் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–



    தமிழக பா.ஜ.க. சார்பில் ரெயில்வே துறையில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று உடனே நடவடிக்கை எடுத்த ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலுக்கு நன்றி.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    காங்கிரஸ் அமைத்திருப்பது ஊழல் கூட்டணி என்று பாராளுமன்ற தேர்தல் தமிழக பா.ஜ.க. பொறுப்பாளரும், ரெயில்வே அமைச்சருமான பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். #BJP #PiyushGoyal #Congress
    ராமநாதபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் தமிழக பா.ஜ.க. பொறுப்பாளரும், ரெயில்வே அமைச்சருமான பியூஸ் கோயல் ராமநாதபுரத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய மக்கள் 130 கோடி பேர் நலமுடன் வாழ வேண்டி ராமேஸ்வரம் கோவிலில் வேண்டிக்கொண்டேன்.


    தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட தி.மு.க. கூட்டணி வெற்றி பெறாது. 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். 2 ஜி ஸ்பெக்ட்ராம் ஊழல் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி சார்பாக போட்டியிட சீட் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகள் காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. காங்கிரஸ் ஊழல் கூட்டணி அமைத்துள்ளது.

    இவ்வாறு கூறினார். #BJP #PiyushGoyal #Congress
    பாரதிய ஜனதாவை எதிர்த்து போட்டியிடும் திமுக, காங்கிரஸ் தலைவர்கள் ஊழல்வாதிகளாக உள்ளதாக மத்திய மந்திரி பியூஸ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார். #bjp #parliamentelection #PiyushGoyal
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரான மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து நாகர்கோவிலில் நேற்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் பிரசாரம் செய்தார்.

    நாகராஜா திடலில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் நல்ல கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்துள்ளது. இக்கூட்டணி வருகிற தேர்தலில் அமோக வெற்றியை பெறும். இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் வீடுகள் இருக்க வேண்டும். எல்லோருக்கும் கழிப்பறை வசதி, சுத்தமான குடிநீர், சாலை வசதி, ரெயில் வசதி அமைய வேண்டும்.

    நாடு சாதி, மத, இன உணர்வு இல்லாத வகையில் தன்னிறைவு பெற்று திகழ வேண்டும். இதற்காகதான் பிரதமர் மோடி பாடுபட்டு வருகிறார். அவர் கொண்டு வந்த ஆயூஷ்மான் திட்டம் மூலம் 50 கோடி பேர் பலன் அடைந்துள்ளனர். 10 கோடிக்கும் மேல் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

    80 கோடிக்கும் அதிகமானோருக்கு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வாக்குறுதிகளை அளித்தால் அதை செய்து முடிப்பார். இப்போது அதனை செய்தும் முடித்துள்ளார்.

    பாரதிய ஜனதாவை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க., காங்கிரஸ் தலைவர்கள் ஊழல்வாதிகளாக உள்ளனர். நிலக்கரி ஊழல் மூலம் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடியை இழந்துள்ளோம். வெளிப்படை தன்மை இல்லாததால் 2ஜி மூலம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடியை இழந்தோம்.

    கோப்புப்படம்

    ஏழை மக்களின் பணத்தை சுரண்டிய காங்கிரஸ், தி.மு.க.வினருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க நாம் மேல்முறையீடு செய்துள்ளோம்.

    பாரதிய ஜனதா தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் மீனவர்களுக்கு தனித்துறை அமைக்கப்படும் என அறிவித்துள்ளோம். மீனவர்கள் நலனுக்காக ரூ.10 ஆயிரம் கோடிக்கு அதிகமாக நிதி ஒதுக்கி உள்ளோம்.

    விவசாயிகளுக்கு விவசாய அட்டை வழங்குவதை போல மீனவர்களுக்கும் அட்டை வழங்கப்படும். மீனவர்களுக்கு வங்கியில் அளிக்கப்படும் கடன்களுக்கு 2 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை சலுகைகள் வழங்கப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உள்ளோம்.

