search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடியேற்று விழா"

    • தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடியினை பல்வேறு முக்கிய இடங்களில் பாவரசு ஏற்றி வைத்தார்.
    • முக்கிய சாலையில் ஊர்வலமாக சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    உடுமலை,அக்.3-

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம் உடுமலை யூனியன் ஆபீஸ் அருகே திறக்கப்பட்டது.கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி கட்சி முதன்மை செயலாளர் ஏ.சி. பாவரசு திறந்து வைத்தார். முன்னதாக காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு முக்கிய சாலையில் ஊர்வலமாக சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதனை தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடியினை பல்வேறு முக்கிய இடங்களில் பாவரசு ஏற்றி வைத்தார்.

    திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதிஷ் குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு திருப்பூர் மண்டல துணை செயலாளர் ஜல்லிபட்டி முருகன், கிறிஸ்தவ சமூக நீதி பேரவை மாநில துணை செயலாளர் கிப்டன் டேவிட் பால், எல்எல்எப்., அரசு போக்குவரத்து கழகம் மாநில துணைச் செயலாளர் சிடிசி சத்தியமூர்த்தி, துப்புரவு பணியாளர்கள் மேம்பட்டு மைய மாநில துணை செயலாளர் விடுதலைமணி, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொன் ஈஸ்வரன், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் சயீத் இப்ராஹிம், உடுமலை ஒன்றிய செயலாளர் தம்பி மகாலிங்கம், உடுமலை நகர பொறுப்பாளர் பொன் சக்திவேல்,உடுமலை நகர செயலாளர் ரவிக்குமார் , குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் முத்துசாமி, மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் சிட்டி பாபு ,மகளிர் விடுதலை இயக்கம் லட்சுமி,ராமாத்தாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெரியநாயகி அம்மன் சன்னதியில் விமர்சியாக நடைபெற்றது.
    • மங்கள வாத்தியத்துடன் வேத மந்திரம் முழங்க கொடியேற்று விழா நடைபெற்றது.

    கடலூர்: 

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தொடர்ந்து வருடந்தோறும் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் சன்னதியில் 10 நாட்கள் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த நிலையில் இன்று 13-ந் தேதி (வியாழக்கிழமை) ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா பெரியநாயகி அம்மன் சன்னதியில் விமர்சியாக நடைபெற்றது .இதனை முன்னிட்டு காலையில் பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மங்கள வாத்தியத்துடன் வேத மந்திரம் முழங்க கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து தினந்தோறும் காலை, மாலை பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெறுகிறது. பின்னர் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. முக்கிய விழாவான ஆடிப்பூரத் திருவிழா வருகிற ஜூலை 22-ந்தேதி பெரிய நாயகி அம்மன் சன்னதியில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. அன்று காலை அம்மனுக்கு வாசனை திரவியங்கள் மற்றும் அபிஷேகப் பொருட்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்று வளையலணி திருவிழா விமர்சையாக நடைபெற உள்ளது. அன்றைய தினம் அம்மனுக்கு மாங்கல்ய பொருள்களான மஞ்சள், மஞ்சள் கயிறு, வளையல் குங்குமம் உள்ளிட்டவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். விழாவி ற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவா மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். பூஜைக்கான ஏற்பாடுகளை நாகராஜ் குருக்கள் தலைமையில் ராகேஷ் குருக்கள் உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர். 

    • ஒன்றிய து.தலைவர் ராஜலிங்கம் ஒன்றிய செயலாளர் மணி ஆகியோர் ஏற்பாட்டில் கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் பாஸ்கர் கலந்து கொண்டார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வடக்கு ஒன்றியம், பிக்கிலி ஊராட்சியில் உள்ள தன்டுகாரனஹள்ளி பிக்கிலி, பிக்கிலி கூட்ரோடு ஆகிய 3 ஊர்களில் பா.ஜ.க. ஒன்றிய தலைவர் சிவலிங்கம் தலைமையில் மாவட்ட ஓ.பி.சி. அணி செயலாளர் கல்யாண சுந்தரம் மற்றும் ஒன்றிய து.தலைவர் ராஜலிங்கம் ஒன்றிய செயலாளர் மணி ஆகியோர் ஏற்பாட்டில் கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் பாஸ்கர் கலந்து கொண்டார்.

