search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஞ்சலி"

    • 2006 ஆம் ஆண்டு வெளியான ’போட்டோ’ என்ற தெலுங்கு மொழி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்
    • தற்போது கேங்ஸ் ஆஃப் கோதாவரி, கேம் சேஞ்சர் படங்களில் நடித்து வருகிறார்.

    2006 ஆம் ஆண்டு வெளியான 'போட்டோ' என்ற தெலுங்கு மொழி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அஞ்சலி. பின்னர் ராம் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை போன்ற படங்களில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தமிழ் , தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்து வரும் அஞ்சலி தற்போது 'கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ள இத்திரைப்படம் அஞ்சலிக்கு ௫௦-வது திரைப்படமாகும். ஷிவா துர்லாபடி இப்படத்தை இயக்கியுள்ளார்.  இப்படம் ஹாரர் மற்றும் காமெடி கதைக்களத்தில் அமைந்துள்ளது.

     

    இப்படத்தில் சத்யம் ராஜேஷ், ஸ்ரீனிவாச ரெட்டி, சத்யா, மொஹமத் அலி, சுனில் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது கேங்ஸ் ஆஃப் கோதாவரி, கேம் சேஞ்சர் படங்களில் நடித்து வருகிறார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தாக்குதலில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுப்கரன்சிங் (வயது 21) என்ற விவசாயி உயிரிழந்தார்.
    • திருப்பூர் குமரன் நினைவிடத்தில் அஸ்தியை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திருப்பூர்:

    வேளாண் விளை பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை தொடங்கினார்கள்.

    பஞ்சாபில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் பஞ்சாப், அரியானா இடையே ஷம்பு பகுதியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுப்கரன்சிங் (வயது 21) என்ற விவசாயி உயிரிழந்தார்.

    இதையடுத்து அவரின் அஸ்தி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு விவசாயிகள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அந்த விவசாயியின் அஸ்தி, திருப்பூர் கொண்டு வரப்பட்டது.

    பஞ்சாப்பை சேர்ந்த ரவீந்தர்சிங் தரப்பினர் கொண்டு வந்தனர். திருப்பூர் குமரன் நினைவிடத்தில் அஸ்தியை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திருப்பூரை சேர்ந்த விவசாய அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • பாதே சினிமாஸ் திரையரங்கில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது.
    • இந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இப்படம் அமைந்துள்ளது.

    சுரேஷ் காமாட்சியின் 'வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் "ஏழு கடல் ஏழு மலை" திரைப்படம் உலகளாவிய சினிமா விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

    சமீபத்தில் நடந்து முடிந்த ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன்' போட்டிப் பிரிவிற்காகத் தேர்வு செய்யப்பட்டு, ரோட்டர்டாம் நகரின் சிறப்புமிக்க பாதே சினிமாஸ் திரையரங்கில் மூன்று காட்சிகள் பொதுமக்களின் பார்வைக்காக இந்த திரைப்படம் திரையிடப்பட்டது.

     


    கவிதை போல அழகாகவும், பிரமிக்கத்தக்க காட்சி அமைப்பும் கொண்ட இந்த திரைப்படம் ஒரு தலைசிறந்த படைப்பு என்றும், இந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இப்படம் அமைந்துள்ளது என்று பலரும் இந்த படத்தை பாராட்டினர்.

    • நினைவிடத்தில் விஜயகாந்த் புகைப்படம் மலர் தூவி அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
    • தன்னை தேடி வந்தவர்களை சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கம் உள்ளவராகவே இருந்து வந்துள்ளார்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். உடல் நலக்குறைவால் உயிரிழந்த அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    விஜயகாந்த் மரணம் அடைந்து ஒரு மாதத்தை கடந்துவிட்ட நிலையிலும் அவரது நினைவிடத்தில் தினமும் பொதுமக்களும் தே.மு.தி.க. தொண்டர்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    குறிப்பாக வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள் தே.மு.தி.க. அலுவலகத்திற்கு சென்று விலை உயர்ந்த மாலைகளை வாங்கி வைத்து விஜயகாந்த் நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    நினைவிடத்தில் விஜயகாந்த் புகைப்படம் மலர் தூவி அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அங்கு வருபவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி அஞ்சலி செலுத்த வரும் பொது மக்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு அதனை தங்களது முகநூல் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவதையும் வழக்கமாகக் கொண்டு உள்ளனர்.

    இதன் மூலம் விஜயகாந்த் உயிரிழந்த பிறகும் அவரது நினைவை போற்றும் வகையில் பொதுமக்கள் அவருக்கு தொடர்ச்சியாக மரியாதை செய்து வருவது தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, "எந்த தலைவருக்கும் இல்லாத அளவுக்கு உயிரிழந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் தொடர்ச்சியாக பொதுமக்கள் நேரில் வந்து விஜயாந்த்துக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இது எங்களுக்கு நெகழ்ச்சியாகவே உள்ளது" என்று தெரிவித்தார்.

