search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "party"

    • கடலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.
    • கடலூர் அருகே மேல் அழிஞ்சிப்பட்டு கிராமத்தில் கொடியேற்று விழா ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது

    கடலூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் அருகே மேல் அழிஞ்சிப்பட்டு கிராமத்தில் கொடியேற்று விழா ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கடலூர் மாநகராட்சி துணை மேயர் வக்கீல் தாமரைச்செல்வன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் கலந்து கொண்டு கட்சியின் கல்வெட்டை திறந்து வைத்தார். இதில் நிர்வாகிகள் பன்னீர், சம்பத், செந்தில், கலைஞர், ராஜேஷ், தமிழரசன், சக்தி முருகன், குணத்தொகையன், கலியமூர்த்தி, மணிகண்ட ராஜா, பரசு.முருகையன், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழுகூட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் விரைவாக அதிகமான உறுப்பினர் சேர்க்கை நடத்துவது, புதிய கிளைகள் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    கோபி, ஜூன். 27-

    ஈரோடு மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழுகூட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது.

    இந்த செயற்குழு கூட்டத்திற்கு த.மு.மு.க. மற்றும் மனித நேய மக்கள் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கோவை உமர், த.மு.மு.க. மாநில பொருளாளர் கோவை சாதிக், பவானி முகம்மது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் விரைவாக அதிகமான உறுப்பினர் சேர்க்கை நடத்துவது, புதிய கிளைகள் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    மேலும் மகளிர் அணி நிர்வாகங்களை பலப்படுத்துவது, போதை எதிர்ப்பு பிரச்சாரங்கள் அதிகமாக செய்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலீம் ராஜா, த.மு.மு.க. மாவட்ட செயலாளர் செய்யது கரீம் பயாஸ், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முஜிபுர் ரகுமான், மாவட்ட பொரு ளாளர் ஆடிட்டர் அன்வர், மாவட்ட தலைவர் ஹக்கீம், துணைச் செயலாளர் சிராஜ்தீன், குதுபுதீன், ஆசி புல்லா, அணி நிர்வாகி சாகுல் அமீது பாட்ஷா, மாவட்ட ஊடக அணி பொறுப்பாளர் நிஜாமுதீன், மற்றும் ஜியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் த.மு.மு.க. கோபி நகர செயலாளர் ஆடிட்டர் சம்சுதீன் நன்றி கூறினார்.

    • எஸ்.டி.பி.ஐ. கட்சி கொடியேற்று விழா நடந்தது.
    • திருவாடானை வடக்கு தொகுதி தலைவர் சலாமத் அலி தலைமையில் கொடியேற்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 14-வது ஆண்டு ெதாடக்க விழாவையொட்டி திருவாடானை வடக்கு தொகுதி தலைவர் சலாமத் அலி தலைமையில் கொடியேற்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நம்புதாளை எஸ்.டி.பி.ஐ. அலுவலகத்தின் கொடிகம்பத்தில் கிளை செயலாளர் ஜியாவுதீன், கிழக்கு கடற்கரை சாலையின் கொடிகம்பத்தில் நம்புதாளை நகர் துணை தலைவர் சாகுல் ஹமீது, குத்பா பள்ளி கொடிகம்பத்தில் நம்புதாளை நகர் செயலாளர் கலபத்த சகுபர் சாதிக், தொண்டி செக்போஸ்ட் கொடிகம்பத்தில் தொண்டி நகர் செயலாளர் ரிஸ்வான், வட்டாணம் சாலை கொடிகம்பத்தில் தொண்டி நகர் துணை தலைவர் பாதுஷா, கடற்கரை எதிரே மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான், தொண்டி அருகே உள்ள ஆர்.எஸ். மங்கலத்தில் புகாரி ஆகியோர் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    இதில் தொகுதி அமைப்பு செயலாளர் நாசர் அலி, பொருளாளர் அப்துல் மஜீத், சமூக ஊடக அணியின் மாவட்ட செயலாளர் முஜாஹிதீன், தொண்டி மேற்கு கிளை செயலாளர் ஹீசைன், மேலும் அன்சார் அலி, பாதுஷா, ஹாஜா, அஸ்கர், ஹபீப், அர்ஷத், ராவுத்தர் ஆலிம், அப்ரீத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா டெல்லியில் இன்று விருந்தளித்தார்.
    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன.

