search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Namakkal news"

    பரமத்திவேலூர் வேளாண் விற்பனை கூடத்தில் ரூ.41.67 லட்சத்துக்கு பொருட்கள் விற்பனை ஆனது.
    பரமத்தி வேலூர்:

    பரமத்திவேலூர் அருகே சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டுவருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. 

    இதில் அருகில் உள்ள கரூர் ஒன்றியம்,  பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணை நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 41.43½குவிண்டால் எடை கொண்ட 11ஆயிரத்து 755 தேங்காய்கள் விற்பனைக்கு வந்தன. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.24.05-க்கும், குறைந்த விலையாக ரூ.17.15-க்கும், சராசரி விலையாக ரூ.23.15-க்கும் என்று ரூ 86ஆயிரத்து 915-க்கு விற்பனை ஆனது.

    அதேபோல் 134.90½ குவிண்டால் எடை கொண்ட 297மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.83.89-க்கும், குறைந்த விலையாக ரூ.82.10-க்கும், சராசரி விலையாக ரூ.83.60-க்கும் மற்றும் 2-ம் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.82.20-க்கும், குறைந்த விலையாக ரூ.71.19-க்கும், சராசரி விலையாக ரூ.80.10க்கும் என்று ரூ.10லட்சத்து 93ஆயிரத்து 159க்கு விற்பனை ஆனது.

    254.10½ குவிண்டால் எடை கொண்ட 254மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.114.18-க்கும், குறைந்த விலையாக ரூ.92.88-க்கும், சராசரி விலையாக ரூ.105.61க்கும் மற்றும் சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.112.79-க்கும், குறைந்த விலையாக ரூ.90.11-க்கும், சராசரி விலையாக ரூ.103.61-க்கும் என ரூ.26 லட்சத்து 3ஆயிரத்து 268க்கும், அதேபோல 56.21 ½ குவிண்டால் எடை கொண்ட 168மூட்டைநிலக்கடலை  விற்பனைக்கு வந்தது. 

    நிலக்கடலை காய் அதிக விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ 71.30-க்கும், குறைந்த விலையாக ரூ 60.16- க்கும் சராசரி விலையாக 70.10-க்கும் என ரூ10லட்சத்து 43 ஆயிரத்து 946-க்கு ஏலம் போனது. தேங்காய், தேங்காய் பருப்பு,எள், நிலக்கடலை காய் ஆகியவை அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்மொத்தமாக ரூ.41லட்சத்து 67ஆயிரத்து 141க்கு விற்பனை ஆனது.



    நவலடிபட்டி பகவதி அம்மன் கோவிலில் தேர் திருவிழா தொடங்கியது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம்  நவலடிபட்டி ஸ்ரீபகவதிஅம்மன் மற்றும் ஸ்ரீஅங்கண்ணன் கோவில் தேர் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

     திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து வந்து பகவதிஅம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்தனர்.

     பின்னர்ஸ்ரீ பகவதிஅம்மனுக்கு 1008 டஜன் வளையல் அலங்காரம் செய்யப்பட்டு மாவிளக்கு பூஜை நடைபெற்றது.  தேர் அலங்காரம் செய்யப்பட்டு தேரில் அம்மன் சிலை வைக்கப்பட்டு  திருவீதியுலா நடைபெற்றது.

     அதை தொடர்ந்து அக்னி சட்டி எடுத்தல்,  அலகு  குத்துதல், கிடா வெட்டு பூஜை நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கிய பிரமுகர்களும், ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.

    குமாரபாளையத்தில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, குமாரபாளையம் செந்தூர் பவுண்டேசன் ஆகியவை  சார்பில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கான இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் வேதாந்தபுரம் சித்தி விநாயகர் கோயில் மண்டபத்தில் செந்தூர் பவுண்டேசன் இயக்குனர் கலாவதி தலைமையில் நடந்தது. 

    இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி மற்றும் செயலர் விஜய்கார்த்திக், மாவட்ட உரிமையியல் நீதிபதி சக்திவேல் பங்கேற்று இலவச சட்ட விழிப்புணர்வு குறித்து பேசினர். பெண்களுக்கான சட்டம் சார்ந்த கேள்விகளுக்கும் பதில்கள் கூறினார்கள். 

