என் மலர்

  நீங்கள் தேடியது "Nivedita Pethuraj"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியுடன் உருவாகி இருக்கும் `பார்ட்டி' படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழை படக்குழு வெளியிட்டுள்ளது. #PARTY #VenkatPrabhu
  அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ள படம் `பார்ட்டி'.

  வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. நடிகர் ஷியாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

  முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.


  முன்னதான வெளியான `பார்ட்டி' படத்தின் டீசர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படம் விரைவில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. 

  வெங்கட் பிரபு விரைவில் சிம்புவை வைத்து `மாநாடு' என்ற படத்தை இயக்கவிருக்கிறார். #PARTY #VenkatPrabhu

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் பார்ட்டி படத்தில் நடித்துள்ள சஞ்சிதா ஷெட்டி, படப்பிடிப்பின் போது ரெஜினா உட்கார்ந்தபடியே தூங்குவார் என்று கூறியுள்ளார். #Party #SanchitaShetty #ReginaCassandra
  பார்ட்டி படத்தில் ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என 3 கதாநாயகிகள் இணைந்து நடிக்கிறார்கள். ரெஜினாவுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் சஞ்சிதா ஷெட்டி. நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கும் பழக்கம் ரெஜினாவுக்கு இருக்கு.

  இரவு நேரங்களில் படப்பிடிப்பு நடக்கும்போது அவரால் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. நானும் அப்படித் தூங்க முயற்சி பண்ணேன். முடியவில்லை. சூதுகவ்வும் வெளிவந்த சமயத்துல ஒரு சேனலுக்கு பேட்டி கொடுக்க சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதிக்குப் போய் இருந்தேன். அங்கே `பிரியாணி’ படப்பிடிப்பு நடந்துவந்தது.  அங்கேதான் வெங்கட் பிரபுவை முதன்முதலாக சந்தித்தேன். `சூதுகவ்வும்‘ படத்தைப் பாராட்டியவர், கொஞ்ச நாளைக்கு அப்புறம் `பார்ட்டி’ படத்துல நடிக்கிறீங்களானு கேட்டார். கதை பிடிச்சிருந்தது, ஓகே சொல்லிட்டேன்’ என்று கூறியுள்ளார். #Party #SanchitaShetty #ReginaCassandra

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியுடன் உருவாகி இருக்கும் `பார்ட்டி' படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #PARTY #VenkatPrabhu
  அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ள படம் `பார்ட்டி'. 

  வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. நடிகர் ஷியாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

  முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  முன்னதான வெளியான `பார்ட்டி' படத்தின் டீசர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படம் விரைவில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. 

  வெங்கட் பிரபு விரைவில் சிம்புவை வைத்து மாநாடு என்ற படத்தை இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #PARTY #VenkatPrabhu

  ×