search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவிழா"

    மதுரை மாவட்டம் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
    மதுரை

    108 வைணவ தலங்களில் ஒன்றாக மதுரை மாவட்டம் திருமோகூரில் உள்ள  காளமேக பெருமாள் கோவில் விளங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் வைகாசி பெருந்திருவிழா விமரிசையாக நடை பெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா இன்று (4-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதை முன்னிட்டு இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி யருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்ய ப்பட்டது. தொடர்ந்து 10:30 மணி முதல் 11 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை கள் நடந்தன. அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று தொடங்கி 14-ந் தேதி வரை நடக்கும் திரு விழாவில் தினமும் காலை மாலை சிம்மம், யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பெருமாள் தேவியருடன் வலம் வந்து அருள் பாலிக்கிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான தேரோட்டம் வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கி ழமை) நடக்கிறது. அலங்கரிக்கப்பட்ட தேரில் காளமேகப்பெருமாள் மற்றும் அம்பாள் எழுந்த ருளியபின் 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். அன்று இரவு 7 மணிக்கு தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    13-ந் தேதி திருமஞ்சனம் நடக்கிறது. 14-ந் தேதி பகல் 12 மணிக்கு உற்சவ சாந்தி பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் ஆணையர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.
    ஜெயங்கொண்டநாதர் கோவிலில் உள்ள வியாசர் லிங்கத்துக்கும், ஸ்ரீ மகாவிஷ்ணுவுக்கும் திரட்டுப்பால் ஆராதனை செய்து அதை யானையின் மீது ஏற்றி ராஜகோபாலசுவாமிக்கு ஊர்வலமாக எடுத்து வந்து நெய்வேத்தியம் செய்யப்பட்டது.
    மன்னார்குடியில் திரட்டுப்பால் ஆராதனை விழா நடந்தது. மன்னார்குடி பாமணிஆற்றின் வடகரையில் உள்ள ஜெயங்கொண்டநாதர் கோவிலில் உள்ள வியாசர் லிங்கத்துக்கும், ஸ்ரீ மகாவிஷ்ணுவுக்கும் திரட்டுப்பால் ஆராதனை செய்து அதை யானையின் மீது ஏற்றி ராஜகோபாலசுவாமிக்கு ஊர்வலமாக எடுத்து வந்து நெய்வேத்தியம் செய்யப்பட்டது.

    இதை நினைவு கூறும் வகையில் மன்னார்குடியில் கடந்த 17 ஆண்டுகளாக செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி அறக்கட்டளை சார்பில் திரட்டுப்பால் ஆராதனை விழா நடத்தப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் 18-வது ஆண்டாக வைகாசி மாத ரோகிணி நட்சத்திரத்தை யொட்டி நடத்தப்பட்ட இவ்விழாவில், மன்னார்குடி ஜெயங்கொண்ட நாதர் கோவிலில் ஆராதனை செய்யப்பட்ட திரட்டுப்பால் ராஜகோபால சுவாமி கோவில் யானை செங்கமலத்தின் மீது ஏற்றி, ராஜகோபால சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    எல்லை கட்டும் விழாவையொட்டி தேரடி தெருவில் பிடாரி அம்மன் சிலை வைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், சிறப்பு அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது.
    கடலூர் திருப்பாதிரிபுலியூரில் பிரசித்திபெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி திருவிழா நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டு களாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை.

    இந்த ஆண்டுக்கான விழா வருகிற 5-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள பிடாரி அம்மன் எல்லை கட்டும் விழா நடந்தது. முன்னதாக வண்ணாரப்பாளையத்தில் உள்ள மாரியம்மன் உற்சவம் நடைபெற்றது.

    எல்லை கட்டும் விழாவையொட்டி தேரடி தெருவில் பிடாரி அம்மன் சிலை வைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், சிறப்பு அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது. இரவு 12 மணி அளவில் தேரடி தெருவில் இருந்து அண்ணாபாலம் சிக்னல் வரையிலும், வண்டிபாளையம் சாலையில் இருந்து சுப்புராயலுசெட்டி தெரு, போடிசெட்டிதெரு பகுதியிலும் பக்தர்கள் தீ பந்தங்கள், அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை ஏந்தி வந்தனர். அதன் பின்னர் எல்லை கட்டும் விழா நடந்தது.

