search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகராட்சி"

    • சட்டம் 1997-ன்படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    • இந்திய தண்டனைச் சட்டம் 289-ன்படியும் பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம் 11 (எச்)-ன்படியும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஆவடி:

    பூந்தமல்லி நகராட்சி பகுதிகளில் கால்நடைகளை வளர்த்து வரும் பொது மக்கள் தங்களது மாடுகளை மாட்டு கொட்டகையில் கட்டி வளர்த்து முறையாகப் பராமரித்து கொள்ள வேண்டும்.

    தவறும் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்யவும், மீறுபவர்கள் மீது விலங்குகள் மற்றும் பறவைகள் (கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை விதிகள்) சட்டம் 1997-ன்படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    சட்டத்தை மீறும் நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 289-ன்படியும் பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம் 11 (எச்)-ன்படியும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பூந்த மல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் கால்நடை வளர்ப்பு கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நகரசபை தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் ஸ்ரீதர், ஆணையர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கால்நடை உரிமையாளர்களுக்கு மேற்கண்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் அறிவுரைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் குழு உறுப்பினர்களான போலீஸ் அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர், கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்டு கால்நடை உரிமையாளர்களுக்கு கால்நடைகளை சாலையில் திரியவிடாமல் முறையாக வளர்ப்பது குறித்தும், கால் நடைகளால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் அறிவுரைகள் வழங்கினர்.

    வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் விவரத்தை பதிவு செய்ய வேண்டும் என நகராட்சி தலைவர் தகவல் தெரிவித்தார்.
    கீழக்கரை

    ராமேசுவரம் வடகாடு கிராமத்தில் இருந்து பாசி சேகரிக்க சென்ற மீனவ பெண்ணை ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்து கொலை செய்தனர். இதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வேலைக்காக தங்கியிருக்கும் வடமாநில இளைஞர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    கீழக்கரை நகராட்சி தலைவர் செஹனாஸ் ஆபிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட இடங்களில் குடியிருக்கும் வெளிமாநில நபர்கள் மற்றும் வெளிமாநில நபர்களை வைத்து வீடு கட்டும் கட்டிட உரிமையாளர்கள், கட்டிட என்ஜினியர்கள், கட்டிட காண்டிராக்டர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள், பானிபூரி மற்றும் குல்பி ஐஸ் தொழில் செய்து வருபவர்கள், உள்ளூர் வாசிகள் மூலமாக வேலை பார்க்கும் வெளிமாநில நபர்களின் பெயர், வயது, புகைப்படம், ஆதார் அட்டை, கைபேசி எண், தற்போது வேலை செய்து வரும் நிறுவனத்தின் பெயர், தற்போதைய முகவரி நிறுவனத்தின் உரிமையாளர் பெயர், நிறுவன உரிமையாளரின் ஆதார் எண், மொபைல் எண், தற்போதைய இருப்பிட முகவரி ஆகிய விபரங்களை கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் வருகிற 
    15-ந் தேதிக்குள் சமர்ப்பித்து பதிவு செய்யப்பட வேண்டும். 

    தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    குமாரபாளையம் 3,9-வது வார்டுகளில் நகராட்சி சேர்மன் ஆய்வு செய்தார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் பொறுப்பேற்ற நாள் முதல் தினமும் ஒவ்வொரு வார்டாக சென்று ஆய்வு செய்து, தேவைப்படும் அத்தியாவசிய பணிகள் மேற்ெகாள்ள நடவடிக்கை எடுத்து வருகிறார். 

    நேற்று 9-வது வார்டு ராஜம் தியேட்டர் பகுதியில் ஆய்வு சேர்மன் விஜய்கண்ணன் செய்தார். வார்டு கவுன்சிலர் விஜயா மற்றும் அப்பகுதி மக்கள் சாலை வசதி, வடிகால், குடிநீர் குழாய் உள்ளிட்ட பணிகள் செய்து தர கேட்டுக்கொண்டனர். 

    இதையடுத்து அவர் அதிகாரிகளை வரவழைத்து, பணிகளை மேற்கொள்ளுமாறு  சேர்மன் அறிவுறுத்தினார். அதே போல் 3-வது வார்டிலும் ஆய்வு செய்தார். அப்போது கவுன்சிலர் வேல்முருகன் உடனிருந்தார்.
    நகராட்சி அதிகாரிகள் அலட்சியத்தால் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரிப்பு.
    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு மீண்டும் நாளுக்கு நாள் அதிகரிப்பதால்  மண்வளம் பாதிப்பதோடு நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று விடும் அபாயம் உள்ளது.
     
    கடந்த காலங்களில் அனைத்து தேவைகளுக்கும் துணி பைகளையே மக்கள் பயன்படுத்தி வந்தனர். கால மாறுபாட்டின் காரணமாக சிறிய பெட்டிகடைகள் முதல் பெரிய மளிகை கடைகள் வரை பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிகரித்து சஞ்சய்விட்டது. பிளாஸ்டிக் பைகள் மக்கும் திறன் இல்லாததால் இந்த பைகள் மண்ணில் மக்காமல் புதையுண்டு நிலத்தடிநீர் தேங்குவதை தடுக்கிறது. மேலும் மண் வளத்தையும் பாதிக்கச்செய்கிறது.

    தற்போது பிளாஸ்டிக் கப் மற்றும் பாட்டில்கள் நாள் ஒன்றுக்கு டன் கணக்கில் குவிகிறது. இந்த பிளாஸ்டிக் குப்பைகள் மண்ணில் புதையுண்டு மண் வளத்தை பாதிக்க செய்கிறது. மேலும் வெளியிடங்களில் மது அருந்துபவர்கள் ஆங்காங்கே பிளாஸ்டிக் கப்புகளை விட்டு செல்வதால் வயல்காடுகள் முதல் அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகரித்து விட்டது. 

    இனிவரும் காலங்களில் இந்த பிளாஸ்டிக் பொருள்களால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும். 
    பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் சென்றடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 

    இதன் காரணணமாக பிளாஸ்டிக் பயன்பாடு 95 சதவீதம் குறைந்தது. தற்போது கீழக்கரையில் நகராட்சி அதிகாரிகள்  பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்டு கொள்ளாமல் உள்ளனர். 

    இதை சாகமாக்கிய சில வியாபாரிகள் மீண்டும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வருகின்றனர்.ஆகவே பிளாஸ்டிக் பைகள் தாரளமாக புழக்கத்தில் உள்ளது. பிளாஸ்டிக் பாதிப்பின் தன்மை உணர்ந்து இதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    ×