    மேலும் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஐஸ்வர்யம் முருகன், வெங்கட்ராஜ், மாவட்ட செயலாளர் குமார், பட்டியல் அணி மாவட்ட தலைவர் களிர்கண்ணன், ஐ.டி பிரிவு மகேஷ் பாபு, லட்சுமி, ஒன்றிய பொதுச் செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய பொருளாளர் பச்சையப்பன், ஓ.பி.சி. அணி ஒன்றிய தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர் மாதேஷ், சிவக்குமார், இளைஞரணி ராமகிருஷ்ணன், மருத்துவபிரிவு பூவரசன், தொழில் பிரிவு சிவக்குமார், கலை மற்றும் கலாச்சார பிரிவு மாவட்ட செயலாளர் காளி மற்றும் அணி பிரிவு நிர்வாகிகள் மற்றும் கிளைத் தலைவர்கள் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

    • விழாவிற்கு பா.ம.க. மாவட்ட அமைப்பு தலைவர் எஸ்.மதியழகன் தலைமை வகித்தார்.
    • பா.ம.க. தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் வன்னியர் சங்க கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே உள்ள சேக்காண்டஅள்ளியில் வன்னியர் சங்க கொடி ஏற்று விழா நடை பெற்றது.

    விழாவிற்கு கம்பைநல்லூர் பேரூராட்சி துணைத் தலைவரும், பா.ம.க. மாவட்ட அமைப்பு தலைவருமான எஸ்.மதியழகன் தலைமை வகித்தார்.

    மொரப்பூர் ஒன்றிய குழு துணை தலைவர் சி.வன்னிய பெருமாள், பேரூராட்சி கவுன்சிலர்கள் முருகம்மாள் மாது, அஜந்தா சண்முகம் ,ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சங்கர் வரவேற்று பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் பா.ம.க. தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் வன்னியர் சங்க கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    விழாவில் மதிவாணன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் நாராயணன், அம்பிகா கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் துரை, பூமி சமுத்திரம், அருள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார். விழாவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

    • அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தி.மு.க. கொடியினை ஏற்றி வைத்து கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.
    • இதற்கான ஏற்பாடுகளை நகர்மன்ற உறுப்பினர் அர்ஜுன் செய்திருந்தார்.

    உடுமலை

    உடுமலை நகராட்சி 3-வது வார்டில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நடந்தது. அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தி.மு.க. கொடியினை ஏற்றி வைத்து கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட திமுக., செயலாளர் இல. பத்மநாபன், நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ,உடுமலை நகர செயலாளர் வேலுச்சாமி, நகர் மன்ற தலைவர் மத்தீன், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக., பொருளாளர் முபாரக் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஷியாம்பிரசாத், தலைமை பொதுக்குழு உறுப்பினர் யுஎன்பி., குமார் ,துணை தலைவர் கலைராஜன் ,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட, நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நகர்மன்ற உறுப்பினர் அர்ஜுன் செய்திருந்தார்.

    • சத்துணவு ஊழியர் சங்க கொடியேற்று விழா நடந்தது.
    • ஒன்றிய துணைத் தலைவர் கார்த்திகா ராணி நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி ஒன்றிய சத்துணவு ஊழியர் சங்க அமைப்பு தினத்தையொட்டி கொடியேற்று விழா யூனியன் அலுவலகத்தில் நடந்தது.

    அதன்பின் அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகளிர் குழுவினரிடம், சத்துணவு பணியாளர்கள், சத்துணவு சமையல் கூட சாவியை ஒப்படைக்க சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் மனு வழங்கினர்.

    சங்கத்தின் ஒன்றிய தலைவர் சூசைநாதன் தலைமையில் செயலாளர் பிச்சையம்மாள் கோரிக்கை விளக்கமளித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மூர்த்தி. துணைத் தலைவர் மகேந்திரன் மற்றும் சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய துணைத் தலைவர் கார்த்திகா ராணி நன்றி கூறினார்.

    • 30-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கட்சிக் கொடியேற்று விழா நடைபெற்றது.
    • மாவட்ட செயலாளர் வி.ஏ.பாலமுரளி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கட்சிக்கொடி ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    ஓசூர்,

    ஓசூரில் ம.தி.மு.கவின் 30-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கட்சிக் கொடியேற்று விழா நடைபெற்றது.

    ஓசூர்-பாகலூர் சாலையில் கே.சி.சி, நகர் சந்திப்பில் நடந்த விழாவிற்கு, ஓசூர் நகர பொறுப்பாளர் ஈழம் குமரேசன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் வி.ஏ.பாலமுரளி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கட்சிக்கொடி ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    இதில், கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர். முன்னதாக, ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

    • கொடியேற்று விழாவிற்கு சுப்பாராஜ் தலைமை தாங்கினார்.
    • மாநில துணைப் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கொடியேற்றி வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் கீதாலயா தியேட்டர் ரோட்டில் ம.தி.மு.க. 30-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சுப்பாராஜ் தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சங்கரன்கோவில் நகர செயலாளர் ரத்னவேல் குமார் வரவேற்று பேசினார். மாநில துணைப் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கொடியேற்றி வைத்தார்.

