சத்துணவு ஊழியர் சங்க கொடியேற்று விழா

சத்துணவு ஊழியர் சங்க கொடியேற்று விழா நடந்தது. ஒன்றிய துணைத் தலைவர் கார்த்திகா ராணி நன்றி கூறினார்.
சத்துணவு ஊழியர் சங்க கொடியேற்று விழா
Published on

வாடிப்பட்டி

வாடிப்பட்டி ஒன்றிய சத்துணவு ஊழியர் சங்க அமைப்பு தினத்தையொட்டி கொடியேற்று விழா யூனியன் அலுவலகத்தில் நடந்தது.

அதன்பின் அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகளிர் குழுவினரிடம், சத்துணவு பணியாளர்கள், சத்துணவு சமையல் கூட சாவியை ஒப்படைக்க சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் மனு வழங்கினர்.

சங்கத்தின் ஒன்றிய தலைவர் சூசைநாதன் தலைமையில் செயலாளர் பிச்சையம்மாள் கோரிக்கை விளக்கமளித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மூர்த்தி. துணைத் தலைவர் மகேந்திரன் மற்றும் சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய துணைத் தலைவர் கார்த்திகா ராணி நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com