என் மலர்
நீங்கள் தேடியது "interim budget"
- வரும் 25-ம் தேதிக்குள் 10 முதல்வர் படைப்பகங்கள் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட உள்ளது.
- எடப்பாடி பழனிசாமி அரிச்சந்திரனுக்கு அடுத்த வீட்டில் குடியிருந்தவர்.
போரூர்:
சென்னை அசோக் நகரில் மேம்படுத்தப்பட்டு வரும் முதல்வர் படைப்பகத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சி சார்பில் 10 இடங்களிலும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 25 இடங்களிலும் முதல்வர் படைப்பகம் அமைக்கப்பட்டு வருகிறது. வரும் 25-ம் தேதிக்குள் 10 முதல்வர் படைப்பகங்கள் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட உள்ளது. சென்னை அசோக் நகரில் ரூ.15 கோடி அளவில் முதல்வர் படைப்பகம் உருவாக்கப்பட்டு வருகிறது. வருகிற 25-ந்தேதிக்குள் இது மாணவர்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்.
கேள்வி:- இடைக்கால பட்ஜெட்டில் இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக பெரிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாமா?
பதில்:- எதிர்க்கட்சிகள் அரண்டு போகும் அளவிற்கு நிறைய அறிவிப்புகள் இடம்பெறும்.
கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்றும், தி.மு.க. கூட்டணி வலுவான கூட்டணி இல்லை என்றும் டாக்டர் அன்புமணி கூறியுள்ளாரே?
பதில்:- உடைந்த கட்சியின் ஒரு பாகமாக இருக்கின்ற அன்புமணி பேசுவதற்கெல்லாம் பதில் சொன்னால் சரியாக இருக்காது.
கேள்வி:- 7.5 சதவீதம் என்பது நாங்கள் கொண்டு வந்தது என்று எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறாரே?
பதில்:- எடப்பாடி பழனிசாமி அரிச்சந்திரனுக்கு அடுத்த வீட்டில் குடியிருந்தவர். அவர் வாயில் இருந்து உண்மையை தவிர வேறு எதுவுமே வராது. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான் எடப்பாடி பழனிசாமி. அவருடைய கட்சியில் இருந்து இப்போது வெளியேறி இருக்கின்ற செங்கோட்டையன், கு.ப.கிருஷ்ணன் போன்றவர்களிடம் கேட்டால் அவரது வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறும்.
கேள்வி:- த.வெ.க. சார்பில் கருத்து கேட்க சென்றவர்கள் தாக்கப்பட்டு உள்ளார்களே?
பதில்:- அங்கு த.வெ.க.வினருக்கும், பொதுமக்களுக்கும் தான் சண்டை. பொதுமக்கள் தாக்கப்பட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உண்மை நிலையை களத்துக்கு சென்று விசாரியுங்கள். இது பனையூரில் நடப்பது போன்ற ஒரு மோதல் தான். உண்மை நிலையை விசாரித்து மக்களுக்கு சொல்லுங்கள். இதுபோன்ற செயல்களை வைத்து தங்கள் இயக்கத்துக்கு கலர் மெருகேற்ற துடிக்கின்றார்கள். அதற்கு நாமும் சேர்ந்து விளம்பரம் கொடுக்க தயாராக இல்லை.
கேள்வி:- சட்டசபை தேர்தலில் சென்னையில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
பதில்:- சென்னையில் தி.மு.க.வின் இரு வண்ண கொடிதான் பட்டொளி வீசி பறக்கும். சூரியன் உதிக்கின்ற இடம் கிழக்கு. உதயசூரியனை சின்னமாக கொண்டிருக்கின்ற இந்த இயக்கம்தான் சுடரொளி வீசி பறக்கும். செயின்ட் ஜார்ஜ் கோட்டை எந்நாளும் எங்கள் முதல்வர் வசம் இருக்கும். அதை எந்த சக்தியாலும் தடுக்க முடி யாது.
கேள்வி:- சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. தான் வெற்றி பெறுமா?
