search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Piyush Goyal"

    • பிரதமர் மோடிக்கு நியமன எம்.பி., பி.டி.உஷா நன்றி தெரிவித்தார்.
    • ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மக்கள் மீது பிரதமர் அக்கறை காட்டுவதாக பேச்சு.

    பாராளுமன்ற மாநிலங்களையில் பேசிய மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறியுள்ளதாவது: நாட்டில் தற்போது ஒ புதிய பாரம்பரியம் நிறுவப்படுகிறது, சாதாரண பின்னணியில் பிறந்து, சாதாரண வாழ்க்கை நடத்துவோர் இப்போது உயர் பதவிகளில் உள்ளனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒரு ஆசிரியர், ஒடிசாவின் பழங்குடியினர் பகுதியில் ஒரு சிறிய பள்ளியில் பணியாற்றிய அவர் இப்போது குடியரசுத் தலைவர்.

    மாநிலங்களவைத் தலைவர் ஒரு விவசாயியின் மகன், தற்போது எங்களது குடியரசு துணைத் தலைவர். நமது பிரதமர் டீ விற்பவர் வீட்டில் பிறந்தவர், சிறுவயதில் ரயில் நிலையத்தில் டீ விற்றார், அதைச் செய்து கொண்டே படித்தார். அவர் தனது வாழ்நாளின் 5 தசாப்தங்களுக்கும் மேலாக சமூகம் மற்றும் இந்த தேசத்தின் சேவைக்காக பாடுபட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார். 


    முன்னதாக நியமன எம்.பி. பி.டி.உஷா மாநிலங்களவையில் பேசுகையில் கூறியுள்ளதாவது: ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த மக்கள் மீதான அக்கறைக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது குடியரசுத் தலைவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பது தேசத்துக்குக் கிடைத்த பெருமை. பழங்குடியின சமூகத்தினருக்கு இது மிகப்பெரிய கவுரவம். ஒரு விவசாயியின் மகன் இப்போது துணை ஜனாதிபதி, இது ஒரு புதிய இந்தியா. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்திய பருத்தி இழைகளின் தரம் மிக முக்கியமானது.
    • நல்ல தரமான பருத்தி விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவது அவசியமானது.

    டெல்லியில் நடைபெற்ற , ஜவுளி ஆலோசனைக் குழுவுடனான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று பேசிய மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளதாவது:

    இந்திய பருத்திக்கு முத்திரை வழங்கப்படுவதற்கான சிறந்த தருணம் இது. இந்திய பருத்தி கஸ்தூரிக்கு முத்திரை மற்றும் சான்றளிக்கும் வகையில் தொழில்துறை முன்னணியில் இருந்து செயல்பட வேண்டியது அவசியம். கஸ்தூரி பிராண்டட் தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து ஈர்ப்பை உருவாக்க வேண்டும். 


    இந்திய பருத்தி இழைகளின் தரம் மிக முக்கியமானது. இந்திய தர நிர்ணய அமைப்பு சட்டம் 2016 இன் கீழ் பருத்தியின் தரத்தை தொழில்நுட்ப அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும். கஸ்தூரி பருத்தியின் தரம், இருப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளில் ஒருங்கிணந்து பணியாற்றும் தொழில்துறை மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அமைப்புகளின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.

    பருத்தி உற்பத்தியை அதிகரிக்க, நல்ல தரமான பருத்தி விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவது காலத்தின் தேவை. போர்க்கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களிலிருந்து சில உறுதியான நடவடிக்கைகள் தேவை. பருத்தி உற்பத்தித் திறனை அதிகரிக்க புதுமையான வேளாண் தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஜவுளி தொழில்நுட்ப காப்புரிமைகளுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
    • நவீன நெசவு இயந்திரங்கள், ஆய்வகங்கள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கலாம்.

    டெல்லியில் நடைபெற்ற ஜவுளி ஆராய்ச்சி சங்கங்களின் ஆய்வு கூட்டத்தில் நித்தி ஆயோக் அமைப்பின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர் வி கே. சரஸ்வத், உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு ஜவுளி தொழில்நுட்ப சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் சிறப்புரையாற்றிய மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளதாவது:

    ஜவுளி தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் இளம் விஞ்ஞானிகள் ஊக்குவிக்கப்பட வேண்டியது அவசியம். உலக தரத்திலான நவீன நெசவு இயந்திரங்கள், நவீன ஆய்வகங்கள் உள்ளிட்டவை குறித்து ஜவுளி ஆராய்ச்சி சங்கங்கள் தங்களது ஆலோசனைகளை அரசுக்கு வழங்கலாம்.