    இதில் விபத்தை தவிர்போம் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் சாலைகளில் விபத்து இல்லாமல் நாம் எப்படி பயணம் செல்லலாம் எனும் தலைப்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுய  உதவிக்குழுவினருக்கும், பொதுமக்களுக்கும் பரிசும் சான்றிதழ்கள்  வழங்கப்பட்டன. இதில் இணை செயலர் மணிகண்டன், விபத்தை தவிர்போம் விழிப்புணர்வு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பூபதிராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    குமாரபாளையம் அருகே ஆதரவற்றோர் மையத்தில் சமூக நலத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் எதிர்மேடு அன்னை ஆதரவற்றோர் மையத்தில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி கீதா ஆய்வு செய்தார். 

    ஆய்வின்போது மையத்தில் எத்தனை ஆதரவற்றவர்கள் உள்ளனர்? அவர்களுக்கு முறையாக உணவு 3 வேலையும் வழங்க–படுகிறதா? மையம் நடத்த தேவையான ஆவணங்கள் தயார் நிலையில் உள்ளதா? என்பது குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது ஆதரவற்றோர் மைய நிர்வாகி ஹேமமாலினி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
    குமாரபாளையம் அருகே ஆதரவற்றோர் மையத்தில் சமூக நலத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் எதிர்மேடு அன்னை ஆதரவற்றோர் மையத்தில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி கீதா ஆய்வு செய்தார். 

    ஆய்வின்போது மையத்தில் எத்தனை ஆதரவற்றவர்கள் உள்ளனர்? அவர்களுக்கு முறையாக உணவு 3 வேலையும் வழங்க–படுகிறதா? மையம் நடத்த தேவையான ஆவணங்கள் தயார் நிலையில் உள்ளதா? என்பது குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது ஆதரவற்றோர் மைய நிர்வாகி ஹேமமாலினி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
    மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தொழிலாளி படுகாயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்தனர்.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம்  குமாரபாளையம் அருகே உள்ள ஆனங்கூர் ரோடு பழைய அஞ்சல் அலுவலகம் அருகே வசிப்பவர் சுரேஷ் (வயது 30). கட்டிட கூலி தொழிலாளி. 

    இவர் தனது மொபட் வாகனத்தில் ஒட்டன்கோவில் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி திடீரென மொபட்  மீது மோதியது. இதில்  சுரேஷ் பலத்த காயமடைந்தார். 

    இதையடுத்து அவர் குமாரபாளையம்  அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரித்ததில் லாரி டிரைவர் திருச்சியை சேர்ந்த (சுரேஷ் 45), என்பது தெரியவந்தது. லாரி டிரைவர் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

    கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நாமக்கல்:

    தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது:-
    டெல்டா பாசனத்துக்காக, மேட்டூர் அணையில் இருந்து, வழக்கமாக ஜூன் மாதத்தில் தான் தண்ணீர் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு, தமிழக முதல்வர் முன்கூட்டியே தண்ணீர் திறந்துள்ளார். விவசாயிகள் சார்பில் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். 

    கூட்டுறவு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில், விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கும் போது, 50 சதவீதம் உரங்கள் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர், அவ்வாறு நிர்ப்பந்தம் செய்யக்கூடாது. விவசாயிகள் விரும்பியபடி உரங்கள் வழங்குவதுடன், மீதம் உள்ள தொகையை, சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு ரொக்கமாக வழங்கினால், உற்பத்தி செலவுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சேலம், நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு நடைபெற்றதாக கூறி, விவசாயிகளுக்கு பயிர் கடன்கள் வழங்குவது திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி உடனடியாக விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்க வேண்டும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளைள நீர்வளத்துறை, வருவாய்த்துறை மூலம் முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுத்து, தூர் வாரவேண்டும்.

    தமிழக அரசு, தேர்தல் வாக்குறுதியில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,000 வழங்குவதாக உறுதி அளித்தது. ஆனால், டன் ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக ரூ. 150 மட்டுமே வழங்கி, டன் ஒன்றுக்கு ரூ. 2,900 மட்டுமே விலையாக வழங்கப்படுகிறது. 