பதில்:- 22 தொகுதிகளிலும் முதலமைச்சரின் வெற்றிக்கொடிதான் பறக்கும்.
கேள்வி:- பா.ம.க.வின் பிரிவினைக்கு காரணம் தி.மு.க. தான் என்று கூறுகிறார்களே?
பதில்:- அன்புமணியால் தனது அப்பாவையே சரியாக கவனித்துக் கொள்ள முடியவில்லை. அவர் ஒரு கட்சி வேறு நடத்திக்கொண்டிருக்கிறார். டாக்டர் ராமதாஸ் கதறிக்கொண்டு இருக்கிறார். டாக்டர் ராமதாசை பார்ப்பதற்கே பாவமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர்.
- ஆளும் கட்சியான தி.மு.க. இந்த இடைக்கால பட்ஜெட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மக்களை கவரும் அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளது.
சென்னை:
தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. முதல் நாளான 20-ந்தேதி கவர்னர் உரை நிகழ்ச்சி நடைபெற்றது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர்.
அவர்களுக்கு கடந்த 24-ந்தேதி பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதைத்தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் சட்டசபை அலுவல்கள் தள்ளிவைக்கப்பட்டன.
தி.மு.க. அரசின் பதவிக்காலம் முடிந்து சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. எனவே, இந்த பட்ஜெட், இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும்.
தேர்தலை கருத்தில் கொண்டு ஆளும் கட்சியான தி.மு.க. இந்த இடைக்கால பட்ஜெட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மக்களை கவரும் அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளது.
எனவே இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 13 அல்லது 14-ந்தேதியன்று தாக்கல் செய்யலாமா? என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இல்லாதபட்சத்தில் பிப்ரவரி 3-ம் வாரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து 4 நாட்கள் அவையை நடத்தி முடிக்கலாமா? என்றும் ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- கடந்த 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
- கூட்டம் தொடங்கியதும் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந்தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அதன் பிறகு பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இன்று காலை பாராளுமன்றம் கூடியது. கூட்டம் தொடங்கியதும் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் பொதுத்தேர்வு மற்றும் நுழைவு தேர்வுகளில் முறைகேடு செய்வோருக்கு ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் இன்று தாக்கல் செய்தார்.
நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடி நடைபெறுவதை தடுப்பதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நுழைவுத் தேர்வு மற்றும் பொதுத் தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும். மேலும் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் இந்த மசோதாவில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் மோசடி செய்தாலும் 10 ஆண்டுகள் தண்டனை வழங்கப்படும் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் என தெரிகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானால் மாதிரி நன்னடத்தை விதிகள் அமலுக்கு வரும். இதனால் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் மீது விவாதம் நடத்துவதற்காக பாராளுமன்றம் இன்று காலை கூடியது. காலை 11 மணிக்கு பாராளுமன்ற இரு அவைகளும் கூடியதும், எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து 12 மணி வரை மக்களவையும், 2 மணி வரை மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டன.
அதன்பின்னர் மக்களவை 12 மணிக்கு கூடியபோது பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது.
அதிமுக சார்பில் மூத்த உறுப்பினரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசினார். அப்போது, அவர் மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-
இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பெரிய அளவில் சலுகைகளை அறிவித்தது சரியல்ல. இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையானது, தேர்தல் அறிக்கை போல் இருக்கிறது.

மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் காங்கிரஸ் அரசுக்கும் பாஜக அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு, குறு தொழிலாளர்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? ஜிஎஸ்டி மூலம் மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துவிட்டது. ஜிஎஸ்டி வரி வசூலில் தங்கள் பங்கைப் பெறுவதற்கு, மத்திய அரசிடம் மாநில அரசுகள் பிச்சையெடுக்கும் நிலை உள்ளது. மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை முறையாக மத்திய அரசு அளிக்கவில்லை. இதுதான் கூட்டாட்சி தத்துவமா?
