search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரமத்திவேலூர்"

    கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு திருச்சி வாழை ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலதுறை சார்பில் வருகிற 6,7,8 ஆகிய தேதிகளில்  திருச்சி வாழை ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

    மேலும் வேளாண்மை சார்ந்த இடங்களுக்கு கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை மூலம் அழைத்து செல்ல உள்ளனர். விருப்பம் உள்ள விவசாயிகள்   உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம். இதில் இருக்கூர், பிலிக்கல்பாளையம், அ.குன்னத்தூர் ஊராட்சிப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    எனவே கபிலர்மலை வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை உதவி இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.
    அ.குன்னத்தூர் மகாமாரியம்மன் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் அ.குன்னத்தூரில் எட்டு பட்டி கிராமத்துக்கு சொந்தமான மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆனதால் மகா மாரியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற   உள்ளது. 

    அதன் காரணமாக கோவில் திருப்பணிகள் நடைபெற உள்ளதால் சாமி சிலைகளுக்கு பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாலாலத்திற்காக கோவில் வளாகத்தில் அக்னி குண்டம் அமைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

     இதில் புரோகிதர்கள் கலந்துகொண்டு ஹோமம் செய்து யாகம் வளர்த்தனர். பின்னர் சிறப்பு பூஜையுடன் அம்மன் உட்பட சாமிகள் பாலாலயம் செய்யப்பட்டு சாமி சிலைகளையும் எடுத்து அருகாமையில் உள்ள ஒரு இடத்தில் வைக்கப்பட்டது. 

    இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் யாகம் மற்றும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பரமத்தி மற்றும் கபிலர்மலை வட்டார உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு மண் மாதிரி சேகரித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பரமத்தி மற்றும் கபிலர்மலை வட்டார உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு கட்ட முறையில் மண் மாதிரி சேகரித்தல் பற்றிய பயிற்சி நடந்தது. பயிற்சியினை நாமக்கல் வேளாண்மை உதவி இயக்குனர்( தரக்கட்டுப்பாடு)செல்வி தொடங்கி வைத்தார். 

    பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் சவுந்தராஜன் ஆகியோர் மண்மாதிரிகள் சேகரிக்கும் முறைகள், கிராம வரைபடங்களில் கட்ட முறை அளவீடு செய்தல் ஆய்வு செய்தல் பற்றி எடுத்துக் கூறினர். 

    இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை பரமத்தி வட்டார வேளாண்மை அலுவலர் பாபு மற்றும் உதவி அலுவலர்கள் நாகராஜ், பூபதி, ரகுபதி, கவுசல்யா மற்றும் பிரபு ஆகியோர் செய்து இருந்தனர்.

    பரமத்திவேலூர் வேளாண் விற்பனை கூடத்தில் ரூ.41.67 லட்சத்துக்கு பொருட்கள் விற்பனை ஆனது.
    பரமத்தி வேலூர்:

    பரமத்திவேலூர் அருகே சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டுவருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. 

    இதில் அருகில் உள்ள கரூர் ஒன்றியம்,  பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணை நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 41.43½குவிண்டால் எடை கொண்ட 11ஆயிரத்து 755 தேங்காய்கள் விற்பனைக்கு வந்தன. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.24.05-க்கும், குறைந்த விலையாக ரூ.17.15-க்கும், சராசரி விலையாக ரூ.23.15-க்கும் என்று ரூ 86ஆயிரத்து 915-க்கு விற்பனை ஆனது.

    அதேபோல் 134.90½ குவிண்டால் எடை கொண்ட 297மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.83.89-க்கும், குறைந்த விலையாக ரூ.82.10-க்கும், சராசரி விலையாக ரூ.83.60-க்கும் மற்றும் 2-ம் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.82.20-க்கும், குறைந்த விலையாக ரூ.71.19-க்கும், சராசரி விலையாக ரூ.80.10க்கும் என்று ரூ.10லட்சத்து 93ஆயிரத்து 159க்கு விற்பனை ஆனது.

    254.10½ குவிண்டால் எடை கொண்ட 254மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.114.18-க்கும், குறைந்த விலையாக ரூ.92.88-க்கும், சராசரி விலையாக ரூ.105.61க்கும் மற்றும் சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.112.79-க்கும், குறைந்த விலையாக ரூ.90.11-க்கும், சராசரி விலையாக ரூ.103.61-க்கும் என ரூ.26 லட்சத்து 3ஆயிரத்து 268க்கும், அதேபோல 56.21 ½ குவிண்டால் எடை கொண்ட 168மூட்டைநிலக்கடலை  விற்பனைக்கு வந்தது. 

