குன்னூரில் தி.மு.க. கொடியேற்று விழா

உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாள் விழா. நகர இளைஞர் அணி அமைப்பாளர் ஏற்பாட்டில் நடைபெற்றது.
குன்னூரில்  தி.மு.க. கொடியேற்று விழா
Published on

ஊட்டி :

தி.மு.க இளைஞர் அணி மாநில செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாள் விழா குன்னூரில் இளைஞர் அணி சார்பில் நகர இளைஞர் அணி அமைப்பாளர் பத்மநாபன் ஏற்பாட்டில் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் தலைமைவகித்து கொடியேற்றி, இனிப்புகள் வழங்கினார். நகர செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். நிகழ்சியில் நகர அவை தலைவர் தாஸ், நகர துணை செயலாளர் வினோத்குமார், பொருளாளர் ஜெகநாத், நகர மன்ற உறுப்பினர்கள் நாகராஜ், ஜெகநாதன் ராபர்ட், குமரேசன், கோபிசாந், சந்திரன், வசந்தி, காவேரி, செல்வி, உமா மற்றும் நிர்வாகிகள் சிவா, பாலாஜி, சுரேஷ், ஹரி, விவேக், சதீஷ், மதி, அல்தாப், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com