    குமரி மாவட்டத்தில் பொன். ராதாகிருஷ்ணன் ரூ.40 ஆயிரம் கோடிக்கும் மேல் திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இந்திய நாட்டில் இன்னும் பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்த பொன். ராதாகிருஷ்ணன் இங்கு வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #bjp #parliamentelection #PiyushGoyal
    ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்குவதாக அறிவித்ததின் மூலம் காங்கிரஸ் கட்சி மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறது என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறியுள்ளார். #PiyushGoyal #congress #bjp

    கோவை:

    மத்திய மந்திரி பியூஸ் கோயல் கோவையில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அவரிடம், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்குவோம் என்று அறிவித்து உள்ளார்களே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து பியூஸ் கோயல் கூறியதாவது:-

    இந்தியாவில் ஏழை, எளிய மக்களுக்கு உணவுக்கு மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இந்த உதவிகளை காங்கிரஸ் பறித்து விட்டு ரூ.72 ஆயிரம் வழங்குமா? என்பதை தெளிவு படுத்த வேண்டும். மக்கள் ஒருபோதும் மானியம் வழங்குவதை நிறுத்துவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மக்களை காங்கிரஸ் கட்சி முட்டாளாக்கப் பார்க்கிறது. இது இந்திய மக்களிடம் எடுபடாது.


    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, ஆலோசனை கூட்டத்தில் பியூஸ் கோயல் பேசியதாவது:-

    மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சிகள் எந்த அளவுக்கான வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளனர் என்பதை தமிழக மக்கள் பார்த்து வருகின்றனர். எளிமையான தலைவனால் தான் அனைத்து தரப்பு மக்களின் நிலைமையை உணர முடியும். பிரதமர் மோடி மிகச் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர். எளிமையான குடும்பத்தில் இருந்து வந்ததால், தாய்மார்களின் கண்ணியத்தை காக்க கழிவறை கட்டும் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் செயல்படுத்தினார். எல்லா வீடுகளுக்கும் மின்சாரம், ஆரோக்கியமான காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த 6 மாதங்களில் தமிழகத்தில் மட்டும் 90 ஆயிரம் பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பலன் அடைந்துள்ளனர். மத்திய அரசின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுமானால் தமிழக வளர்ச்சி இரு மடங்காக உயரும் என்பதில் ஐயமில்லை.

    தீவிரவாதத்துக்கு எதிராக செயல்படக் கூடிய வலிமையான திறமையான தலைவர் தேவை. எதிரி நாட்டின் எல்லையை கடந்து தாக்கி பயங்கரவாதத்திற்கே பதிலடி கொடுத்த ஒப்பற்ற தலைவர் நரேந்திர மோடி மட்டும் தான். வேகமாக, வளமான, பொருளாதார வளம் பெற்ற நாடாக இந்த நாடு வளர்ந்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு கொடுத்து பிரதமர் மோடியின் கரத்தை நாம் வலிமையாக்க வேண்டும்.

    அதற்கான மெகா கூட்டணியை தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ளோம். 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி தோல்வியை தழுவுவதோடு, நாம் நாற்பதும் நாமதே என வெற்றி வாகை சூட வேண்டும். இந்தியா சூப்பர் பவராக மாற மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #PiyushGoyal #congress #bjp 

    ரெயில்வே தொடர்பான அனைத்து தகவல்களையும் அறிய ‘ரெயில் திரிஷ்டி டேஷ்போர்டு’ என்ற புதிய இணையதளத்தை ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் நேற்று தொடங்கி வைத்தார். #PiyushGoyal #RailDrishtiDashboard
    புதுடெல்லி:

    ரெயில்வே தொடர்பான அனைத்து தகவல்களையும் அறிய ‘ரெயில் திரிஷ்டி டேஷ்போர்டு’ என்ற புதிய இணையதளத்தை ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் நேற்று தொடங்கி வைத்தார்.

    இந்த இணையதளத்தை சாதாரண கம்ப்யூட்டர்கள், லேப்-டாப், மொபைல்போன், டேப்லட் என அனைத்து சாதனங்கள் மூலமாகவும் பயன் படுத்த முடியும். இதில், ரெயில்வேயின் வருமானம், வளர்ச்சி திட்டங்கள், பயணிகள் தெரிவித்த குறைகள், தீர்வுகள், பி.என்.ஆர். நிலவரம், விற்கப்பட்ட டிக்கெட் எண்ணிக்கை உள்ளிட்ட சேவைகளை எந்த இடத்தில் இருந்தும், எந்த நேரத்திலும் அறியலாம்.