    விழாவில் மாநில இளைஞரணி துணை செயலாளர் இசக்கியப்பன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் முகம்மது ஹக்கீம், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாசலபதி, மகளிர் அணி அமைப்பாளர் ஜெயலட்சுமி, ஒன்றிய செயலாளர் சசி முருகன், நகர துணைச் செயலாளர் ராஜேஸ்வரி இசக்கியப்பன், மாவட்ட பிரதிநிதிகள் ராமலிங்கசாமி, அய்யனார் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மக்கள் நீதிமய்யம் கட்சியின் தொழிற்சங்க கொடியேற்று விழா நடந்தது.
    • மண்டல செயலாளர் வழக்கறிஞர் அழகர், கொடியற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    மதுரை

    உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதிமய்யம் கட்சியின் தொழிற்சங்க பேரவை சார்பில் மதுரை பெத்தானியாபுரத்தில் பொதுமக்களுக்கு படிப்பகம் மற்றும் தொழிற்சங்க கொடி ஏற்றி பழங்கள் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரை மண்டல செயலாளர் வழக்கறிஞர் அழகர், கொடியற்றி விழாவை தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் சொக்கர், பேரவை மண்டல அமைப்பாளர் சரவணன், 62-வது வட்டச் செயலாளர் ஆரான் ஆகியோர் செய்திருந்தனர்.

    மாவட்டச் செயலாளர்கள் முனியசாமி, மணி, பிச்சைமணி தொழிலாளர் அணி மண்டல அமைப் பாளர்-தொழிலாளர்கள் அணி மாவட்ட அமைப் பாளர்கள் பாண்டியன், மயில்ராஜ், ரமேஷ் மற்றும் அணியின் மண்டல அமைப் பாளர்கள் செல்லப்பாண்டி, சிவபாலகுரு, கிருஷ்ண குமார், பத்மா, ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மின் அமைப்பாளர்கள் சங்க கொடியேற்று விழா நடந்தது.
    • செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் மின்சார அலுவலகம் முன்பு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்க அலங்காநல்லூர் கிளை சார்பில் தொழிலாளர் தினத்தையொட்டி கொடியேற்று விழா நடந்தது.

    தலைவர் ரவி தலைமை தாங்கினார். கவுரவ தலைவர்கள் அலிமுதின், சுப்பாரயலு, செயலாளர் வெள்ளைகங்கை, பொருளாளர் ஆனந்த் முன்னிலை வகித்தனர். கவுரவ ஆலோசகர் விநாயக ராஜா வரவேற்றார்.

    அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து சங்கத்தின் பெயர் பலகை திறக்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    மாவட்ட பிரதிநிதி ஜெயபிரகாஷ், சத்தியசீலன் ஆகியோர் நன்றி கூறினர்.

    • தி.மு.க. சார்பில் மே தின விழா நடந்தது.
    • தொழிற்சங்க சட்ட ஆலோசகர் தங்கசாமி முன்னிலை வகித்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள மறவன்குளம் தனியார் ஆலை முன்பு தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா நடந்தது. மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் கலந்து கொண்டு தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து பேசினார். தொழிற்சங்க சட்ட ஆலோசகர் தங்கசாமி முன்னிலை வகித்தார். தலைவர் லட்சுமணன், செயலாளர் கொடி. சந்திரசேகரன், பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் வரவேற்றனர் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டியன், திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், ஒன்றிய செயலாளர்கள் தங்கப்பாண்டி, முத்துராமன், நிர்வாகிகள் சின்னசாமி, செல்வம், திருக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை வாடிப்பட்டி ஜெமினி பூங்கா முன்பு மூவேந்தர் முன்னேற்ற கழக கொடியேற்று விழா நடந்தது.
    • மாவட்ட செயலாளர் செந்தில்பாண்டி தலைமை தாங்கினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி ஜெமினி பூங்கா முன்பு மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தந்தை மாரியப்ப வாண்டையாரின் நினைவு தினம் மற்றும் பி.கே.மூக்கையா தேவர் நூற்றாண்டு விழாவையொட்டி கொடியேற்று விழா நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்பாண்டி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் நாகராஜன், மாநில இணை தலைவர் ஆறுமுக நாட்டார், மாவட்ட தலைவர் கணேசன் முன்னிலை வகித்துனர்.

    மாவட்ட இளைஞரணி செயலாளர் கணேசன் வரவேற்றார். தென் மண்டல தலைவர் குஷி செந்தில் கொடியேற்றினார். மறத்தமிழர் சேனை மாநில துணை பொதுச்செயலாளர் ஆதி முத்துக்குமார், மாவட்ட செயலாளர் மருதுபாண்டி, நிர்வாகிகள் வையாபுரி, கருப்பையா, முத்துமணி, சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் மருதுபாண்டி நன்றி கூறினார்.

    ×