    மற்ற கட்சிகளை பொறுத்தமட்டில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற சில கட்சிகள் கூட்டணி அமைத்தும், பல கட்சிகள் தனித்தனியாகவும் களம் கண்டன.

    மத்தியில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும். வருகிற 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்போதுதான் ஆட்சி அமைப்பது யார்? என்பது தெரியவரும்.

    இதற்கிடையே, தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாயின. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா டெல்லியில் இன்று விருந்தளித்தார்.



    டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் நடைபெற்ற இந்த விருந்தில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    பிரதமர் நரேந்திர மோடி, பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார், மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் (லோக் ஜனசக்தி), சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, தேமுதிகவின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், ஜி.கே.வாசன்,  சரத்குமார், ஏ.சி.சண்முகம், கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் விருந்தில் பங்கேற்றனர்.
    நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் காதலிப்பதாக கிசுகிசு பரவிய நிலையில், இதுகுறித்த ஜெய் அளித்த பேட்டியில், அஞ்சலியுடனான நட்பு தொடரும் என்றும், கண்டிப்பாக தான் காதல் திருமணம் தான் செய்வேன் என்றார். #Jai #Anjali #Nayanthara
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான ஜெய் நடிப்பில் ‘பார்ட்டி’, ‘நீயா-2’ உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து ‘மதுரராஜா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    ‘எங்கேயும் எப்போதும்’, ‘பலூன்’ ஜெய்க்கும், அஞ்சலிக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் செய்தி பரவியது. ஆனால், அந்த காதல் சீக்கிரமே முறிந்து போனதாகவும் பேசப்படுகிறது.



    இதுபற்றி ஜெய்யிடம் கேட்டபோது, “நானும், அஞ்சலியும் நெருங்கி பழகியது உண்மைதான். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. அஞ்சலி என் காதலி அல்ல; தோழிதான். எங்கள் நட்பு தொடரும்” என்று கூறினார்.

    “எனக்கு மிகவும் பிடித்த நடிகை நயன்தாரா. மிகவும் மென்மையானவரும் அவர் தான். 2013-ல் நாங்கள் இருவரும் ‘ராஜாராணி’ படத்தில் இணைந்து நடித்தோம். படப்பிடிப்பின்போது எங்கள் இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அது இப்போதும் தொடர்கிறது. தொடர்ந்து அவருடன் பல படங்களில் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்றார்.



    “திருமணம் பற்றி கேட்டதற்கு, எனது திருமணம் பற்றி நான் யோசிக்கவே இல்லை. அப்படி திருமணம் செய்துகொள்வதாக இருந்தால், அது காதல் திருமணமாகத்தான் இருக்கும்.” இவ்வாறு நடிகர் ஜெய் கூறினார். #Jai #Anjali #Nayanthara #Neeya2 #Party

    பட விழாக்களில் கலந்துக் கொள்ளாமல் இருந்த நடிகர் ஜெய், தற்போது தனது கொள்கையை மாற்றிக் கொண்டிருக்கிறார். #Jai #Neeya2 #Party
    நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ஜெய் அளித்த பேட்டி:-

    உங்கள் நடிப்பில் அடுத்து வர இருக்கும் படங்கள்?

    நீயா 2, பார்ட்டி படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. மம்முட்டிக்கு தம்பியாக மதுர ராஜா என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறேன். புலி முருகன் படத்தை இயக்கிய வைசாக் இயக்குகிறார். பார்ட்டி படத்தில் வில்லத்தனம் கலந்த வேடம். அதற்கு அடுத்து கோபி நயினார் படம். இதில் வடசென்னையை சேர்ந்த கால்பந்து வீரராக நடிக்கிறேன்.

    உங்கள் பலமே காதல் படங்கள் தான். அதை விட்டு விட்டு ஆக்‌‌ஷன் பாதைக்கு செல்வது ஏன்?

    ஒரு மாற்றம் வேண்டும் என்று காதல் பாதையில் இருந்து மாறினேன். அதன் பிறகு காதல் படங்கள் அமையவில்லை. இப்போது கதைகள் கேட்டு வருகிறேன்.

    இரண்டு கதாநாயகர்கள் படங்களில் அதிகம் நடிப்பது ஏன்?