    ஒரு குறிப்பிட்ட ரெயில் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். உணவு ‘ஆர்டர்’ செய்த பிறகு, ஐ.ஆர்.சி.டி.சி. சமையல் கூடங்களில் உணவு தயாராவது, பார்சல் போடப்படுவது ஆகியவற்றை நேரலையில் காணலாம்.

    ரெயில்வே துறையில், இது வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாக கருதப்படுகிறது. வெளிப்படை தன்மையையும், பொறுப்புடைமையையும் ஊக்குவிக்கும் வகையில், இந்த இணையதளத்தை தொடங்கி இருப்பதாக பியூஸ் கோயல் தெரிவித்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் மத்திய மந்திரி பியூஷ் கோயல், துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். #Tirupati #PiyushGoyal #ThambiDurai
    திருமலை:

    தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் மத்திய மந்திரி பியூஷ் கோயல், துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் இன்று காலை திருப்பதி வந்தனர்.

    அவர்கள் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தேவஸ்தானம் சார்பில் அவர்களுக்கு பட்டு வஸ்திரம், பிரசாதம் வழங்கப்பட்டது.

    பின்னர் கோவில் வளாகத்தை பியூஷ் கோயல் சுற்றி பார்வையிட்டார். தம்பிதுரை அவருக்கு இடங்களை சுட்டிகாட்டி விளக்கமளித்தார்.

    இதையடுத்து தம்பிதுரை அளித்த பேட்டியில்:- பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. , பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறுவதற்காக ஏழுமலையானை தரிசனம் செய்தோம் என்றார். #Tirupati #PiyushGoyal #ThambiDurai
    மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று சந்தித்து அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். #LSpoll #PiyushGoyal #DMDK
    சென்னை:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பாமக மற்றும் பா.ஜ.க ஆகியவை இடம் பெற்றுள்ளது. கூட்டணி தொகுதி பற்றி பேச மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், பொன். .ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதற்கிடையே, ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இன்று பிற்பகல் சென்னை வந்தார். அதிமுக தரப்பில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோருடன் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தினார். பிற்பகல் 2.20 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.



    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த, பாஜகவை சேர்ந்த ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று நேரில் சந்தித்தார். அப்போது, அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். இந்த சந்திப்பின்போது, பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்திரராஜன், தேமுதிக சார்பில் பிரேமலதா, சுதீஷ் உள்பட பலர் உடனிருந்தனர். 

    சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல், விஜயகாந்த் உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். இந்த சந்திப்பு விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரிக்க மட்டுமே நடைபெற்றது; கூட்டணி குறித்து பேசவில்லை என தெரிவித்துள்ளார். #LSpoll #PiyushGoyal #DMDK
    ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உடன்பாடு மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னையில் இன்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். #LSpoll #PiyushGoyal #AIADMKBJPalliance
    சென்னை:

    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.திமு.க.வுடன் கூட்டணி வைக்க பா.ஜனதா கட்சி கடும் முயற்சி செய்து வருகிறது. குறைந்தபட்சம் 10 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக உள்ளது.
     
    இதற்காக மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

    குறிப்பாக, ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கடந்த 14-ம் தேதி நடத்திய பேச்சுவார்த்தையில் இரு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும்,தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்காக பாஜக தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருவதாக தகவல் வெளியானது.

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்தவும் தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி செய்வதற்காகவும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன. ஆனால், அமித் ஷாவின் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.



    இந்நிலையில், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இன்று பிற்பகல் சென்னை வந்தார். அதிமுக தரப்பில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோருடன் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பிற்பகல் 2.20 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடக்கும் ஓட்டலை வந்தடைந்தனர்.

    இன்று நடைபெறும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு அளிக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை மற்றும் ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #LSpoll #PiyushGoyal #AIADMKBJPalliance 
    திவாகரனின் மகன் ஜெயானந்த் டெல்லியில் மத்திய மந்திரி பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினார். கூட்டணி தொடர்பாக இருவரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. #JeyanandhDhivakaran #PiyushGoyal
    சென்னை:

    ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. சசிகலா குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர்.

    சசிகலாவின் உறவினரான தினகரன் அ.ம.மு.க. என்ற பெயரில் கட்சி தொடங்கினார். சசிகலா சகோதரர் திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சி நடத்தி வருகிறார். அவர் தினகரனை விமர்சித்து பேட்டி அளித்து வந்தார். இதனால் அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்ப்பார் என்றும் கூறப்பட்டது.