    இன்று (30-ந் தேதி) அமர்ந்தவாலி உற்சவமும், இரவு 10 மணி அளவில் பிடாரி அம்மன் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 3-ந் தேதி பிடாரி அம்மன் வீதி உலாவும், 4-ந் தேதி விக்னேஷ்வர பூஜை நடக்கிறது. 5-ந் தேதி பாடலீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து இரவு பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடக்கிறது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் ஆன்மீக சொற்பொழிவு நடைபெறும். மேலும் 13-ந் தேதி தேர்திருவிழா நடைபெற உள்ளது.
    திருப்பரங்குன்றம் அருகே உள்ள உச்சிக் கருப்பணசாமி கோவிலில் ஆண் பக்தர்கள் மட்டும் திரண்டு இருந்து சுவாமிக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை படைத்து வழிபட்ட வினோத திருவிழா நடந்தது.
    திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் செல்லும் வழியில் உச்சிக் கருப்பணசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுாமிக்கு உருவம் கிடையாது. ஆனால் பெரிய அளவில் 2 கல்தூண்கள் கருவறையாக அமைந்து உள்ளது. அதன் மையத்தில் சுமார் 5 அடி உயரம் உள்ள 2 அரிவாள் உள்ளது. மேலும் காற்று ஓசைக்கு ஒலித்து கொண்டே இருக்ககூடிய ஏராளமான மணிகள் உள்ளன. இந்த கோவிலில் பாரம்பரியமாக தொன்று தொட்டு ஆண் பக்தர்கள் மட்டுமே வழிபட்டு வருகிறார்கள்.

    கோவிலுக்கு வந்து செல்லக்கூடிய ஒவ்வொரு பக்தரும் அவரவர் நெற்றியில் விபூதியை பூசிக்கொள் கிறார்கள். அதே சமயம் கோவிலை விட்டு வெளியேறும்போது நெற்றியில் பூசிய விபூதியை அழித்துவிட்டுசெல்கிறார்கள். மேலும் பெண்கள் கண்களுக்கு தெரியக்கூடாது என்பதால் சாமிக்கு படைக்க கூடிய பழங்களை கோவிலை விட்டு வெளியே கொண்டு செல்லக்கூடாது.

    இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் ஒரு வெள்ளிக் கிழமை அன்று கனிகள் மாற்றும் திருவிழா தொன்றுதொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் பெரியரத வீதியில் உள்ள சாமிபெட்டி இருக்கும் இடத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வாழைப் பழங்கள், மாம்பழங்கள் மற்றும் பலாபழங்கள் ஆகிய முக்கனிகளை ஒரு டிராக்டரில் வைத்து ஊர்வலமாக புறப்பட்டு உச்சிக்கருப்பணசாமி கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர்உச்சிக்கால வேளையில் சாமிக்கு குவியலாக முக்கனிகள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண் பக்தர்கள் திரண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
    12 சிவபெருமான்களும் தங்களுடைய தேவியருடன் ஒருசேர நாங்கூர் மதங்கீஸ்வரர் கோவிலில் மதங்க மகரிஷி என்பவருக்கு காட்சி அளிக்கும் வைபவம் ரிஷபாரூட சேவையாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
    சீர்காழி அருகே நாங்கூர் கிராமத்தில் உள்ள மதங்கீஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுப்புறங்களில் நம்புவாருக்கு அன்பர் சாமி கோவில், சுந்தரேஸ்வரர் கோவில், அமிர்தபுரீஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவில், நயனிபுரம் நயன வரதேஸ்வரர் கோவில், அல்லிவிளாகம் நாகநாதர் கோவில், திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் கோவில், மங்கைமடம் யோகநாதன் கோவில், காத்திருப்பு சொர்ணபுரீஸ்வரர் கோவில், அன்னப்பன்பேட்டை கலிகாமேஸ்வரர் கோவில், பெருந்தோட்டம் ஐராவதேஸ்வரர் கோவில் என 12 சிவபெருமான் கோவில்கள் உள்ளன.

    இந்த 12 சிவபெருமான்களும் தங்களுடைய தேவியருடன் ஒருசேர நாங்கூர் மதங்கீஸ்வரர் கோவிலில் மதங்க மகரிஷி என்பவருக்கு காட்சி அளிக்கும் வைபவம் ரிஷபாரூட சேவையாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, இந்த ஆண்டு நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை விநாயகர் பூஜையுடன் தொடங்குகிறது.

