search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்சி"

    • டெல்லியில் அனைத்து மாநில தலைவர்கள், சட்ட மன்ற கட்சி தலைவர்கள், மாநில பொறுப்பாளர்களுடன் மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
    • தேவைப்பட்டால், மாநிலங்களுக்குச் சென்று கூட்டணி கட்சி தலைவர்களையும் காங்கிரஸ் குழு சந்திக்கும்.

    சென்னை:

    காங்கிரஸ் கட்சிக்கு நாடு முழுவதும் தொண்டர்களி டம் நிதி திரட்டப்படுகிறது. நிதி வசூலில் சில மாநிலங்களில் மந்தமான நிலையே உள்ளது.

    காங்கிரசின் வயதை குறிக்கும் ரூ.138, ரூ.338, ரூ.1338 என்ற அளவில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெரும்பாலானவர்கள் ரூ.138 மட்டுமே கட்டி இருக்கிறார்கள்.

    இந்நிலையில் நேற்று டெல்லியில் அனைத்து மாநில தலைவர்கள், சட்ட மன்ற கட்சி தலைவர்கள், மாநில பொறுப்பாளர்களுடன் மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். பாராளுமன்ற தேர்தல் தொடர்பான இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சிக்கு நிதி திரட்டுவது மற்றும் ராகுல்காந்தி தொடங்கவிருக்கும் ஒற்றுமை யாத்திரை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்கள் ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் நிதி செலுத்த வேண்டும்.

    அதேபோல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மனு செய்பவர்களும் ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் ஆன்லைனில் செலுத்தி அதற்கான அத்தாட்சி ரசீதையும் இணைத்து மனு செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் உறுதி செய்தார்.

    இந்த கூட்டம் முடிந்ததும் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் தனியாக கூட்டம் நடந்தது.

    நாடு முழுவதும் தொகுதிப் பங்கீடு மற்றும் சுமூகமான முடிவுகளுக்காக கூட்டணி கட்சிகளை அணுகி வருவதாக மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் தெரிவித்தார். தேவைப்பட்டால், மாநிலங்களுக்குச் சென்று கூட்டணி கட்சி தலைவர்களையும் காங்கிரஸ் குழு சந்திக்கும் என்றார்.

    • சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியை எப்படி மீட்க போகிறார்கள்? என பசும்பொன் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
    • எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மீது பற்று கொண்ட ஒவ் வொரு தொண்டனும் அ.தி.மு.க. கொடியை பயன்படுத் தலாம், அ.தி.மு.க. கரை வேட்டியை கட்டலாம்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வழக் கறிஞர் பசும்பொன் பாண் டியன் வெளியிட்டுள்ள அறிக் யில் கூறியிருப்பதாவது:-

    வழக்கறிஞர் என்ற முறை யில் நீதிமன்ற தீர்ப்பு களை மனதார வரவேற்பவன் நான். ஆனாலும் நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சனம் செய்யக்கூடாது என்று எந்த சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை. அ.தி.மு.க. கொடியை ஓ.பன்னீர்செல் வம் மற்றும் எதிர் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் எந்த தரவுகளின் அடிப்படையில் உத்தரவு பிறப்பித்தது என்று தெரியவில்லை.

    ஆனால் இந்த உத்தரவு வந்த உடனேயே ஓ.பன் னீர்செல்வம் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அ.தி.மு.க. கொடியை கழற்றி விட்டு காரில் பயணம் செய் கிறார். அதுபோல எடப்பாடி பழனிசாமியிடம் ஆட்சியை யும் கட்சியையும் ஒப்படைத்த சசிகலா பெங்களூரு சிறை யில் இருந்து விடுதலையாகி தமிழ்நாட்டுக்கு வந்த போது தான் பயணம் செய்த காரில் இருந்த அ.தி.மு.க. கொடியை ஒரு போலீஸ்காரர் கழற்ற சொன்னதின் அடிப்படை யில் வேறு காருக்கு மாறி பயணம் செய்தார். இதனால் அவரை நம்பி சென்ற தொண்டர்கள் மனம் வெதும்பினர்.