    ஆய்வகங்களை நவீன மயமாக்குவதில் இந்திய தர நிர்ணய அமைப்பு, ஜவுளி ஆராய்ச்சி சங்கங்களுக்கு உதவ வேண்டும். ஜவுளி தொழில்நுட்பம் தொடர்பான காப்புரிமைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து பரிசீலித்து ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஒவ்வொரு மாதமும் ரேசன் மூலம் விநியோக்க 90 லட்சம் டன் உணவு தானியங்கள் தேவை.
    • உத்தரபிரதேசம், பீகாரில் உணவு தானிய உற்பத்தி குறையக்கூடும் என்ற அச்சம் உள்ளது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் ஐதராபாத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய உணவு அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளதாவது:

    உலகம் முழுவதும் இன்று பொருளாதார நெருக்கடி உள்ளது. இந்த நிலையில் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் உணவு தானியங்களின் உற்பத்தி குறையக்கூடும் என்ற அச்சம் இருக்கிறது. சரியான நேரத்தில் மழை பெய்யாத நிலையில் இன்னும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.

    ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் 80 கோடி மக்கள் அரிசி, கோதுமையை பெற்று வருகிறார்கள். அந்தியோதயா திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 35 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது. பிரதமரின் ஏழைகளுக்கான இலவச உணவு பொருள் திட்டத்தின் கீழ் கூடுதலாக 5 கிலோ வழங்கப்படுகிறது.

    கூடுதல் விநியோகத்திற்காக ஒவ்வொரு மாதமும் 90 லட்சம் டன் உணவு தானியங்கள் தேவை. ஒரு வருடத்தில் தேவை 108 லட்சம் டன்களாகிறது. ஏழை எளிய மக்கள் உணவு பொருட்களை இலவசமாகப் பெறுகிறார்கள். அரிசியின் விலை சீராக உள்ளது, எனவே உணவு தானிய ஏற்றுமதியை அரசு நிறுத்தவில்லை. செப்டம்பர் வரை, முதல் ஆறு மாதங்களில் ஏற்றுமதி சுமார் 17 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும்.
    • தரமற்ற அரிசியை தமிழக மக்களுக்கு திமுக அரசு வழங்குகிறது.

    மத்திய அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளதாவது:

    பாஜக குடும்ப ஆட்சி செய்யும் கட்சி அல்ல, தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும். மத்திய அரசு தரமான அரிசியை அளித்தாலும், தரமற்ற அரிசியை தமிழக மக்களுக்கு திமுக அரசு வழங்குகிறது.

    திமுகவினர் பிரதமர் மோடி குறித்து தரம் குறைந்த வார்த்தைகளில் விமர்சிக்கின்றனர். மத்திய அரசின் திட்டங்களால் தமிழக மக்கள் பயனடைந்தாலும் இங்குள்ள அரசு அதனை மறைக்க பார்க்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்

    • விவசாயிகள், மீனவர்கள் வாழ்க்கையை மேம்படுத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.
    • உற்பத்தி திட்டம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைய வேண்டும்.

    டெல்லியில் நடைபெற்ற உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு மற்றும் விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளதாவது:

    புதுமைகளை உருவாக்காத எந்த சமூகமும் தேக்கமடைகிறது என்று பிரதமர் மோடி ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆற்றிய சுதந்திர தின உரையில் தெரிவித்திருந்தார். 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக உருவாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றும்.

    உற்பத்தி திட்டத்துடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இணைந்தால், உலகிற்கு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பம் இரண்டையும் வழங்கும் நாடாக இந்தியா மாறும். சவால் மிகுந்த கொரோனா காலத்தில் நாட்டின் அறிவியல் சமூகத்தின் முயற்சிகளுக்கு தொழில்நுட்பத் துறையின் பணி பெரும் உதவிகரமாக இருந்தது.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள், மீனவர்கள் வாழ்க்கையை மேம்படுத்துவது குறித்து தொழில்நுட்பத்துறை ஆராய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இது இந்தியாவை வளர்ந்த நாடுகளின் நிலைக்கு அழைத்துச் செல்கிறது.
    • தூய்மையான எரிசக்திக்கு இந்தியாவும் விரைந்து மாறி வருகிறது.

