search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்க வணிக சமூகத்திற்கான சந்தையாக இந்தியா உள்ளது- மத்திய மந்திரி பியூஷ் கோயல்
    X

    பியூஷ் கோயல்

    அமெரிக்க வணிக சமூகத்திற்கான சந்தையாக இந்தியா உள்ளது- மத்திய மந்திரி பியூஷ் கோயல்

    • இது இந்தியாவை வளர்ந்த நாடுகளின் நிலைக்கு அழைத்துச் செல்கிறது.
    • தூய்மையான எரிசக்திக்கு இந்தியாவும் விரைந்து மாறி வருகிறது.

    கலிஃபோர்னியா:

    அமெரிக்காவில் அரசு முறைப்பயணம் மேற்கொண்ட மத்திய தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் தனது கடைசி நிகழ்ச்சியாக தெற்கு கலிஃபோர்னியா நகரின் வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடலில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியாவில் நிகழும் மாற்றத்திற்கான பணிகள் உலகப் பொருளாதார வரிசையில் நாட்டை 5வது இடத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட அடிப்படை மாற்றங்கள் மற்றும் கட்டமைப்பு மாற்றங்களின் தாக்கத்தால், 2047-ல் இந்தியா 35 முதல் 45 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார நாடாக இருக்கும் என்ற இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.

    இது இந்தியாவை வளர்ந்த நாடுகளின் நிலைக்கு அழைத்துச் செல்கிறது. உலகெங்கிலும் உள்ள புலம் பெயர்ந்த இந்தியர்களும் இணைந்து செயல்படும் போது இந்தியா விரைவில் வளர்ந்த நாடாகும். இந்தியா இன்று வாய்ப்புகளின் பூமியாகவும், அமெரிக்காவின் வணிக சமூகத்திற்கு சாத்தியமான சந்தையாகவும் உள்ளது.


    மக்கள் தொகையின் பங்கும், ஆர்வமுள்ள இளைஞர்களும் இந்தியாவின் வளர்ச்சிக்குப் பெரிய வாய்ப்பை வழங்கும் கூடுதல் ஆதாயமாக உள்ளன. தூய்மையான எரிசக்திக்கு இந்தியாவும் விரைந்து மாறி வருகிறது. 2030-க்குள் 500 ஜிகாவாட் பசுமை எரிசக்தித் திறனை அடைய நாங்கள் விரும்புகிறோம்.

    உலகெங்கிலும் உள்ள இந்திய வம்சாவழியினர் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு முன்னுரிமை அளித்தால், கோடிக்கணக்கான இந்திய கைவினை கலைஞர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×