    கட்சியையும், ஆட்சியை யும் எடப்பாடியிடம் ஒப்ப டைத்தவர் சசிகலா என்ப தில் எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால் அப்படிப்பட்ட எடப்பாடி பழனிசாமியிடமிருந்து அ.தி.மு.க. கொடியை மீட்க முடி யாத சசிகலாவும், ஓ.பன் னீர்செல்வம், டி.டி.வி. தினகரனும் எப்படி அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை எப்படி மீட்க போகிறார்கள் என்ற சந்தே கம் லட்சோப லட்சம் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    எனவே அ.தி.மு.க. கொடியை எடப்பாடி ஆதரவாளர்களை தவிர வேறு யாரும் கட்டக்கூடாது என்று கூறுவது வேடிக்கை யானது, வினோதமானது. எனவே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது இயக்க பற்றாளர்கள் ஒவ்வொருவரும் அ.தி.மு.க. கொடியை யும், அ.தி.மு.க. கரை வேட்டி யையும் பயன்படுத்துவதை எடப்பாடியோ அல்லது நீதிமன்றமோ கட்டுப்படுத்து வதற்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது என் பதை சுட்டிக்காட்ட விரும்பு கிறேன்.

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மீது பற்று கொண்ட ஒவ் வொரு தொண்டனும் அ.தி.மு.க. கொடியை பயன்படுத் தலாம், அ.தி.மு.க. கரை வேட்டியை கட்டலாம். இதற்கு எடப்பாடி தரப்பு மட்டும் உரிமை கொண்டாட எந்தவித தகுதியும் இல்லை. எனவே அ.தி.மு.க. இயக் கத்தை மீட்டு எடுப்பதாக கூறிவரும் சசிகலா, தினக ரன், ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் அ.தி.மு.க. கொடியை எவ்வித தயக்கம் இன்றி பயன்படுத்தலாம். இது தொடர்பாக தேவை யான சட்டப் போராட்டங் களையும் அவர்கள் முன் நின்று நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

    • இந்திய குடியரசு கட்சி (ஆர்.வி), தமிழ்நாடு மதமில்லா உலகம், தமிழ்நாடு மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.
    • தொடர் முழக்க போராட்டத்தில், சேலம் மாவட்டம் ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் சரபங்கா நீர்பாசன ஓடை நிலத்தை போலி பத்திரம் தயாரித்து ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் இந்திய குடியரசு கட்சி (ஆர்.வி), தமிழ்நாடு மதமில்லா உலகம், தமிழ்நாடு மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்திற்கு இந்திய குடியரசு கட்சி (ஆர்.வி) தமிழ்நாடு பிரிவின் தமிழ்மாநில அவைத் தலைவரும், தமிழ்நாடு மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனருமான டாக்டர்.கே.நடராஜ் தலைமை வகித்தார். இந்திய குடியரசு கட்சி (ஆர்.வி) மாநிலத் தலைவர் டாக்டர்.ஆர்.வெங்கடேசன், இந்திய குடியரசு கட்சி (எம்.சி.ஆர்) மாநிலத் தலைவர் எம்.சி.ராஜேந்திரன், இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) தேசியத் துணைத் தலைவர் வழக்கறிஞர் அருண்குமார் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கையை விளக்கி பேசினார்கள்.

    இந்த தொடர் முழக்க போராட்டத்தில், சேலம் மாவட்டம் ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் சரபங்கா நீர்பாசன ஓடை நிலத்தை போலி பத்திரம் தயாரித்து ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனை ரத்து செய்து மீதமுள்ள காலி நிலத்தில் அனைத்து சமூக பயனாளிகளுக்கும் அரசு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி முழக்கமிட்டனர்.

    இந்திய குடியரசு கட்சி (ஆர்.வி) சேலம் மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், சேலம் மாநகரத் தலைவர் ராஜபிரசாத், மாநில கொள்கை பரப்பு செயலாளர் கே.ரங்கசாமி, இந்திய குடியரசு கட்சி (எம்சிஆர்) சேலம் மாவட்ட தலைவர் பாலசுப்ர மணியன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

    • மாவட்ட தலைவர் தர்மராஜ் அறிக்கை
    • 23-ந்தேதி காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், மணல் மற்றும் கனிம கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், விலை வாசிகளை கட்டுப்படுத்த வேண்டும், மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் வருகிற 23-ந்தேதி காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி வார்டு பகுதிகளிலும் ஊராட்சி, பேரூராட்சி பகுதிகள் என மொத்தம் 235 இடங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த கிளை பொறுப்பாளர்கள் அணி மற்றும் பிரிவுகளின் பிரதிநிதிகள், ஒன்றிய, நகர, மாவட்ட, மாநில மற்றும் தேசிய பொறுப்பாளர்கள், தொண்டர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள், வியாபாரிகள், மாணவர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • கட்சியின் விதிமுறைகள் குறித்து கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாததால் புறக்கணித்துள்ளார்.
    • மதிமுகவின் தலைமைக் கழகமான தாயகம் கட்டிடம் வைகோவின் தனிப்பட்ட பெயரில் கிரையம் செய்யப்ப ட்டுள்ளது.