புயல்களால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரண நிதி முழுமையாக வழங்கப்படவில்லை. வாக்கெடுப்புகளில் மத்திய அரசு மீது நம்பிக்கை வைத்து பலமுறை வாக்களித்தோம். ஆனால் எங்கள் அரசு மீது மத்திய அரசு நம்பிக்கை வைக்கவில்லை.
பாஜகவின் பல்வேறு திட்டங்கள் தோல்வி அடைந்துள்ளன. 100 நாள் வேலைத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என மக்கள் குறை கூறுகிறார்கள். 100 நாள் வேலை திட்டத்தின் கொள்கையை மாற்றி அமைத்தது தோல்வியில் முடிந்துள்ளது. சிறுபான்மையினர் நலனுக்காக போதிய நிதி ஒதுக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
தம்பிதுரையின் இந்த பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். #Budget2019 #ThambiDurai
முழு பட்ஜெட்டா, இடைக்கால பட்ஜெட்டா?
பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது.
இந்த நிலையில் மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யுமா, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யுமா என்ற கேள்வி எழுந்தது.
மத்திய அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடும் என ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன.
உடனே காங்கிரஸ் கட்சி போர்க்கொடி உயர்த்தியது. மத்திய அரசு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்தால், அதை எதிர்ப்போம் என காங்கிரஸ் கட்சி கூறியது. அது மட்டும் இன்றி இதில் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்துவோம் எனவும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு ஏற்கனவே 5 முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டது.

எனவே தற்போது நிதித்துறையை கூடுதல் பொறுப்பாக வைத்திருக்கும் பியூஸ் கோயல் நாளை (பிப்ரவரி 1-ந் தேதி) பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
முழு பட்ஜெட் என்றால் அரசு பெரிய அளவில் தனது கொள்கை முடிவுகளை அறிவிக்க முடியும், நலத்திட்டங்களை வெளியிட இயலும். உத்தேச வரவுகளை பதிவு செய்ய முடியும். செலவினங்களை கணித்துக்கூற இயலும்.
இடைக்கால பட்ஜெட்டில் அதற்கு வாய்ப்பு இல்லை.
தேர்தலுக்கு பிறகு அமையவுள்ள புதிய அரசுதான் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். #Budget #PiyushGoyal

புதுடெல்லி:
பாராளுமன்ற கூட்டத் தொடர் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 13-ந்தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடக்கிறது.
ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் வருகிற 31-ந்தேதி காலை 11 மணிக்கு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.
இந்த அரசின் பதவி காலம் முடிந்து பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பிப்ரவரி 1-ந் தேதி மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு சென்றுள்ள அவர் இதற்காக இந்தியா திரும்புகிறார்.
தேர்தலை கருத்தில் கொண்டு இந்த இடைக்கால பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறும் வகையில் பல்வேறு வரிச் சலுகைகள் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேரடி வரி விதிப்பில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. தற்போது தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.2½ லட்சமாக இருக்கிறது. இதை ரூ.5 லட்சமாக உயர்த்த பா.ஜனதா அரசு முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் பொதுப்பிரிவினருக்கு பொருளாதாரத்தில் (ரூ.8 லட்சம் வரை) பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இந்த அளவு கோலின்படி பார்த்தால் வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்த அதிகமான வாய்ப்பு உள்ளது.
இதே போல கார்ப்பரேட் வரியும் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்படலாம். மேலும் பல்வேறு பொருளாதார சலுகை திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #budget
பாராளுமன்ற மக்களவைக்கு வரும் மே மாதத்துக்குள் தேர்தல் நடைபெற வேண்டும். அதற்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் வழக்கம்போல் வரும் மார்ச் மாதத்தில் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மத்திய அரசு தாக்கல் செய்ய இயலாது.
எனவே, அரசின் செலவினங்களுக்காக சில துறைகளுக்கு நிதியாதாரங்களை ஒதுக்கீடு செய்வதற்காக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும்.







