search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seat sharing"

    உத்தரப்பிரதேசத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி வைத்துள்ள சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளிலும் போட்டியிட முடிவாகி இன்று தொகுதி பங்கீடு செய்துள்ளன. #ParliamentElection #AkileshYadav #Mayawati
    லக்னோ:

    உத்தரப்பிரதேசத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இருவரும் கூட்டாக வெளியிட்டனர்.
     
    இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு இடமில்லை. பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் தலா 38 இடங்களில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது.



    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதி பங்கீடு குறித்த விவரங்களை இரு கட்சிகளும் இன்று வெளியிட்டுள்ளன.

    அதன்படி, கைரானா, மொராதாபாத், லக்னோ, பெரெய்லி, வாரணாசி உள்ளிட்ட 37 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சியும், சஹாரன்புர், அலிகார், ஆக்ரா, பதேபுர் சிக்ரி, பிஜ்னோர் உள்ளிட்ட 38 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சியும் போட்டியிடுகின்றன. #ParliamentElection #AkileshYadav #Mayawati
    திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதி பங்கீடு குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியிடப்படும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். #KSAlagiri #DMK #Congress
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தமிழகத்தில் நேற்று முதல் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளையும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளையும் அ.தி.மு.க. ஒதுக்கீடு செய்துள்ளது.

    இதேபோல் பிரதான எதிர்க்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து தமிழகத்திலும், டெல்லியிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, திமுக எம்பி கனிமொழி நேற்று சந்தித்து பேசினார். அப்போது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கிய, தொகுதி பங்கீடு மற்றும் தொகுதிகள் குறித்த செயல் திட்டம் பற்றி விளக்கி கூறினார். இந்த பேச்சுவார்த்தையின்போது, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் என 10 தொகுதிகள் வழங்கப்பட இருக்கிறது.

    முன்னதாக, தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, அமைப்பு செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினர்.



    இந்நிலையில், டெல்லியில் இருந்து இன்று சென்னை திரும்பிய கே.எஸ்.அழகிரி, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், இன்று மாலை 6 மணிக்கு தொகுதிகள் பங்கீடு குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

    மேலும், அதிமுக-பாமக- பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் விமர்சனம் செய்தார். #KSAlagiri #DMK #Congress
    ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உடன்பாடு மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னையில் இன்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். #LSpoll #PiyushGoyal #AIADMKBJPalliance
    சென்னை:

    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.திமு.க.வுடன் கூட்டணி வைக்க பா.ஜனதா கட்சி கடும் முயற்சி செய்து வருகிறது. குறைந்தபட்சம் 10 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக உள்ளது.
     
    இதற்காக மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

    குறிப்பாக, ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கடந்த 14-ம் தேதி நடத்திய பேச்சுவார்த்தையில் இரு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும்,தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்காக பாஜக தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருவதாக தகவல் வெளியானது.

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்தவும் தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி செய்வதற்காகவும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன. ஆனால், அமித் ஷாவின் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.



    இந்நிலையில், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இன்று பிற்பகல் சென்னை வந்தார். அதிமுக தரப்பில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோருடன் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பிற்பகல் 2.20 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடக்கும் ஓட்டலை வந்தடைந்தனர்.

    இன்று நடைபெறும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு அளிக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை மற்றும் ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #LSpoll #PiyushGoyal #AIADMKBJPalliance 
    பாராளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 17 தொகுதிகளிலும் லோக் ஜனசக்தி கட்சி 6 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. #NDAseatsharing #Biharseatsharing
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மாநில வாரியாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்வதிலும் வேட்பாளர் தேர்விலும் பா.ஜ.க. தலைமை தீவிரம் காட்டி வருகிறது.

    இந்நிலையில், பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார், லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோருடன் இன்று டெல்லியில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா தொகுதி உடன்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார்.



    இந்த ஆலோசனைக்கு பின்னர் பீகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 17 தொகுதிகளிலும் லோக் ஜனசக்தி கட்சி 6 தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று உடன்படிக்கை செய்யப்பட்டது.

    மேலும், பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரு இடம் அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அநேகமாக, மேல்சபை தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #NDAseatsharing #Biharseatsharing
    ×