    தற்போது, உற்பத்தி செலவு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வெட்டுக்கூலியும் அதிக அளவு உயர்ந்துள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு, 2022–23ம் அரவை பருவத்துக்கு டன் ஒன்றுக்கு ரூ. 5,000 ஆக விலையை உயர்த்தி வழங்க வேண்டும். பால் கொள்முதல் விலையை உயர்த்தி பசும்பால் லிட்டருக்கு ரூ. 50, எருமைப்பால் லிட்டர் ரூ. 60 வீதம் வழங்க வேண்டும்.

    குமாரபாளையம் 3,9-வது வார்டுகளில் நகராட்சி சேர்மன் ஆய்வு செய்தார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் பொறுப்பேற்ற நாள் முதல் தினமும் ஒவ்வொரு வார்டாக சென்று ஆய்வு செய்து, தேவைப்படும் அத்தியாவசிய பணிகள் மேற்ெகாள்ள நடவடிக்கை எடுத்து வருகிறார். 

    நேற்று 9-வது வார்டு ராஜம் தியேட்டர் பகுதியில் ஆய்வு சேர்மன் விஜய்கண்ணன் செய்தார். வார்டு கவுன்சிலர் விஜயா மற்றும் அப்பகுதி மக்கள் சாலை வசதி, வடிகால், குடிநீர் குழாய் உள்ளிட்ட பணிகள் செய்து தர கேட்டுக்கொண்டனர். 

    இதையடுத்து அவர் அதிகாரிகளை வரவழைத்து, பணிகளை மேற்கொள்ளுமாறு  சேர்மன் அறிவுறுத்தினார். அதே போல் 3-வது வார்டிலும் ஆய்வு செய்தார். அப்போது கவுன்சிலர் வேல்முருகன் உடனிருந்தார்.
    பொத்தனூர் மகாமாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள‌ பொத்தனூர் மகா மாரியம்மன் கோயில் திருத்தேர் மற்றும் பூக்குண்ட திருவிழா கடந்த 8-ந் தேதி கம்பம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 9-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    15-ந் தேதி மறு காப்பு கட்டுதலும்,16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை சிம்மம்,ரிஷபம், அன்னபட்சி,பூதகி, யானை மற்றும் குதிரை வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    22-ந் தேதி வடிசோறு நிகழ்ச்சியும், 23-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் அம்மன் ரதம் ஏறுதலும், மாலை 4 மணிக்கு திருத்தேர் வீதி வழியாக  உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் தொடர்ந்து சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலை சேர்ந்தது. 

    நேற்று மாலை தீக்குண்டத்தில் இறங்கும் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் தயாராக இருந்த தீக்குண்டத்தில் ஆண் பக்தர்கள் இறங்கியும், பெண்கள் பூ போட்டும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.இன்று (புதன்கிழமை) காலை பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும் , அலகு குத்துதியும் ஊர்வலமாக சென்றனர்.

    இன்று இரவு வாண வேடிக்கை நடைபெறுகிறது. நாளை காலை கம்பம் பிடுங்கி காவிரி ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சியும், கிடா வெட்டும் நிகழ்ச்சியும்,27-ந் தேதி மஞ்சள் நீராடலும்,28-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும், 29, மற்றும் 30-ந் தேதி முதற்கால மற்றும் 2-ம் கால யாக பூஜையும், அன்னபாவாடை மற்றும் மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. 

    விழாவிற்கான ஏற்பாடுகளை பொத்தனூர் மகா மாரியம்மன் கோவில் அறக்கட்டளையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர். எந்தவித அசம்பா விதங்களும் ஏற்படாத வகையில் பரமத்தி வேலூர் போலீஸ் டி.எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் மின் விபத்துகள் ஏற்படாமல் இருக்க மின்வாரிய ஊழியர்கள் ஆங்காங்கே மின் கம்பிகளை துண்டித்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    குமாரபாளையம் அருகே அரசு பஸ்சை வழிமறித்து டிரைவரை தாக்கிய நபர் கைது செய்தனர்.
    குமாரபாளையம்:

    ஈரோடு மாவட்டம் பாசூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 51). அரசு பஸ் டிரைவர். நேற்று முன்தினம் இரவு 9.15 மணியளவில் கே.2 என்ற அரசு பஸ்  குமாரபாளையத்திலிருந்து பள்ளிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை விஸ்வநாதன் ஓட்டினார்.