    திருப்பூர்:

    ம.தி.மு.க. அவை தலைவர் துரைசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அப்போது அவர் கூறியதாவது:-

    மதிமுகவை திமுகவில் இணைக்க வேண்டும் என்று கூறியதற்கு காரணம் வைகோவின் தொடிப்பு மிக்க பேச்சை நம்பி ஏராளமான இளைஞர்கள் மதிமுகவில் சேர்ந்ததாகவும் ஆனால் தற்போது பொதுச்செயலாளரின் நடவடிக்கையால் அங்கீகாரம் ரத்து ஆகும் நிலை சென்றது வேதனை அளிப்பதாகவும் இதனை காப்பாற்றவே திமுகவை இணைக்க வலியுறு த்தினேன். தனது கடிதம்

    புறக்கணிக்கப்படுவதாக வைகோ தெரிவித்துள்ளார் கடிதத்தில் கட்சியின் விதிமுறைகள் குறித்து கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாததால் புறக்கணித்துள்ளார். தமிழகம் முழுவதும் 45 இடங்களில் சொந்தமான சொத்துக்கள் உள்ளது அவை யாவும் தனது தனிப்பட்ட பெயரில் இல்லை தொழிற்சங்க பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பெயரில் உள்ளது. அவை அனைத்தும் மதிமுக துவங்கப்படுவதற்கு முன்னதாகவே வாங்கப்பட்டது . ஆனால் மதிமுகவின் தலைமைக் கழகமான தாயகம் கட்டிடம் வைகோவின் தனிப்பட்ட பெயரில் கிரையம் செய்யப்ப ட்டுள்ளது. இதுவரை கட்சியின் பொருளாளர் எந்த ஒரு காசோலைகளும் கையெழுத்திட வில்லை வைகோவே கையெழுத்திட்டு வங்கியில் இருந்து பணம் எடுத்து பயன்படுத்தி வருகிறார். தன்னைக் கட்சியில் இருந்து நீக்குவதாக எந்த ஒரு தொண்டனும் உளவுபூ ர்வமாக எண்ணுவதில்லை. வைகோவின் தூண்டுதலின் காரணமாகவே தன்னை நீக்க வேண்டும் என கடிதமும் தீர்மானமும் அனுப்பப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். 30 ஆண்டு காலமாக கட்சியில் இருந்தவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்ற ஆதங்கத்தின் காரணமாகவே கடிதம் எழுதி திமுகவில் இணைக்க வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார். தான் அரசியல் வாழ்வில் இருந்து விலகி அண்ணா பெரியார் பாதையில் பயணிக்க இருக்கிறேன். தன்னை கட்சியிலிருந்து நீக்கவும் அல்லது நடவடிக்கை எடுக்கவோ வைகோ ஏதோ உள்ளூர பயம் கொண்டிருப்பதாக தெரிவித்தார் . தனது எந்த தொழில்களையும் வெற்றி பெறாத துறை வைகோ சினிமா படம் எடுத்து கட்சியை வளர்த்த நினைத்தார் ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்ததாகவும் அதற்காக ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் இரண்டு லட்சம் ரூபாய் வரை நஷ்டத்தை சந்தித்துள்ளனர் என்றார்.

    • தாழ்த்தப்பட்ட மக்கள் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்து தாக்குதல் நடத்திய கும்பலை கண்டித்தும், குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்தது.
    • அழைப்பாளராக கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்



    கடலூர்:

    புவனகிரியை அடுத்த சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்து தாக்குதல் நடத்திய கும்பலை கண்டித்தும், குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் கடலூர் அம்பேத்கர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். இதில் அமைப்பு செயலாளர் திருமார்பன், மாவட்ட செயலாளர் மருதமுத்து, மாவட்ட துணை செயலாளர் திருமேனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செந்தில் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பழனிவேல்,கிட்டு, ஸ்ரீதர், ஜவகர், சுபாஷ், பாலமுருகன், ராமச்சந்திரன், கலைஞர், வெங்கடசாமி, புலிக்கொடியன், திருமாறன், காட்டுராஜா, ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இன்று நினைவு தினம்
    • நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு உள்ள அவரது உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

    நாகர்கோவில்:

    அம்பேத்கார் நினைவு நாளையொட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு உள்ள அவரது உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில துணை செயலாளர் அல்காலித் உள்பட பலர் கலந்து கொண்டனர். தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தினகரன் மாலை அணிவித்தார்.

