search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக்
    X
    பிளாஸ்டிக்

    பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரிப்பு

    நகராட்சி அதிகாரிகள் அலட்சியத்தால் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரிப்பு.
    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு மீண்டும் நாளுக்கு நாள் அதிகரிப்பதால்  மண்வளம் பாதிப்பதோடு நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று விடும் அபாயம் உள்ளது.
     
    கடந்த காலங்களில் அனைத்து தேவைகளுக்கும் துணி பைகளையே மக்கள் பயன்படுத்தி வந்தனர். கால மாறுபாட்டின் காரணமாக சிறிய பெட்டிகடைகள் முதல் பெரிய மளிகை கடைகள் வரை பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிகரித்து சஞ்சய்விட்டது. பிளாஸ்டிக் பைகள் மக்கும் திறன் இல்லாததால் இந்த பைகள் மண்ணில் மக்காமல் புதையுண்டு நிலத்தடிநீர் தேங்குவதை தடுக்கிறது. மேலும் மண் வளத்தையும் பாதிக்கச்செய்கிறது.

    தற்போது பிளாஸ்டிக் கப் மற்றும் பாட்டில்கள் நாள் ஒன்றுக்கு டன் கணக்கில் குவிகிறது. இந்த பிளாஸ்டிக் குப்பைகள் மண்ணில் புதையுண்டு மண் வளத்தை பாதிக்க செய்கிறது. மேலும் வெளியிடங்களில் மது அருந்துபவர்கள் ஆங்காங்கே பிளாஸ்டிக் கப்புகளை விட்டு செல்வதால் வயல்காடுகள் முதல் அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகரித்து விட்டது. 

    இனிவரும் காலங்களில் இந்த பிளாஸ்டிக் பொருள்களால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும். 
    பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் சென்றடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 

    இதன் காரணணமாக பிளாஸ்டிக் பயன்பாடு 95 சதவீதம் குறைந்தது. தற்போது கீழக்கரையில் நகராட்சி அதிகாரிகள்  பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்டு கொள்ளாமல் உள்ளனர். 

    இதை சாகமாக்கிய சில வியாபாரிகள் மீண்டும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வருகின்றனர்.ஆகவே பிளாஸ்டிக் பைகள் தாரளமாக புழக்கத்தில் உள்ளது. பிளாஸ்டிக் பாதிப்பின் தன்மை உணர்ந்து இதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    Next Story
    ×