என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sambhai Soren"

    • மருத்துவமனைக்கு ரூ.1000 கோடி செலவில் பழங்குடியினரின் நிலங்கள் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்,
    • மாநிலத்தில் பழங்குடியினர் குறிவைக்கப்படுவதாகவும், அவர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டால் அவர்களின் உயிர்கள் பறிக்கப்படுவதாகவும் சோரன் குற்றம் சாட்டினார்.

    ராஞ்சியில் அரசு மருத்துவமனைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக பழங்குடி அமைப்புகள் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான சம்பாய் சோரன் இன்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

    சம்பாய் சோரனின் மகன் பாபுலால் சோரனும் அவரது ஆதரவாளர்களும் ராஞ்சிக்கு செல்லும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். ராஞ்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    பழங்குடி அமைப்புகளின் போராட்டங்களைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பாய் சோரன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக ராஞ்சி நகர டிஎஸ்பி கே.வி. ராமன் தெரிவித்தார்.

     முன்னதாக, சம்பாய் சோரன் செய்தியாளர் சந்திப்பில், ஹேமந்த் சோரன் அரசாங்க பழங்குடியினரின் நிலங்களை ஆக்கிரமித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

    ராஞ்சி நக்ரி பகுதியில் உள்ள ரிம்ஸ்-2 மருத்துவமனைக்கு ரூ.1000 கோடி செலவில் பழங்குடியினரின் நிலங்கள் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்டதாகவும், நிலங்களை காலி செய்ய அவர்களுக்கு எந்த இழப்பீடும வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

    மாநிலத்தில் பழங்குடியினர் குறிவைக்கப்படுவதாகவும், அவர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டால் அவர்களின் உயிர்கள் பறிக்கப்படுவதாகவும் சம்பாய் சோரன் குற்றம் சாட்டினார்.  

    • அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உத்தரவு.
    • ஜார்கண்டில் முதல்வர் பதவியை தக்க வைத்தார் சம்பாய் சோரன்.

    ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை நிலக்கரி ஊழல் மற்றும் பணமோசடி வழக்கில், அமலாக்கத்துறை கைது செய்தது.

    ஹேமந்த் சோரன் கைதான நிலையில், சம்பாய் சோரன் முதல்வராக பதவி ஏற்றார்.

    தொடர்ந்து, சம்பாய் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார்.

    இந்நிலையில், ஜார்க்ண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், சம்பாய் சோரன் அரசு வெற்றி பெற்றுள்ளது.

    அதன்படி, ஜார்கண்ட் சட்டபேரவையில் மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், சம்பாய் சோரன் அரசுக்கு 47 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இதன்மூலம், முதல்வர் பதவியை தக்க வைத்தார் சம்பாய் சோரன்.

    • சம்பாய் சோரனின் திடீர் டெல்லி பயணம் வதந்திகளுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்தது.
    • 'ஒரே நாளில் 30,000, முதல் 40,000 பேர் வரை கூட திரண்டு வருவார்கள்'

    ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா முக்கியத் தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதால் சம்பாய் சோரன் முதல் மந்திரியாகப் பதவி ஏற்றார். அவர் பிப்ரவரி 2-ம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரை ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரியாக இருந்தார்.

    இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி சம்பாய் சோரன் பா.ஜ.க.வில் இணையப் போவதாக வதந்திகள் பரவின. மேலும் சம்பாய் சோரனின் திடீர் டெல்லி பயணம் வதந்திகளுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்தது. ஆனால் தான் சொந்த வேலையாகவே டெல்லி வந்துள்ளதாகச் சம்பாய் சோரன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

    மேலும் அவரது எக்ஸ் பதிவில், கட்சித் தலைமை தன்னை அவமதித்து விட்டது.எனது பதவிக்காலத்தில் கடமைகளை முழு அர்ப்பணிப்புடன் செய்தேன். ஒரு முதலமைச்சரின் நிகழ்ச்சிகளை வேறொருவர் ரத்து செய்வதைவிட ஜனநாயகத்தில் அவமானம் வேறு இருக்கமுடியுமா?தனது கட்சி தன்னை அவமதித்து விட்டதாகவும் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவது, தனிக்கட்சி தொடங்குவது அல்லது வசதியான வேறு ஒரு துணையுடன் இணைந்து பயணிப்பது என அனைத்து சாய்ஸ்களும் என் முன் உள்ளன என்றும் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில்தான் புது கட்சி தொடங்கும் முடிவை சம்பாய் சோரன் அறிவித்துள்ளார். டெல்லியில் இருந்து ஜார்கண்ட் திரும்பியுள்ள சம்பாய் சோரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,'என்னுடைய அரசியல் வாழ்க்கையில் இனி புதிய அத்தியாயம் தொடங்க உள்ளது. நான் அரசியலிலிருந்து ஒருபோதும் விலகப் போவது இல்லை. என்னுடைய ஆதரவாளர்கள் எனக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்குகின்றனர். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியுடனான எனது அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டது. புதிதாக ஒன்றை [அரசியல் கட்சியை] நான் தொடங்க உள்ளேன்' என்று தெரிவித்தார்.

    ஜார்கண்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் புதிய கட்சி தொடங்க நிறைய நேரம் இல்லையே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சம்பாய் சோரன், அது உங்களின் பிரச்சனை இல்லை, ஒரே நாளில் 30,000, முதல் 40,000 பேர் வரை கூட திரண்டு வருவார்கள், அப்படி இருக்கும்போது புதிதாக [கட்சி] தொடங்குவதில் எனக்கு என்ன பிரச்சனை.

    ஒரே வாரத்துக்குள் ஒரே வாரத்துக்குள் புதிய அரசியல் கட்சி தொடங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் புதிய கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் நான் ஈடுபடுவேன். இந்த பயணத்தில் பயணத்தில் புதிய நண்பர்கள் கிடைத்தால் [கூட்டணி] அவர்களுடன் இணையவும் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

    ×