என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  பாராளுமன்ற தேர்தல் - உ.பி.யில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தொகுதி பங்கீடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரப்பிரதேசத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி வைத்துள்ள சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளிலும் போட்டியிட முடிவாகி இன்று தொகுதி பங்கீடு செய்துள்ளன. #ParliamentElection #AkileshYadav #Mayawati
  லக்னோ:

  உத்தரப்பிரதேசத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இருவரும் கூட்டாக வெளியிட்டனர்.
   
  இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு இடமில்லை. பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் தலா 38 இடங்களில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதி பங்கீடு குறித்த விவரங்களை இரு கட்சிகளும் இன்று வெளியிட்டுள்ளன.

  அதன்படி, கைரானா, மொராதாபாத், லக்னோ, பெரெய்லி, வாரணாசி உள்ளிட்ட 37 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சியும், சஹாரன்புர், அலிகார், ஆக்ரா, பதேபுர் சிக்ரி, பிஜ்னோர் உள்ளிட்ட 38 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சியும் போட்டியிடுகின்றன. #ParliamentElection #AkileshYadav #Mayawati
  Next Story
  ×