    குப்பாண்டபாளையம்  பஸ் நிறுத்தம் அருகே  ெமாபட்டில் வந்த குமாரபாளையம் அம்மன் நகரை சேர்ந்த கார் டிரைவர் சுந்தரம்  (53) திடீரென அரசு பஸ்சை வழிமறித்தார்.

     பின்னர் சுந்தரம்  அந்த பஸ்சில் ஏறி , டிரைவர் விஸ்வநாதனை தகாத வார்த்தையில் பேசி, முகத்தில் பலமாக தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.  இதில் விஸ்வநாதன் பலத்த காயமடைந்தார். 

    இது குறித்து விஸ்வநாதன் குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தியதில் , சுந்தரத்தின் உறவுக்கார பெண் ஒருவர் பஸ்சில் கூட்டமாக இருந்ததால் பஸ்சில் ஏற முடியவில்லை. 

    இது பற்றி அந்த பெண் சுந்தரத்திடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தரம்  அரசு பஸ் டிரைவரை சரமாரியாக தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரத்தை கைது செய்தனர்.
    சாயக்கழிவு நீரை வெளியேற்றிய 11 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
    பள்ளிப்பாளையம்:

    நாமக்கல் மாவட்டம்  பள்ளிப்பாளையம் பகுதியில் செயல்படும் சாய ஆலைகளில், பெரும்பாலானவை சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றுகின்றன. இவற்றை ஆற்றில் கலப்பதால்  சுத்தமான  தண்ணீர் மாசடைகிறது.

    இந்த தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்கள், அலர்ஜி, புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் கால்நடைகளும், மீன்களும் பாதிக்கப்படுகின்றன.

    வழக்கமாக மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் அடிக்கடி நேரில் வந்து ஆய்வு நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் சமீபகாலமாக எடுப்பதில்லை.  இதனால்    சென்னை மாசுகட்டுபாட்டுவாரிய தலைமை அலுவலகத்தின் உத்தரவின் பேரில் குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள்,  விதி மீறி செயல்பட்ட சாய ஆலைக்கு மின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இதன் தொர்ச்சியாக நேற்று முன்தினம் பள்ளிப்பாளையத்தில் சமயசங்கிலி, ஆவத்திபாளையம், களியனூர் சுற்றுவட்டாரத்தில்   11 சாய ஆலைகளுக்கும்  மாசுகட்டுபாட்டுவாரியம் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சேர்ந்து 11 சாய ஆலைகளுக்கும்  சீல் வைத்து, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    நாமகிரிபேட்டையில் ரூ.60 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் நடந்தது.
    ராசிபுரம்:

    நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் ஆர். சி. எம். எஸ். சங்கத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. 

    இந்த ஏலத்தில் ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சள் ஏலம் எடுத்தனர். 

    இதில் விரலி ரகம் 1, 000 மூட்டைகளும், உருண்டை ரகம் 350 மூட்டைகளும், பனங்காலி ரகம் 40 மூட்டைகளும் கொண்டு விற்பனைக்காக வரப்பட்டு இருந்தன.

    ஒரு குவிண்டால் விரலி ரகம் குறைந்தபட்சம் ரூ. 6, 365 முதல் அதிகபட்சமாக ரூ. 8, 989-க்கும் ஏலம் போனது. இதேபோன்று உருண்டை ரகம் குறைந்தபட்சம் ரூ. 5, 743-க்கும் அதிகபட்சமாக ரூ. 7, 369-க்கும் ஏலம் போனது.

    பனங்காலி ரகம் குறைந்தபட்சம் ரூ. 10, 112-க்கும், அதிகபட்சமாக ரூ. 16, 012-க்கும் ஏலம் விடப்பட்டது. நேற்று நடந்த ஏலத்தில் 1, 390 மஞ்சள் மூட்டைகள் ரூ. 60 லட்சத்திற்கு விற்பனையானது.
    ×