    30-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில் 12 சிவபெருமானும் மதங்கீஸ்வரர் கோவிலில் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத்தொடர்ந்து ஜெப ஹோமமும், அபிஷேக ஆராதனைகளும் நடக்கின்றன. இரவு 7 மணி அளவில் 12 சிவபெருமானுக்கும் ஒருசேர திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு 10 மணி அளவில் 12 சிவபெருமானும் நந்தி பகவானுடன் மதங்க மகரிஷிக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சியும் பின்னர் வீதிஉலாவும் நடக்கின்றன.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள், பொறுப்பாளர்கள் மற்றும் கிராமமக்கள் செய்து வருகின்றனர்.
    மதுரை ஊராட்சி செயலர் கொலையில் கோவில் திருவிழாவில் முதல் மரியாதை கிடைக்காததால் கொன்றோம் கைதானவர்கள் வாக்கு மூலம்.
    மதுரை

    மதுரை வரிச்சியூர் அடுத்த தட்சனேந்தல் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது52) இவர்இடைய பட்டி ஊராட்சி செயலாளராகவும், கருப்புக்கால் காளியம்மன் கோவில் பூசாரியாகவும் இருந்து வந்தார். 

    இந்த நிலையில் லட்சுமணனை நேற்று அதிகாலை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இதுதொடர்பாக கருப்பாயூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.   

    லட்சுமணன் மனைவி வள்ளியிடம் விசாரணை செய்த போது, “நான் நேற்று காலை வீட்டில் இருந்தேன். அப்போது எனது கணவர் அரிவாள் வெட்டு காயங்களுடன் கிடப்பதாக தகவல் கிடைத்தது. 

    இதனையடுத்து நான் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றேன். அப்போது எனது கணவர்   வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அவரிடம் ‘உங்களை யார் வெட்டியது?’ என்று கேட்டேன். 

    அதற்கு அவர் கணேசனின் மகன்கள் சரத்குமார், சிங்கராஜ் மற்றும் மணிகண்டன் ஆகிய 3 பேரும் தன்னை சரமாரியாக வெட்டியதாக தெரிவித்து மயங்கி விழுந்தார்.
     
    நாங்கள் அவரை உடனடியாக மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். ஆனாலும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார் என்றார்.
    இதுபற்றி கருப்பாயூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் 3 பேரையும் தேடி வந்தனர்.

    இதில் 3 பேரும் கருப்பாயூரணி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார்   சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். 
    பின்னர் கைதான 3 பேரும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர்.அப்போது அவர்கள் கூறியதாவது:- 

    இடையப்பட்டி ஊராட்சி செயலாளராக இருந்த லட்சுமணன், கருப்புக்கால் காளியம்மன் கோவிலில் பூசாரியாகவும் இருந்து வந்தார். எனவே அவருக்கு கோவிலில் பாரம்பரிய வழக்கப்படி முதல் மரியாதை தரப்பட்டு வந்தது. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். 

    இதையடுத்து ஊர் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது  லட்சுமணன் இருக்கும் வரை, அவருக்குத்தான் கோவிலில் முதல் மரியாதை என்று ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர். எனவே நாங்கள் அவரை கொலை செய்ய  முடிவு செய்தோம்.

    அவர் தினமும் காலை நேரத்தில் கருப்புக்கால் கோவிலுக்கு  செல்வது வழக்கம். எனவே நாங்கள் தச்சனேந்தல் ரோட்டில்  ஆயுதங்களுடன் தயாராக இருந்தோம். அப்போது லட்சுமணன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.  அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டோம். அப்போது அவர் எங்களை அடிக்க பாய்ந்தார். இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டோம். 

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    பொத்தனூர் மகாமாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள‌ பொத்தனூர் மகா மாரியம்மன் கோயில் திருத்தேர் மற்றும் பூக்குண்ட திருவிழா கடந்த 8-ந் தேதி கம்பம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 9-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    15-ந் தேதி மறு காப்பு கட்டுதலும்,16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை சிம்மம்,ரிஷபம், அன்னபட்சி,பூதகி, யானை மற்றும் குதிரை வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    22-ந் தேதி வடிசோறு நிகழ்ச்சியும், 23-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் அம்மன் ரதம் ஏறுதலும், மாலை 4 மணிக்கு திருத்தேர் வீதி வழியாக  உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் தொடர்ந்து சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலை சேர்ந்தது. 