    இந்தி சினிமாவை போல் நடிகர்கள் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் அறிமுகமானதில் இருந்தே அதிகமாக ஒன்றுக்கு மேற்பட்ட கதாநாயகர்கள் படங்களில்தான் நடித்துள்ளேன். நண்பர், பெரிய டைரக்டர் என்பதால் நான் இதை பெரிதாக பார்க்கவில்லை.

    வாலு போன்ற சில ஹிட் படங்கள் கையைவிட்டு போனதில் வருத்தம் உண்டா?

    இல்லை. அந்த படம் சிம்பு நடித்ததால் இந்த அளவுக்கு போனது. நான் நடித்து இருந்தால் எப்படி வந்து இருக்கும் என்று தெரியும்.

    எந்த டைரக்டர் படத்தில் நடிக்க ஆசை?

    கவுதம் மேனன், முருகதாஸ். சசிகுமார் சாருடன் இன்னொரு படம் பண்ணவும் ஆசை.

    படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லையே, ஏன்?

    எனது கூச்ச சுபாவம் தான் படங்களின் விளம்பர நிகழ்ச்சிக்கு வராமல் இருந்ததற்கான காரணம். சரியான வழிகாட்டியும் இல்லை. இப்போது தயாரிப்பாளர் சுப்பு பஞ்சுதான் எனது மாற்றத்துக்கு காரணம். இனி படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வருவேன்.



    சன்னி லியோனுடன் 2-வது படம் நடிக்கும் அனுபவம்? தொடர்பில் இருக்கிறீர்களா?

    இதுபற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும். அவங்க ரொம்ப பிரெண்ட்லி. டுவிட்டரில் மட்டும்தான் தொடர்பில் இருக்கிறேன்.

    காதல் அனுபவம்?

    நிஜ வாழ்க்கையில் இதுவரை சீரியசான காதல் வரவில்லை. காதல் அமைந்தால் காதல் திருமணம் செய்வேன். இல்லாவிட்டால் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணமாக இருக்கும். இப்போது திருமணம் செய்ய திட்டம் இல்லை. சினிமாவில் இன்னும் சாதிக்கவேண்டி இருக்கிறது.

    உங்களுக்கு பிடித்த கதாநாயகி?

    அப்படி யாரும் ஸ்பெ‌ஷலாக இல்லை. நயன்தாராவுடன் நடித்த போது மிகவும் வசதியாக உணர்ந்தேன். அவர் மிகவும் மென்மையானவர்.
    அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘பார்ட்டி’ படத்தில் நடிகர் ஷாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். #Party #Shaam
    கடந்த 15 வருடங்களாக தமிழ் சினிமாவின் வேகம் மிகுந்த ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ஷாம். 

    சமீப காலமாக கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வரும் ஷாம், படங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டு, நல்ல கதை, நல்ல கதாபாத்திரம் என செலக்டிவாக நடித்து வருகிறார்.

    தற்போது அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘பார்ட்டி’ படத்தில் கலக்கலான சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் ஷாம். 

    இந்த படத்தில் நடித்திருப்பது குறித்து ஷாம் கூறும்போது, “அம்மா கிரியேஷன்ஸ் சிவா, எனது அண்ணன் போன்றவர். என்னுடைய திரையுலக பயணத்தில் மிகுந்த அக்கறை காட்டுபவர். அவரிடமிருந்து திடீரென ஒருநாள் அழைப்பு வந்தது. அவர் தயாரித்து வரும் ‘பார்ட்டி’ படத்தில் நடிக்குமாறு என்னிடம் கேட்டார். 



    இயக்குநர் வெங்கட் பிரபு இளைஞர்களை ஈர்க்கும் படம் பண்ணக்கூடியவர். அவரது படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது  ஆசை. ப்ளஸ் சிவா அண்ணன் படம். டபுள் தமாக்கா! உடனே ஓகே சொல்லி பிஜிக்கு போனேன்.

    அதற்கேற்ற மாதிரி அந்த கதாபாத்திரமும் என் மனதுக்குப் பிடித்த ஒன்றாக இருந்தது. நட்புக்கு மரியாதை கொடுக்குற அற்புதமான டீம்! கிக் படத்தில் கிடைத்த நல்ல பெயர் இதிலும் கிடைக்கும்னு நம்புறேன்.

