என் மலர்
செய்திகள்

காட்பாடியில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி
காட்பாடி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகம் உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
வேலூர்:
காட்பாடியில் கல்புதூர், பர்னீஷ்புரம், ஆசிரியர் காலனி விரிவு பகுதி, செங்குட்டை ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் கூட்டம், கூட்டமாக சுற்றி வருகின்றன.
இதனால் பொதுமக்கள், குழந்தைகள் தெருக்களில் நடந்து செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனர். மேலும் வாகனங்களில் பொதுமக்கள் செல்லும் போது நாய்கள் விரட்டி செல்வதாகவும், இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் கூறகின்றனர்.
எனவே மாநகராட்சி ஊழியர்கள் நாய்களை பிடித்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத வேறு பகுதிகளில் கொண்டு விடும்படி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story






