என் மலர்
முகப்பு » tag 332952
நீங்கள் தேடியது "நபர்"
குமாரபாளையம் அருகே அரசு பஸ்சை வழிமறித்து டிரைவரை தாக்கிய நபர் கைது செய்தனர்.
குமாரபாளையம்:
ஈரோடு மாவட்டம் பாசூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 51). அரசு பஸ் டிரைவர். நேற்று முன்தினம் இரவு 9.15 மணியளவில் கே.2 என்ற அரசு பஸ் குமாரபாளையத்திலிருந்து பள்ளிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை விஸ்வநாதன் ஓட்டினார்.
குப்பாண்டபாளையம் பஸ் நிறுத்தம் அருகே ெமாபட்டில் வந்த குமாரபாளையம் அம்மன் நகரை சேர்ந்த கார் டிரைவர் சுந்தரம் (53) திடீரென அரசு பஸ்சை வழிமறித்தார்.
பின்னர் சுந்தரம் அந்த பஸ்சில் ஏறி , டிரைவர் விஸ்வநாதனை தகாத வார்த்தையில் பேசி, முகத்தில் பலமாக தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் விஸ்வநாதன் பலத்த காயமடைந்தார்.
இது குறித்து விஸ்வநாதன் குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தியதில் , சுந்தரத்தின் உறவுக்கார பெண் ஒருவர் பஸ்சில் கூட்டமாக இருந்ததால் பஸ்சில் ஏற முடியவில்லை.
இது பற்றி அந்த பெண் சுந்தரத்திடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தரம் அரசு பஸ் டிரைவரை சரமாரியாக தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரத்தை கைது செய்தனர்.
×
X