    தி.மு.க. சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தலைமை கழக துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின், மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாவட்ட பொருளாளர் கேட்சன், துணை செயலாளர் பூதலிங்கம், ஆதி திராவிட அணி அமைப்பாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் சுரேந்திர குமார், செல்வன், பிராங்கிளின், மாநகர செயலாளர் ஆனந்த், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணை தலைவர் இ.என்.சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    அ.தி.மு.க. சார்பில் அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமையில் முன்னாள் அமைச்சர் பச்சைமால் மாலை அணிவித்தார். தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், ஒன்றிய செயலாளர்கள் ஜெசீம்,பொன்சுந்தர்நாத், அணி செயலாளர்கள் ஜெயசீலன், சுகுமாரன், மாநகர கவுன்சிலர்கள் ஸ்ரீலிஜா, அக் ஷயா கண்ணன், விவசாய அணி தலைவர் வடிவை மாதவன் மற்றும் சந்திரன், சந்துரு,சகாயராஜ், வெங்கடேஸ்,ரபீக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எம். ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்தனர். மாநில செயலாளர் மீனாதேவ், மாநில மகளிர் அணி தலைவி உமாரதி ராஜன், மாவட்ட பொருளாளர் முத்துராமன், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் மனோகரன், கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அஜித்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர் செல்வகுமார், அலெக்ஸ்,எஸ்.சி., எஸ்.டி.பிரிவு தலைவர் மணிகண்டன், ராஜபாண்டியன், டைசன், செல்வன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • தற்போது எல்லா விதமான பொருட்களின் மீதும் மத்திய அரசு வரி போட்டு உள்ளது.
    • வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் என மத்திய அரசு கூறி வருகிறது.

    தஞ்சாவூர்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய பிரசார இயக்கம் நடந்து வருகிறது.

    அதன்படி இன்று தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் வடிவேலன் தலைமையில் பிரச்சார இயக்கம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், மூத்த தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மத்திய குழு உறுப்பினர் வாசுகி கலந்து கொண்டு பேசியதாவது:-

    நாட்டில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் அனைத்திற்கும் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான ஆட்சியின் தவறான கொள்கைகளே காரணமாகும்.

    பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு உள்ளிட்ட பல வகையான பொருட்களின் விலையை மத்திய அரசை தொடர்ந்து உயர்த்தி கொண்டே செல்கிறது.

    இதற்கு தீர்வு தான் என்ன என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் விளக்கங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் தான் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தி வருகிறோம்.

    சமீபத்தில் நடந்த 75-வது சுதந்திர தின விழாவில் நாட்டு மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன, அவற்றை தீர்ப்பதற்கு நாங்கள் என்ன மாதிரி நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்று தான் பிரதமர் பேசி இருக்க வேண்டும்.

    ஆனால் பிரதமர் அவ்வாறு பேசவில்லை.

    தற்போது எல்லா விதமான பொருட்களின் மீதும் மத்திய அரசு வரி போட்டு உள்ளது.

    வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் என மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் தற்போது பொதுத்துறை நிறுவனங்கள் படிப்படியாக தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது.

    பிறகு எப்படி வேலை கொடுப்பீர்கள். விவசாயிகள் போராடினால் தற்காலிகமாக வாக்குறுதி கொடுத்துவிட்டு அவர்கள் போராட்டம் முடிந்த பின்னர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்து அடிக்கிறது மத்திய அரசு. விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தீர வேண்டுமானால் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே சாத்தியமாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கடலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.
    • கடலூர் அருகே மேல் அழிஞ்சிப்பட்டு கிராமத்தில் கொடியேற்று விழா ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது

    கடலூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் அருகே மேல் அழிஞ்சிப்பட்டு கிராமத்தில் கொடியேற்று விழா ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கடலூர் மாநகராட்சி துணை மேயர் வக்கீல் தாமரைச்செல்வன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் கலந்து கொண்டு கட்சியின் கல்வெட்டை திறந்து வைத்தார். இதில் நிர்வாகிகள் பன்னீர், சம்பத், செந்தில், கலைஞர், ராஜேஷ், தமிழரசன், சக்தி முருகன், குணத்தொகையன், கலியமூர்த்தி, மணிகண்ட ராஜா, பரசு.முருகையன், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலை அமைத்து தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    திருச்செந்தூர்:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் திருச்செந்தூரில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட துணைச் செயலாளர் இந்திரா, நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜ்குமார், திருவைகுண்டம் சட்ட மன்ற தொகுதி செயலாளர் திருவள்ளுவன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி, சமூக நல்லிணக்கப்பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ப்பரிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளரக கருத்தியல் பரப்பு மாநில துணைச் செயலாளர் தமிழ்குட்டி, தொண்டர் அணி மாநில துணை செயலாளர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    திருச்செந்தூர் நகராட்சி டாக்டர் அம்பேத்கர் நினைவு பூங்காவில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலை அரசின் செலவில் அமைத்து தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நாடாளுமன்ற தொகுதி செயலாளர் மணி கண்டராசா, திருச்செந்தூர் ஒன்றிய துணை செயலாளர்கள் செஞ்சுடர், ஆட்டோ கண்ணன், திருவைகுண்டம் ஒன்றிய துணை செயலாளர் கனிபாண்டியன், ஆழ்வை ஒன்றிய பொருளாளர் செல்வக்குமார், ஒன்றிய துணை செயலாளர்கள் முத்துக்குமார், சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர். சமூக நல்லி ணக்கப்பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் இளந்தளிர்முத்து நன்றி கூறினார்.

    • ஈரோடு மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழுகூட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் விரைவாக அதிகமான உறுப்பினர் சேர்க்கை நடத்துவது, புதிய கிளைகள் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    கோபி, ஜூன். 27-

    ஈரோடு மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழுகூட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது.

    இந்த செயற்குழு கூட்டத்திற்கு த.மு.மு.க. மற்றும் மனித நேய மக்கள் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கோவை உமர், த.மு.மு.க. மாநில பொருளாளர் கோவை சாதிக், பவானி முகம்மது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் விரைவாக அதிகமான உறுப்பினர் சேர்க்கை நடத்துவது, புதிய கிளைகள் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    மேலும் மகளிர் அணி நிர்வாகங்களை பலப்படுத்துவது, போதை எதிர்ப்பு பிரச்சாரங்கள் அதிகமாக செய்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலீம் ராஜா, த.மு.மு.க. மாவட்ட செயலாளர் செய்யது கரீம் பயாஸ், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முஜிபுர் ரகுமான், மாவட்ட பொரு ளாளர் ஆடிட்டர் அன்வர், மாவட்ட தலைவர் ஹக்கீம், துணைச் செயலாளர் சிராஜ்தீன், குதுபுதீன், ஆசி புல்லா, அணி நிர்வாகி சாகுல் அமீது பாட்ஷா, மாவட்ட ஊடக அணி பொறுப்பாளர் நிஜாமுதீன், மற்றும் ஜியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் த.மு.மு.க. கோபி நகர செயலாளர் ஆடிட்டர் சம்சுதீன் நன்றி கூறினார்.

    • எஸ்.டி.பி.ஐ. கட்சி கொடியேற்று விழா நடந்தது.
    • திருவாடானை வடக்கு தொகுதி தலைவர் சலாமத் அலி தலைமையில் கொடியேற்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 14-வது ஆண்டு ெதாடக்க விழாவையொட்டி திருவாடானை வடக்கு தொகுதி தலைவர் சலாமத் அலி தலைமையில் கொடியேற்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நம்புதாளை எஸ்.டி.பி.ஐ. அலுவலகத்தின் கொடிகம்பத்தில் கிளை செயலாளர் ஜியாவுதீன், கிழக்கு கடற்கரை சாலையின் கொடிகம்பத்தில் நம்புதாளை நகர் துணை தலைவர் சாகுல் ஹமீது, குத்பா பள்ளி கொடிகம்பத்தில் நம்புதாளை நகர் செயலாளர் கலபத்த சகுபர் சாதிக், தொண்டி செக்போஸ்ட் கொடிகம்பத்தில் தொண்டி நகர் செயலாளர் ரிஸ்வான், வட்டாணம் சாலை கொடிகம்பத்தில் தொண்டி நகர் துணை தலைவர் பாதுஷா, கடற்கரை எதிரே மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான், தொண்டி அருகே உள்ள ஆர்.எஸ். மங்கலத்தில் புகாரி ஆகியோர் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    இதில் தொகுதி அமைப்பு செயலாளர் நாசர் அலி, பொருளாளர் அப்துல் மஜீத், சமூக ஊடக அணியின் மாவட்ட செயலாளர் முஜாஹிதீன், தொண்டி மேற்கு கிளை செயலாளர் ஹீசைன், மேலும் அன்சார் அலி, பாதுஷா, ஹாஜா, அஸ்கர், ஹபீப், அர்ஷத், ராவுத்தர் ஆலிம், அப்ரீத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×