    இன்னொரு பக்கம் கதாநாயகனாக நடித்துவரும் ‘காவியன்’ படம், முழு வீச்சில் தயாராகி வருகிறது. இது தவிர நல்ல படங்களையும் எனது தயாரிப்பில் உருவாக்கும் பொருட்டு, இரண்டு கதைகளைத் தேர்வு செய்துள்ளேன். மேலும் வெளி தயாரிப்பில் அருமையான கதை ஒன்றைக் கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன். அப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது’ என்றார்.
    ஒரே கட்சியில் நிலைத்து இருக்கும் விசுவாசிகளுக்கு கட்சியில் உரிய மரியாதை கிடைப்பதில்லை என்று முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே கூறியுள்ளார். #EknathKhadse #BJP
    மும்பை :

    பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஏக்நாத் கட்சே. வருவாய் துறை மந்திரியாக பதவி வகித்தவர். மந்திரி சபையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு அடுத்த இடத்தில் இருந்தார். இவர் மீது நில முறைகேடு, நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு ஆகிய குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன்காரணமாக அவர் தனது மந்திரி பதவியை இழக்க நேர்ந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் புசாவால் நகர் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சேயும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான உல்லாஸ் பாட்டீலும் கலந்துகொண்டனர்.

    அப்போது நிகழ்ச்சியில் பேசிய உல்லாஸ் பாட்டீல், பா.ஜனதா கட்சி ஏக்நாத் கட்சேவுக்கு அநீதி இழைத்துவிட்டதாக தெரிவித்தார். மேலும் காங்கிரசில் இணைய அவருக்கு அழைப்பு விடுத்தார்.

    இதற்கு முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே பதில் அளிக்கும் வகையில் பேசுகையில், “நீங்கள் (உல்லாஸ் பாட்டீல்) நினைப்பதை நான் கண்டிப்பாக யோசிக்கவில்லை. உங்கள் கட்சியானாலும், எனது கட்சியானாலும், யாரும் ஒரே கட்சியில் இருக்கப்போவதில்லை. ஒரே கட்சியில் நிலைத்து இருக்கும் விசுவாசிகளுக்கு கட்சியில் உரிய மரியாதை கிடைப்பதில்லை.

    அநீதி இழைக்கப்பட்டால் அதை எதிர்கொள்ள வேண்டும். அநீதி இழைத்தவர்கள் சரியான நேரத்தில் பாதிக்கப்பட்ட நபரின் வலிமையை புரிந்துகொள்வார்கள்” என்றார்.

    இதன்மூலம் பா.ஜனதா மூத்த தலைவரான ஏக்நாத் கட்சே கட்சியின் மீது அதிருப்தியில் உள்ளதாகவும், அவர்கட்சியை விட்டு விலக உள்ளதாகவும் தகவல்கள் பரவின.

    இந்த நிலையில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று அவர் அளித்த பதிலில், “ நான் பா.ஜனதாவில் இருந்து விலகப்போவதில்லை. மேலும் கட்சி மீது அதிருப்தியிலும் இல்லை. எனக்கு ஏதேனும் வருத்தம் ஏற்படுமாயின் நான் கட்சி தலைவரிடம் இதுகுறித்து பேசி முடிவெடுப்பேன்” என்றார். #EknathKhadse #BJP
    வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியுடன் உருவாகி இருக்கும் `பார்ட்டி' படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழை படக்குழு வெளியிட்டுள்ளது. #PARTY #VenkatPrabhu
    அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ள படம் `பார்ட்டி'.

    வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. நடிகர் ஷியாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.


    முன்னதான வெளியான `பார்ட்டி' படத்தின் டீசர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படம் விரைவில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. 

    வெங்கட் பிரபு விரைவில் சிம்புவை வைத்து `மாநாடு' என்ற படத்தை இயக்கவிருக்கிறார். #PARTY #VenkatPrabhu

    டெல்லியில் டிசம்பர் 10-ந் தேதி நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பா.ஜனதாவுக்கு எதிரான கட்சிகளுக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். #ChandrababuNaidu #BJP
    ஐதராபாத் :

    தெலுங்கு தேச கட்சியின் தலைவரும், ஆந்திர பிரதேச மாநில முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    மத்திய பா.ஜனதா ஆட்சியில் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பா.ஜனதா கட்சியின் தவறான கொள்கையால் மக்கள் மீது தேவையில்லாத சுமை ஏற்பட்டு இருக்கிறது. ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் அனைத்து தரப்பினரும் பொருளாதார இழப்பை சந்தித்தனர்.

