என் மலர்
இந்தியா

பழங்குடியினர் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து போராட்டம் - வீட்டுக்காவலில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர்
- மருத்துவமனைக்கு ரூ.1000 கோடி செலவில் பழங்குடியினரின் நிலங்கள் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்,
- மாநிலத்தில் பழங்குடியினர் குறிவைக்கப்படுவதாகவும், அவர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டால் அவர்களின் உயிர்கள் பறிக்கப்படுவதாகவும் சோரன் குற்றம் சாட்டினார்.
ராஞ்சியில் அரசு மருத்துவமனைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக பழங்குடி அமைப்புகள் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான சம்பாய் சோரன் இன்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
சம்பாய் சோரனின் மகன் பாபுலால் சோரனும் அவரது ஆதரவாளர்களும் ராஞ்சிக்கு செல்லும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். ராஞ்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பழங்குடி அமைப்புகளின் போராட்டங்களைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பாய் சோரன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக ராஞ்சி நகர டிஎஸ்பி கே.வி. ராமன் தெரிவித்தார்.
முன்னதாக, சம்பாய் சோரன் செய்தியாளர் சந்திப்பில், ஹேமந்த் சோரன் அரசாங்க பழங்குடியினரின் நிலங்களை ஆக்கிரமித்து வருவதாக குற்றம் சாட்டினார்.
ராஞ்சி நக்ரி பகுதியில் உள்ள ரிம்ஸ்-2 மருத்துவமனைக்கு ரூ.1000 கோடி செலவில் பழங்குடியினரின் நிலங்கள் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்டதாகவும், நிலங்களை காலி செய்ய அவர்களுக்கு எந்த இழப்பீடும வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மாநிலத்தில் பழங்குடியினர் குறிவைக்கப்படுவதாகவும், அவர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டால் அவர்களின் உயிர்கள் பறிக்கப்படுவதாகவும் சம்பாய் சோரன் குற்றம் சாட்டினார்.






