search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக - காங். தொகுதி பங்கீடு இன்று மாலை அறிவிப்பு- சென்னை திரும்பிய கே.எஸ்.அழகிரி தகவல்
    X

    திமுக - காங். தொகுதி பங்கீடு இன்று மாலை அறிவிப்பு- சென்னை திரும்பிய கே.எஸ்.அழகிரி தகவல்

    திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதி பங்கீடு குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியிடப்படும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். #KSAlagiri #DMK #Congress
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தமிழகத்தில் நேற்று முதல் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளையும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளையும் அ.தி.மு.க. ஒதுக்கீடு செய்துள்ளது.

    இதேபோல் பிரதான எதிர்க்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து தமிழகத்திலும், டெல்லியிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, திமுக எம்பி கனிமொழி நேற்று சந்தித்து பேசினார். அப்போது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கிய, தொகுதி பங்கீடு மற்றும் தொகுதிகள் குறித்த செயல் திட்டம் பற்றி விளக்கி கூறினார். இந்த பேச்சுவார்த்தையின்போது, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் என 10 தொகுதிகள் வழங்கப்பட இருக்கிறது.

    முன்னதாக, தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, அமைப்பு செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினர்.



    இந்நிலையில், டெல்லியில் இருந்து இன்று சென்னை திரும்பிய கே.எஸ்.அழகிரி, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், இன்று மாலை 6 மணிக்கு தொகுதிகள் பங்கீடு குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

    மேலும், அதிமுக-பாமக- பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் விமர்சனம் செய்தார். #KSAlagiri #DMK #Congress
    Next Story
    ×