    நிலக்கடலை காய் அதிக விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ 71.30-க்கும், குறைந்த விலையாக ரூ 60.16- க்கும் சராசரி விலையாக 70.10-க்கும் என ரூ10லட்சத்து 43 ஆயிரத்து 946-க்கு ஏலம் போனது. தேங்காய், தேங்காய் பருப்பு,எள், நிலக்கடலை காய் ஆகியவை அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்மொத்தமாக ரூ.41லட்சத்து 67ஆயிரத்து 141க்கு விற்பனை ஆனது.



    பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் திருத்தேர் மற்றும் பூ மிதி திருவிழா கம்பம் நடுதலுடன் கடந்த 8-ந் தேதி‌ தொடங்கியது. 

    விழாவை தொடர்ந்து 14-ந் தேதி வரை தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    15-ந் தேதி மறு காப்பு கட்டுதலும்,16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை சிங்கம்,காமதேனு, அன்னம் மற்றும் காளை வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன் தினம்  வடிசோறு நிகழ்ச்சியும், நேற்று மாலை திருத்தேர்  முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதில் பாண்டமங்கலம் பேரூராட்சித் தலைவர் டாக்டர் சோமசேகர், துணைத்தலைவர் முருகவேல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலை சேர்ந்தது.

    இன்று மாலை பூமிதி விழாவும், நாளை புதன்கிழமை பொங்கல், மாவிளக்கு பூஜையும்,நாளை மறுநாள் வியாழக்கிழமை கிடா வெட்டும் நிகழ்ச்சியும், 27-ந் தேதி வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராடலும், 28-ந் தேதி சனிக்கிழமை இரவு அம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் தேர்திருவிழா குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.
    வேலகவுண்டம்பட்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்தார்.
    பரமத்திவேலூர்,:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே எறையம்பட்டி ஆதிதிராவிடர் தெரு காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 55), கூலித்தொழிலாளி. இவருக்கு 4 மகள்கள் உள்ளனர் .இதில் இருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. திருமணம் ஆகாத 2 மகள்கள் வீட்டில் இருந்து வருகின்றனர். 

    இந்நிலையில் பழனிசாமிக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இவர் பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் வீட்டில் இருந்து வந்தார். 

    இந்நிலையில் பழனிசாமி நேற்று  வீட்டிலிருந்த  மருந்தை எடுத்து குடித்து விட்டார். தனது மகளுக்கு போன் மூலம் அவரே தகவல் சொன்னதால் மகள்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து அதன் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி உயிரிழந்தார்.இதுகுறித்து வேலகவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பரமத்தி வேலூர் பகுதிகளில் தேங்காய் சிரட்டை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், கபிலர்மலை, பரமத்தி, கந்தம்பாளையம், மணியனூர், நல்லூர், சோழசிராமணி, பெருங்குறிஞ்சி, ஆனங்கூர், பிலிக்கல்பாளையம், அண்ணாநகர், செல்லப்பம்பாளையம், கபிலக் குறிச்சி, கவுண்டம் பாளையம், சிறுநல்லி கோவில், கொத்தமங்கலம், சுள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர்.

    தென்னை மரத்தில் தேங்காய் விளைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் தேங்காயைப் பறித்து மட்டைகளை அகற்றிவிட்டு முழு தேங்காயை உடைத்து தேங்காய்க்குள் உள்ள தேங்காய் பருப்புகளை எடுத்து காய வைத்து விற்பனை செய்து வருகின்றனர். அதே போல் தேங்காய் பருப்பு எடுத்த பின் தேங்காய் சிரட்டை கைகளை குவித்து வைத்து அப்பகுதி களுக்கு வரும் வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். 

    வாங்கிய தேங்காய் சிரட்டைகளை தேங்காய்சிரட்டை மூலம் கரி தயார் செய்பவர்களுக்கும், தேங்காய் சிரட்டையை அரைத்து பவுடர் தயாரிக்கும் மில்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். பலர் தேங்காய் சிரட்டைகள் மூலம் உண்டியல், பொம்மைகள் என பல்வேறு வகையான பொருட்களை தயார் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ 8-க்கு விற்பனையானது. இந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது தேங்காய் சிரட்டை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×