    கலிஃபோர்னியா:

    அமெரிக்காவில் அரசு முறைப்பயணம் மேற்கொண்ட மத்திய தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் தனது கடைசி நிகழ்ச்சியாக தெற்கு கலிஃபோர்னியா நகரின் வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடலில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியாவில் நிகழும் மாற்றத்திற்கான பணிகள் உலகப் பொருளாதார வரிசையில் நாட்டை 5வது இடத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட அடிப்படை மாற்றங்கள் மற்றும் கட்டமைப்பு மாற்றங்களின் தாக்கத்தால், 2047-ல் இந்தியா 35 முதல் 45 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார நாடாக இருக்கும் என்ற இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.

    இது இந்தியாவை வளர்ந்த நாடுகளின் நிலைக்கு அழைத்துச் செல்கிறது. உலகெங்கிலும் உள்ள புலம் பெயர்ந்த இந்தியர்களும் இணைந்து செயல்படும் போது இந்தியா விரைவில் வளர்ந்த நாடாகும். இந்தியா இன்று வாய்ப்புகளின் பூமியாகவும், அமெரிக்காவின் வணிக சமூகத்திற்கு சாத்தியமான சந்தையாகவும் உள்ளது. 


    மக்கள் தொகையின் பங்கும், ஆர்வமுள்ள இளைஞர்களும் இந்தியாவின் வளர்ச்சிக்குப் பெரிய வாய்ப்பை வழங்கும் கூடுதல் ஆதாயமாக உள்ளன. தூய்மையான எரிசக்திக்கு இந்தியாவும் விரைந்து மாறி வருகிறது. 2030-க்குள் 500 ஜிகாவாட் பசுமை எரிசக்தித் திறனை அடைய நாங்கள் விரும்புகிறோம்.

    உலகெங்கிலும் உள்ள இந்திய வம்சாவழியினர் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு முன்னுரிமை அளித்தால், கோடிக்கணக்கான இந்திய கைவினை கலைஞர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பொருளாதார, ராஜ்ஜிய ரீதியிலான உறவுகளை வலுப்படுத்த இந்தியா-அமெரிக்கா விருப்பம்.
    • இந்தியா வளர்ந்த நாடாக, நட்பு நாடுகளுடனான தொடர்புகள் முக்கிய பங்காற்றும்.

    லாஸ் ஏஞ்செல்ஸ்:

    அமெரிக்காவில் அரசு முறைப் பயணம் மேற் கொண்டுள்ள மத்திய தொழில், வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல், லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் அமெரிக்க-இந்திய உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியுள்ளதாவது: இந்தியாவும், அமெரிக்கா இடையேயான பொருளாதார மற்றும் ராஜ்ஜிய ரீதியிலான உறவுகளை வலுப்படுத்த விரும்புகின்றன. இந்தியா தற்போது பல்வேறு வெளிநாடுகளுடனான உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுகிறது.

    குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா போன்ற நாடுகளோடு இணைந்து இந்தியா செயலாற்றுவது புதிய வரலாற்றிற்கான பாதையை உருவாக்கும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா ஒரு வலிமையான, வளர்ந்த நாடாக உருப்பெற்றிருக்கும் என்ற நமது பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு இது போன்ற நட்பு நாடுகளுடனான தொடர்புகள் முக்கிய பங்காற்றும்.

    இந்தோ- பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பின் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் பயனுள்ள விவாதங்கள் நடைபெற்றன. விவாதத்தின் அனைத்து பிரிவுகளிலும் இந்தியா கலந்து கொண்டது. விநியோக சங்கிலி வரி மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் தூய்மையான எரிசக்தி ஆகிய நான்கு துறை வெளிப்பாடுகளில் திருப்தி தெரிவித்து இந்தியா அவற்றில் இணைந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மந்திரி பியூஸ் கோயல் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
    • உலகிலேயே 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

    சான் பிரான்சிஸ்கோ :

    மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருடன் அவர் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த நிதி ஆண்டில் இந்தியாவின் சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி 675 பில்லியன் டாலரை எட்டியது. 2030-ம் ஆண்டுக்குள், இதை 2 டிரில்லியன் டாலராக (ரூ.160 லட்சம் கோடி) உயர்த்த விரும்புகிறோம்.

    உலகிலேயே 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. நாட்டின் சுதந்திர தின நூற்றாண்டு கொண்டாடுவதற்குள் இந்திய பொருளாதாரம் 30 டிரில்லியன் டாலராக (ரூ.2,400 லட்சம் கோடி) உயரும் என்று எதிர்பார்க்கிறோம்.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள சில அதிரடி திட்டங்கள் நன்றாக செயல்பட்டால், பொருளாதாரம் 45 டிரில்லியன் டாலர் வரை (ரூ.3 ஆயிரத்து 600 லட்சம் கோடி) உயரக்கூடும்.

    கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசு போட்ட அடித்தளத்தால் பொருளாதாரம் வேகமாக உயரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்று உலக நாடுகளின் நம்பிக்கையை இந்தியா பெற்றுள்ளது.
    • வர்த்தகம் செய்வதில் வெளிப்படைத்தன்மை மற்றும் எளிமைத் தன்மை அவசியம்.

    தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற வியாபாரிகள் சம்மேளன கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல், பேசியதாவது:

    இந்தியாவை இப்போது பொருளாதார வளர்ச்சியின் எந்திரமாக உலகம் பார்க்கிறது. 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர், இந்தியப் பொருளாதாரம் பலவீனமானதாகக் கருதப்பட்டது. இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதில் முதலீட்டாளர்களுக்கு சந்தேகம் இருந்தது.

    இன்று உலக நாடுகளின் நம்பிக்கையை இந்தியா பெற்றுள்ளது. இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட வளர்ந்த நாடுகள் மிகவும் ஆர்வமாக உள்ளன. வெளிப்படைத்தன்மை மற்றும் எளிதாக வணிகம் செய்ய வேண்டியதன் அவசியம்.

    வணிகங்களின் இணக்கச் சுமையைக் குறைக்க அரசுடன் இணைந்து வர்த்தகர்கள் பணியாற்று வேண்டும். நெறிமுறை வர்த்தக நடைமுறைகளை அவர்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • உற்பத்தித் திறன் குறித்த ஆராய்ச்சியை அதிகரிக்க தனியார் துறை பங்களிக்க வேண்டும்.
    • நல்ல தரமான பருத்தி உற்பத்தியில் உலக அளவில் நாம் முத்திரை பதிக்க வேண்டும்.

    தலைநகர் டெல்லியில் உள்ள வணிக பவனில், பருத்தி உற்பத்தித் திறனை அதிகரித்தல், இந்தியப் பருத்தியின் முத்திரையை மேம்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

    மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், மத்திய ஜவுளித்துறை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல், மத்திய ஜவுளி மற்றும் ரயில்வே இணை மந்திரி தர்ஷனா ஜர்தோஷ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். 


    நிகழ்ச்சியில் உரையாற்றிய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளதாவது:

    பருத்தி உற்பத்தியில் உலகத் தரத்தை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க இந்தியாவில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

    உற்பத்தித்திறன், விவசாயிகளின் கல்வி மற்றும் வர்த்தகம் ஆகியவற்றில் ஆராய்ச்சியை அதிகரிக்க தனியார் துறை பங்களிக்க வேண்டும். தொழில்துறையினரின் சமமான பங்களிப்பின் மூலம் நல்ல தரமான பருத்தி உற்பத்தியில் உலக அளவில் நாம் முத்திரை பதிக்க வேண்டும்.

    நமது பருத்தி விவசாயிகளுக்கு சரியான விதைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், நவீன தொழில்நுட்பம் மற்றும் முற்போக்கான விவசாய முறைகளைப் பின்பற்ற விவசாயிகளை ஊக்குவிப்பதன் மூலமும் மகசூல் மற்றும் லாப வரம்புகளை அதிகரிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் பேசிய மத்திய விவசாயிகள் நலத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், பருத்தி உற்பத்தியின் வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறன் நாட்டின் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்றார். உற்பத்தித்திறனை அதிகரிக்க குறுகிய கால மற்றும் நீண்ட கால உத்திகள் வகுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    • மகாராஷ்டிராவில் இருந்து எம்.பி.யாக பியூஷ் கோயல் தேர்வு செய்யப்பட்டார்.
    • வர்த்தக, தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் பாராளுமன்ற மேலவை தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    நடப்பு ஆண்டு ஏப்ரலில் பியூஷ் கோயலின் எம்.பி.க்கான பதவி காலம் நிறைவடைந்தது. இதன்பின் கடந்த 8-ம்தேதி கோயல் உள்ளிட்ட மத்திய மந்திரிகள் 27 பேர் புதிதாக ராஜ்யசபை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். மகாராஷ்டிராவில் இருந்து எம்.பி.யாக கோயல் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், பாராளுமன்ற மேலவையின் தலைவராக மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகம், ஜவுளி துறைக்கான மந்திரி பியூஷ் கோயல் மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    அவரை பிரதமர் நரேந்திர மோடி ராஜ்யசபைக்கான விதிகளின்படி நியமனம் செய்துள்ளார். இதுபற்றி ராஜ்யசபை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    ×