ஜார்கண்ட் சட்டப்பேரவை- நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் வெற்றி

அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உத்தரவு.ஜார்கண்டில் முதல்வர் பதவியை தக்க வைத்தார் சம்பாய் சோரன்.
ஜார்கண்ட் சட்டப்பேரவை- நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் வெற்றி
Published on

ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை நிலக்கரி ஊழல் மற்றும் பணமோசடி வழக்கில், அமலாக்கத்துறை கைது செய்தது.

ஹேமந்த் சோரன் கைதான நிலையில், சம்பாய் சோரன் முதல்வராக பதவி ஏற்றார்.

தொடர்ந்து, சம்பாய் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஜார்க்ண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், சம்பாய் சோரன் அரசு வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி, ஜார்கண்ட் சட்டபேரவையில் மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், சம்பாய் சோரன் அரசுக்கு 47 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம், முதல்வர் பதவியை தக்க வைத்தார் சம்பாய் சோரன்.

X

Maalai Malar
www.maalaimalar.com