search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகாம்"

    • இந்த முகாம் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும்.
    • ஓய்வூதியதாரா் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்துக்கான சிறப்பு முகாம்கள் இன்று தொடங்கி தொடா்ந்து 3 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறியதாவது:

    தஞ்சை மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வது தொடா்பாக தமிழக முதல்வா் அறிவிப்பின்படி இன்று சிறப்பு முகாம்கள் தொடங்கி நடந்து வருகிறது.

    இந்த முகாம் நாளை (சனிக்கிழமை ) மற்றும் நாளை மறுநாள் 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும்.

    இந்த முகாம்களில் விடுபட்ட விண்ணப்ப தாரா்கள் மற்றும் வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள், ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும், இந்திரா காந்தி முதியோா் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டம், அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோா் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரா் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பேளூர் பேரூராட்சியில் தூய்மை மக்கள் இயக்க விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் பேளூர் பேரூராட்சியில் தமிழக முதல்-அமைச்சரின் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம், தீவிர தூய்மைப்பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்   நடைபெற்றது. 

    இந்த முகாமை பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயசெல்வி  பேளூர் பேரூராட்சி பகுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி  தொடங்கி வைத்தார். 

    துணைத் தலைவர் பேபி, செயல் அலுவலர் ராமு மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் தீவிர தூய்மைப்பணி மேற்கொண்டு குப்பைகளை தரம் பிரித்து அப்புறப்படுத்தினர்.
    குமாரபாளையத்தில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    குமாரபாளையம்:

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மூலமாக ஆய்வு செய்ததில், நாமக்கல் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 201 குழந்தைகள் வயதிற்கேற்ற எடையின்மை, உயரமின்மை மற்றும் மெலிவு தன்மை ஆகிய குறைபாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    கடந்த மே 24ந் தேதி முதல் ஒரு மாதத்திற்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, இது போன்ற குழந்தைகளுக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்க தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கண்ணகி நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    குமாரபாளையத்தில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, குமாரபாளையம் செந்தூர் பவுண்டேசன் ஆகியவை  சார்பில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கான இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் வேதாந்தபுரம் சித்தி விநாயகர் கோயில் மண்டபத்தில் செந்தூர் பவுண்டேசன் இயக்குனர் கலாவதி தலைமையில் நடந்தது. 

    இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி மற்றும் செயலர் விஜய்கார்த்திக், மாவட்ட உரிமையியல் நீதிபதி சக்திவேல் பங்கேற்று இலவச சட்ட விழிப்புணர்வு குறித்து பேசினர். பெண்களுக்கான சட்டம் சார்ந்த கேள்விகளுக்கும் பதில்கள் கூறினார்கள். 

    இதில் விபத்தை தவிர்போம் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் சாலைகளில் விபத்து இல்லாமல் நாம் எப்படி பயணம் செல்லலாம் எனும் தலைப்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுய  உதவிக்குழுவினருக்கும், பொதுமக்களுக்கும் பரிசும் சான்றிதழ்கள்  வழங்கப்பட்டன. இதில் இணை செயலர் மணிகண்டன், விபத்தை தவிர்போம் விழிப்புணர்வு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பூபதிராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    விருதுநகரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக வாரந்தோறும்  வெள்ளிக்கிழமைகளில்  தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி  படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக நாளை   (வெள்ளிக்கிழமை) காலை 10  மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இதில் 25 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ கல்வித் தகுதி உடையவர்களை விருதுநகர், சிவகாசி, கோவை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். 

    இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் நாளை நடைபெறும்  வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in  என்ற இணையதளதத்pல் கல்வித்தகுதியை பதிவு செய்து விட்டு வரவேண்டும்.

    முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும்.

    தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×