    விஜயகாந்தை பொருத்தவரையில் எல்லோருக்கும் உதவும் எண்ணம் கொண்டவராகவும் தன்னை தேடி வந்தவர்களை சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கம் உள்ளவராகவே இருந்து வந்துள்ளார். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் செய்துள்ளார். இது போன்ற நல்ல உள்ளம் கொண்டவராக அவர் திகழ்ந்ததன் காரணமாகவே விஜயகாந்த் மீது பொதுமக்கள் அளவு கடந்த அன்பு வைத்திருப்பதாகவும் அதுதான் தற்போது வெளிப்பட்டு வருவதாகவும் தே.மு.தி.க. நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

    • பிரதமர் மோடி மகாத்மா காந்தி குறித்து தனது எக்ஸதளத்தில் பதவிட்டுள்ளார்.
    • தேசத்திற்காக தியாகம் செய்த அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன்.

    புதுடெல்லி:

    மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நமது தேசத்திற்காக தியாகம் செய்த அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன். அவர்களின் தியாகங்கள், மக்களுக்கு சேவை செய்யவும், நாட்டுக்காக அவர்களின் நோக்கங்களை நிறைவேற்றவும் நம்மை ஊக்குவிக்கின்றன.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் விசாலாட்சி தலைமையில் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    திருப்பூர்:

    சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 92-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருப்பூர் ரெயில் நிலையம் அருகே நினைவு மண்டபத்தில் உள்ள குமரன் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக தியாகி திருப்பூர் குமரன் சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


    அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் விசாலாட்சி தலைமையில் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில நிர்வாக குழு உறுப்பினரும் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவருமான பாரி கணபதி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் சக்திவேல், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மல்லிகா, மாவட்ட இளைஞரணி செயலாளர் முருகன், மாவட்ட மாணவரணி செயலாளர் விஜய், திருப்பூர் குமரன் அறக்கட்டளை நிர்வாகி பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    இதேப்போல் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சினிமாவை விட்டு விலகிய அஞ்சலி உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நுழைந்தார்.
    • பிசியான நடிகையாக வலம் வரும் அஞ்சலி, 'கேம் சேஞ்சர்', 'ஏழு கடல் ஏழு மலை' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

    தமிழில் 2007-ல் வெளியான கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு இவரின் உடல் எடை அதிகமானதால் படங்கள் குறைந்தன. இதையடுத்து சினிமாவை விட்டு விலகிய அஞ்சலி உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நுழைந்தார்.


    நடிகை அஞ்சலியும் ஜெய்யும் காதலித்து வந்ததாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தகவல் உலா வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென இருவரும் பிரேக் அப் செய்ததாக செய்திகள் வெளியானது. தற்போது சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் அஞ்சலி, 'கேம் சேஞ்சர்', 'ஏழு கடல் ஏழு மலை' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.


    இந்நிலையில், நடிகை அஞ்சலி தன்னை பற்றி பரவி வரும் திருமண வதந்திகள் குறித்து நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். என்னைப்பற்றி என்ன எழுத வேண்டும், யாருடன் இணைத்து எழுத வேண்டும் என்று அவர்களே முடிவு செய்து எழுதுகிறார்கள். முதலில் நடிகர் ஜெய்யை காதலித்ததாக செய்தி வந்தது. பின்னர் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனதாக சொல்லப்பட்டது. எனக்கே தெரியாமல் எனக்கு திருமணம் ஆனதை நினைத்து நான் சிரித்தேன்" என்று கூறியுள்ளார்.

    • தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் காலமானார்.
    • சுமார் 20 ஆயிரம் சதுர அடியில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் புதிதாக வீடு ஒன்றை கட்டி வந்தார்.

    பூந்தமல்லி:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் இன்று காலமானார். அவர் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் அட்கோ நகர் பகுதியில் சுமார் 20 ஆயிரம் சதுர அடியில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் புதிதாக வீடு ஒன்றை கட்டி வந்தார். அதில் குடியேற ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது.

    பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் இந்த வீட்டின் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக தொய்வடைந்த நிலையில் மீண்டும் வீடு கட்டும் பணிகள் வேகம் எடுத்தது. தற்போது 90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்த வீட்டில் பால் காய்ச்சப்பட்டதாகவும் விஜயகாந்த் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரவில்லை என்று கூறப்படுகிறது. சுமார் 10 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் இந்த வீட்டில் விஜயகாந்த் வசிக்க வேண்டும் என தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில் அந்த ஆசை நிறைவேறாமலே போனது. 

    • மும்பை பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒரு நன்றியுள்ள தேசம் வலியுடன் நினைவு கூர்கிறது.
    • முக்கிய வீதிகளில் வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படையினரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன.

    மும்பை:

    கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர், மும்பை நகருக்குள் கடல் வழியாக நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

    சத்ரபதி சிவாஜி மஹராஜ் ரயில் நிலையம், ஓபராய் ஓட்டல், தாஜ் மஹால் ஓட்டல், லியோ கபே, காமா மருத்துவமனை, யூதர்கள் சமுதாய மையம் ஆகிய இடங்களில் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படைவீரர்கள் 18 பேர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர்.

    தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் 2012ல் துாக்கிலிடப்பட்டார்.

    மும்பை தாக்குதலின் 15-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. மும்பை நகரின் முக்கிய வீதிகளில் வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படையினரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன. அதற்கு பொதுமக்கள் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்கும் அஞ்சலி செலுத்தினர்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில் கூறும்போது, மும்பை பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒரு நன்றியுள்ள தேசம் வலியுடன் நினைவு கூர்கிறது.

    துணிச்சலான ஆன்மாக்களின் நினைவைப் போற்றும் வகையில் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் நாங்கள் நிற்கிறோம். தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரம் மிக்க பாது காப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் உன்னத தியாகத்தை நினைவுகூர்ந்து, எல்லா இடங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கான நமது உறுதிமொழியை புதுப்பிப்போம் என்று கூறியுள்ளார்.

    • விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலத் தலைவருமான சங்கரய்யா காலமானார்.
    • பலர் கலந்துக் கொண்டு சங்கராய்யா படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    தொட்டியம்

    விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலத் தலைவருமான சங்கரய்யா காலமானார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தொட்டியத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமநாதன் தலைமையில் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி , தி.மு.க. நகர செயலாளர் விஜய்ஆனந்த், தி.மு.க. வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் காடுவெட்டி அகதீஸ்வரன், முன்னாள் காங்கிரஸ் நகர தலைவர்கள்

    மோகன் , அய்யாசாமி, ம.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் சேகர் ,கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ஏலூர்பட்டி முருகன், முருகானந்தம், கட்டுமான சங்க தோளூர்பட்டி தேவராஜ், திருநாராயணபுரம் தர்மலிங்கம், சமூக ஆர்வலர் நீலமேகம், சந்தப்பேட்டை அஸ்ரப் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு சங்கராய்யா படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    • சங்கரய்யா மறைவுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
    • மவுன ஊர்வலத்துக்கு தி.மு.க. மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமை தாங்கினார்.

    சிவகாசி

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவிற்கு சிவகாசியில் பல்வேறு கட்சி சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையொட்டி மவுன ஊர்வலம் நடந்தது. காமராஜர் சிலையில் இருந்து சிவன் கோவில் முன்பு வரை நடந்த ஊர்வலத்தில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். மவுன ஊர்வலத்துக்கு தி.மு.க. மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலத்தில் தி.மு.க. சிவகாசி கிழக்கு ஒன்றிய செயலாளர் கோபிக்கண்ணன், மாநகர பகுதி செயலாளர்கள் காளிராஜன், கருணாநிதிப்பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேவா, பாலசுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜீவா, சமுத்திரம், பா.ஜ.க. மாநகர தலைவர் பாட்டாகுளம் பழனிச்சாமி, தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாநகர கவுன்சிலர் ராஜேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் செல்வின் யோசுதாஸ், பைக்பாண்டி, பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மவுன அஞ்சலி செலுத்தினர்.

    • தேவகோட்டை ரூசோ நினைவிடத்தில் இந்திய ஜனநாயக கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
    • மதுரை மாநகர மாவட்ட இணை செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    சிவகங்கை மாவட்ட முன்னாள் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ரூசோ 25-வது நினைவு தினத்தையொட்டி தேவகோட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஜெயசீலன், பார்கவ குல முன்னேற்ற சங்கத்தின் தலைவர், ஐ.ஜே.கே. முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். கட்சியினர் ஊர்வலமாக சென்று ரூசோ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    இதில் பார்கவ குல முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் வரதராஜன், இந்திய ஜனநாயக கட்சியின் இணை பொதுச் செயலாளர் லீமாரோஸ் மார்ட்டீன், துணைத் தலைவர் இளவரசி ஜெரோம், மாநில போராட்ட குழு செயலாளர் சிமியோன் சேவியர் ராஜ், அமைப்பு செயலாளர் அன்னை இருதயராஜ், மகளிரணி துணைச் செயலாளர் சகிலா புரோஸ், இளைஞரணி துணை செயலாளர் செந்தூர் பாண்டி, மதுரை மாநகர மாவட்ட முதன்மை அமைப்பு செயலாளர் ஜான் பெனடிக்ட், மதுரை மாநகர மாவட்ட இணை செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×