    மேலும் சி.பி.ஐ., அமலாக்க துறை, வருமானவரித்துறை உள்ளிட்டவற்றை மோடி அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. ஒரு மூத்த அரசியல் தலைவர் என்ற முறையில் பா.ஜனதாவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்க நான் முயற்சி எடுத்து வருகிறேன். இதன் மூலம் எந்த பதவிக்கும் வர நான் ஆசைப்படவில்லை. அதற்கு தகுதியான தலைவர்கள் நாட்டில் உள்ளனர்.



    பா.ஜனதாவுக்கு எதிரான கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் டிசம்பர் (அடுத்த மாதம்) 10-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ஒவ்வொரு கட்சிகளுக்கும் தனித்தனியாக நான் அழைப்பு விடுக்கவில்லை. மக்களுக்கு எதிரான பா.ஜனதாவை வீழ்த்த நினைக்கும் அனைத்து கட்சிகளும் இதில் பங்கேற்க வேண்டும் என விரும்புகிறேன்.

    இதற்கு முன்பு மாறுபட்ட அரசியல் கொள்கைகளை கொண்ட காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை நான் எதிர்த்து உள்ளேன். ஆனால் தற்போது நாட்டின் நலனுக்காக பா.ஜனதாவுக்கு எதிரான கூட்டணி அமைவது ஜனநாயகத்தின் கட்டாயம் ஆகும். இது அரசியல் கட்டாயம் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார். #ChandrababuNaidu #BJP
    வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் பார்ட்டி படத்தில் நடித்துள்ள சஞ்சிதா ஷெட்டி, படப்பிடிப்பின் போது ரெஜினா உட்கார்ந்தபடியே தூங்குவார் என்று கூறியுள்ளார். #Party #SanchitaShetty #ReginaCassandra
    பார்ட்டி படத்தில் ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என 3 கதாநாயகிகள் இணைந்து நடிக்கிறார்கள். ரெஜினாவுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் சஞ்சிதா ஷெட்டி. நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கும் பழக்கம் ரெஜினாவுக்கு இருக்கு.

    இரவு நேரங்களில் படப்பிடிப்பு நடக்கும்போது அவரால் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. நானும் அப்படித் தூங்க முயற்சி பண்ணேன். முடியவில்லை. சூதுகவ்வும் வெளிவந்த சமயத்துல ஒரு சேனலுக்கு பேட்டி கொடுக்க சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதிக்குப் போய் இருந்தேன். அங்கே `பிரியாணி’ படப்பிடிப்பு நடந்துவந்தது.



    அங்கேதான் வெங்கட் பிரபுவை முதன்முதலாக சந்தித்தேன். `சூதுகவ்வும்‘ படத்தைப் பாராட்டியவர், கொஞ்ச நாளைக்கு அப்புறம் `பார்ட்டி’ படத்துல நடிக்கிறீங்களானு கேட்டார். கதை பிடிச்சிருந்தது, ஓகே சொல்லிட்டேன்’ என்று கூறியுள்ளார். #Party #SanchitaShetty #ReginaCassandra

    நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று கட்சி குறித்த அறிவிப்பு இல்லை என செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்துள்ளார். #Rajini
    சென்னை:

    பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தாம் அரசியலுக்கு வருவதாக அறிவித்து இருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். மேலும், மாநிலம் முழுவதும் தனது ரசிகர் மன்றங்கள் ரஜினி மக்கள் மன்றங்களாக மாற்றப்பட்டது.

    மேலும், அடுத்தடுத்து அதிரடியாக அவரது அரசியல் வரவு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் திரைப்படங்களிலேயே ஓய்வின்றி இருந்தார். அவ்வப்போது செய்தியாளர்களை சந்திப்பதும், மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்வதுமாய் இருந்துவந்தார்.

    இதையடுத்து, சமீபத்தில் அவரது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடனான கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. மேலும் அவர் பேட்ட படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் கட்சி பணிகளில் தீவிரமாக இறங்குவார் எனவும், தனது பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடுவார் எனவும் எதிர்ப்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், பேட்ட படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இன்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கட்சிப்பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்ததாக தெரிவித்தார்.

    ஆனால், டிசம்பர் 12 அன்று கட்சி குறித்த அறிவிப்புகள் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்தார். #Rajini
    ×