    இந்த நிலையில் திவாகரனின் மகன் ஜெயானந்த் டெல்லியில் மத்திய மந்திரி பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினார். இவர்தான் பாராளுமன்ற தேர்தலுக்கான பா.ஜனதா பொறுப்பாளராக உள்ளார். கூட்டணி தொடர்பாக இருவரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த சந்திப்புக்குப்பின் ஜெயானந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கூட்டணி குறித்து மத்திய மந்திரி பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினேன். அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி அமைவது 90 சதவீதம் உறுதி ஆகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

    தமிழகத்தில் மீத்தேன் வாயு திட்டம் உள்ளிட்ட விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் நிறைவேற்றக்கூடாது என்று அவரிடம் எடுத்துக் கூறினேன். தமிழக விவசாயிகள் பாதிப்பு அடையும் எந்த திட்டமும் நிறைவேற்றப்படாது என்று வாக்குறுதி அளித்தார்.

    இவ்வாறு ஜெயானந்த் கூறினார்.

    இதற்கிடையே அ.தி.மு.க. அணிகளை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாகவும் மத்திய மந்திரி பியூஷ் கோயலுடன் ஜெயானந்த் பேசியதாக தெரிய வருகிறது.

    இதுபற்றி ஜெயானந்திடம் கேட்டபோது, “அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி தமிழகத்தில் அமையும். ஜெயலலிதா இருந்தபோது இருந்ததைப் போன்ற வலிமையான ஒருங்கிணைந்த அ.தி.மு.க. மீண்டும் உருவாகும். அதில் தினகரனை தவிர்த்து அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த அனைவரும் மீண்டும் கட்சியில் இணைவார்கள். அ.தி.மு.க.வுடன் முறைப்படி இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அது நடைபெறும் என்றார். #JeyanandhDhivakaran #PiyushGoyal

    பாராளுமன்றத்தில் நாளை இடைக்கால பட்ஜெட்டை தற்போது நிதித்துறையை கூடுதல் பொறுப்பாக வைத்திருக்கும் நிதி மந்திரி பியூஸ் கோயல் தாக்கல் செய்கிறார். #Budget #PiyushGoyal
    புதுடெல்லி:

    முழு பட்ஜெட்டா, இடைக்கால பட்ஜெட்டா?

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது.

    இந்த நிலையில் மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யுமா, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யுமா என்ற கேள்வி எழுந்தது.

    மத்திய அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடும் என ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன.

    உடனே காங்கிரஸ் கட்சி போர்க்கொடி உயர்த்தியது. மத்திய அரசு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்தால், அதை எதிர்ப்போம் என காங்கிரஸ் கட்சி கூறியது. அது மட்டும் இன்றி இதில் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்துவோம் எனவும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது.

    மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு ஏற்கனவே 5 முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டது.

    இந்த நிலையில், பாராளுமன்றத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படக்கூடும் என வெளியான ஊடக தகவல்களை மத்திய அரசு நேற்று மறுத்து விட்டது.



    இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் நேற்று கூறும்போது, ‘‘ பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட் 2019-20 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்தான்’’ என்று தெரிவித்தன.

    நிதி மந்திரி பொறுப்பை கவனித்து வந்த அருண் ஜெட்லி, உடல்நலக்குறைவால் அமெரிக்கா சென்று, நியூயார்க் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு, தற்போது அங்கு ஓய்வில் இருந்து வருகிறார்.

    எனவே தற்போது நிதித்துறையை கூடுதல் பொறுப்பாக வைத்திருக்கும் பியூஸ் கோயல் நாளை (பிப்ரவரி 1-ந் தேதி) பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    முழு பட்ஜெட் என்றால் அரசு பெரிய அளவில் தனது கொள்கை முடிவுகளை அறிவிக்க முடியும், நலத்திட்டங்களை வெளியிட இயலும். உத்தேச வரவுகளை பதிவு செய்ய முடியும். செலவினங்களை கணித்துக்கூற இயலும்.

    இடைக்கால பட்ஜெட்டில் அதற்கு வாய்ப்பு இல்லை.

    தேர்தலுக்கு பிறகு அமையவுள்ள புதிய அரசுதான் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். #Budget #PiyushGoyal
    ×