    நேற்று மாலை தீக்குண்டத்தில் இறங்கும் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் தயாராக இருந்த தீக்குண்டத்தில் ஆண் பக்தர்கள் இறங்கியும், பெண்கள் பூ போட்டும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.இன்று (புதன்கிழமை) காலை பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும் , அலகு குத்துதியும் ஊர்வலமாக சென்றனர்.

    இன்று இரவு வாண வேடிக்கை நடைபெறுகிறது. நாளை காலை கம்பம் பிடுங்கி காவிரி ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சியும், கிடா வெட்டும் நிகழ்ச்சியும்,27-ந் தேதி மஞ்சள் நீராடலும்,28-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும், 29, மற்றும் 30-ந் தேதி முதற்கால மற்றும் 2-ம் கால யாக பூஜையும், அன்னபாவாடை மற்றும் மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. 

    விழாவிற்கான ஏற்பாடுகளை பொத்தனூர் மகா மாரியம்மன் கோவில் அறக்கட்டளையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர். எந்தவித அசம்பா விதங்களும் ஏற்படாத வகையில் பரமத்தி வேலூர் போலீஸ் டி.எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் மின் விபத்துகள் ஏற்படாமல் இருக்க மின்வாரிய ஊழியர்கள் ஆங்காங்கே மின் கம்பிகளை துண்டித்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    காரைக்காலில் அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் அசுரனை வதம் செய்யும் புராண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    காரைக்காலை அடுத்த அம்ப கரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மகிஷ சம்ஹார பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது தேவர்களையும், மக்களையும் கொடுமை செய்த அசுரன் அம்பரனை பத்ரகாளியம்மன் சம்ஹாரம் செய்த புராண நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் இந்த விழா நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, அம்பாள் புஷ்ப பல்லக்கு வீதியுலா நேற்று நள்ளிரவு நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று மதியம் 12 மணிக்கு மகிஷ சம்ஹார நினைவு வைபவம் கோவிலில் நடைபெற்றது.

    பின்னர் பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பாலாறு அன்னை ரதயாத்திரைக்கு ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனம் மற்றும் உலக சிவனடியார்கள் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    வேலூரில் பாலாறு பெருவிழா அடுத்த மாதம் (ஜூன்) 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பாலாறு அன்னை ரதயாத்திரை தொடக்கவிழா வேலூர் தங்கக்கோவிலில் கடந்த 14-ந் தேதி நடந்தது. இதற்கு சத்திஅம்மா தலைமை தாங்கி ரகத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆரத்தி காண்பித்து தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து ரதம் கர்நாடக மாநிலம் நந்தி துர்க்கம் மலைக்கு சென்று அங்கு தீர்த்தம் பெற்றது. அதன்பின்னர் ரதம் திருப்பத்தூர் மாவட்டம் கனகநாச்சியம்மன் கோவில், வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா, பொய்கை வழியாக வேலூருக்கு வந்தடைந்தது. பாலாறு அன்னை ரதயாத்திரைக்கு ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனம் மற்றும் உலக சிவனடியார்கள் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதையொட்டி ஜலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம், ருத்ரவேள்வி, பஞ்சமூர்த்திகள் அபிஷேகம், திருவாசக விண்ணப்பம், ஆன்மிக சொற்பொழிவு, பாலாற்று அன்னையின் வரலாறு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கு கலவை சச்சிதானந்தா சுவாமிகள், செங்காநத்தம் பகவதி சித்தர் சுவாமிகள் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    மாலை 6 மணியளவில் மேள, தாளங்கள் முழங்க பாலாறு அன்னை ரதயாத்திரை ஊர்வலம் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்து புறப்பட்டு வேலூர் மண்டித்தெரு, மெயின்பஜார், பில்டர்பெட்சாலை, அண்ணாசாலை வழியாக சென்று மீண்டும் கோவிலில் நிறைவடைந்தது. இதில் திரளான சிவனடியார்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ×