search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "muslim"

    • இஸ்ரேலுக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு ஜாமியா மஜித் முத்தவல்லி அன்வர் தலைமை தாங்கினார். செயலாளர் நசீர் அகமத், ஜாமியா மஸ்ஜித் இமாம் சுஹேல் அகமது காஸிமி ஆகியோர் வரவேற்று பேசினார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட அனைத்து முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் இஸ்ரேலுக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாமியா மஜித் முத்தவல்லி அன்வர் தலைமை தாங்கினார். செயலாளர் நசீர் அகமத், ஜாமியா மஸ்ஜித் இமாம் சுஹேல் அகமது காஸிமி ஆகியோர் வரவேற்று பேசினார்.

    இதில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, காங்கிரஸ் மாவட்ட தலைவர் பாஸ்கர், இந்திய முஸ்லிம் லீக் அன்சர் பாஷா, மனிதநேய மக்கள் கட்சி பாரூக், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் காஜாமைதீன், பொதுக்குழு உறுப்பினர் நாசர்கான் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முடிவில் லைன்மேடு முத்தவல்லி ஆப்சல் ஷெரீப் நன்றி கூறினார்.

    • தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது
    • ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு, பட்டாசு வழங்கப்பட்டது

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மொபைல் கடை நடத்தி வருபவர் ஹபிபுல்லா. சமூக ஆர்வலர்.

    இவர் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு தன்னால் முடிந்த உதவியும், சமூக வலைதளம் மூலம் நண்பர்கள் உதவியுடன் சாலையோரம் வசிக்கும் எளியவர்களுக்கு உணவு, உடை வழங்கி வருகிறார்.

    இந்நிலையில் ஹபிபுல்லா தீபாவ ளியை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி ஸ்ரீராக வேந்திரர் பிருந்தாவனத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு பட்டாசு வழங்கினார்.

    கோவில் நிறுவனர் ஜெகதீ சன் நகர்மன்ற உறுப்பினர் தேவி சீராளன், சமூக செயற்பாட்டாளர் சீராளன் கோவில் அர்ச்சகர் அச்சிதராவ் உள்ளிட்டோர் ஹபிபுல்லாவிற்கு தீபாவளி வாழ்த்துகளை கூறி ஸ்ரீராகவேந்திரர் படத்தை வழங்கினர்.

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட உள்ளனர்.
    • மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட உள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இந்துக்களுக்கு முன்னாள் கவுன்சிலர் அஸ்லம் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட முஸ்லீகள் விநாயகர் சிலை மற்றும் பூஜை பொருட்களான மாலை, ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப் பழம், வெற்றிலை, பாக்கு, கற்பூரம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கிருஷ்ணகிரி அடுத்த ராசுவீதி பகுதியில் உள்ள வீடுகளுக்கு சிலை மற்றும் பூஜை பொருட்களை அவர்கள் வழங்கினார்கள். மேலும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியின் போது ரியாஸ், நதிம், அஷ்ரப், ஏஜாஸ், ஜாபர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • முஸ்லீம்களில் 10 முதல் 20 பேர் தான் வெளியில் இருந்து வந்துள்ளனர்.
    • 600 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் யார் முஸ்லீம்களாக இருந்தனர்?

    இந்தியாவில் உள்ள முஸ்லீம்களில் பெரும்பாலானோர், இந்துவாக இருந்து முஸ்லீமாக மதம் மாறியவர்கள் தான் என்று குலாம் நபி ஆசாத் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு ஆதாரமாக காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் உள்ள பெரும்பாலான காஷ்மீர் பண்டிதர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதை பார்க்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்து உள்ளார்.

    அரசியல் லாபத்திற்காக மதத்தை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்து இருக்கும் குலாம் நபி ஆசாத், "சில பா.ஜ.க. தலைவர் முஸ்லீம்கள் வெளியில் இருந்து வந்துள்ளனர் என்று தெரிவித்தார். யாரும் வெளியில் இருந்து உள்ளே வரவில்லை. 1500 ஆண்டுகளுக்கு முன்பு தான் இஸ்லாம் வந்துள்ளது. இந்து மதம் தான் மிகவும் பழைமை வாய்ந்தது. முஸ்லீம்களில் 10 முதல் 20 பேர் தான் வெளியில் இருந்து வந்துள்ளனர், சிலர் முகலாய படையில் இருந்தவர்கள்," என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

    "மற்ற முஸ்லீம்கள் அனைவரும் இந்துவாக இருந்து, முஸ்லீமாக மாறியுள்ளனர். இதற்கான எடுத்துக்காட்டை காஷ்மீரில் காணலாம். 600 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் யார் முஸ்லீம்களாக இருந்தனர்? அனைவரும் காஷ்மீரி பண்டிட்களாகவே இருந்தனர். அவர்கள் இஸ்லாமிற்கு மாறிவிட்டனர். அவர்கள் பிறக்கும் போதே, இந்த மதத்தில் தான் இருந்தனர்," என்று அவர் மேலும் தெரிவித்தார். 

    • நெல்லை மாநகரில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழுகை நடந்தது.
    • பெரும்பாலான இடங்களில் சிலர் தங்களது வீடுகளிலும் தொழுகை நடத்தினர்.

    நெல்லை:

    தியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டா டப்பட்டது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான இந்நாளில் நெல்லை மாவட்டம் மற்றும் மாநகரில் நூற்றுக்கணக்கான இடங்களில் சிறப்பு தொழுகை நடை பெற்றது. மாநகரில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழுகை நடந்தது.

    மேலப்பாளையம்

    மாவட்டத்தில் திசையன்விளை, ஆத்தங்கரை பள்ளிவாசல், களக்காடு, ஏர்வாடி, பத்தமடை, பேட்டை உள்ளிட்ட இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பள்ளிவாசல்களிலும், திறந்தவெளி திடல்களிலும் நடந்த தொழுகையில் சிறுவர்-சிறுமியர்கள் உள்பட குடும்பத்தினருடன் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.

    நெல்லை மேலப்பாளையம் விரிவாக்க பகுதி கரீம் நகர் மஸ்ஜித் ஹூதா பள்ளிவாசல் சார்பாக ஹஜ் பெருநாள் திடல் தொழுகை மதினா பள்ளி திடலில் நடைபெற்றது. பள்ளிவாசல் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி பெருநாள் உரையாற்றினார்.

    எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு பக்ரீத் வாழ்த்து செய்தி கூறினார். அப்போது அவர், தியாகத்தை போற்றிடும், போதித்திடும் இந்த நாளில் ஒடுக்கபட்ட மக்களின் வாழ்வு உயர்ந்திட நாட்டு மக்களுக்கு எதிரான சக்திகளை வீழ்த்த சபதமேற்போம் என்றார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் கனி, செய்தி தொடர்பாளர் பக்கீர் முகமது லெப்பை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்துல் வகாப் எம்.எல்.ஏ.

    மேலப்பாளையம் ஜின்னாதிடலில் நடைபெற்ற தொழுகையில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான டி.பி.எம்.மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். நெல்லை டவுன் முகம்மது அலி தெரு, எம்.என்.பி பள்ளிவாசல், ஜாமியா பள்ளிவாசல், வி.மா. பள்ளிவாசல், நயினார்குளம் பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களிலும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மேலப்பாளையம் மாநகராட்சி திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    டவுன்-பேட்டை

    டவுன் லாலுகாபுரத்தில் மாவட்ட பேச்சாளர் சித்திக் தலைமையில் நடைபெற்ற தொழுகையில் வெளிநாடு வாழ் தமிழர் நல சங்கத்தின் மாவட்ட தலைவர் டவுன் ஜாபர் கலந்து கொண்டார்.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை மேற்கு கிளை சார்பில் பேட்டை மஸ்ஜிதுர்ரஹீம் பள்ளிவாசல் அருகில் உள்ள திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. மாவட்ட துணைச்செயலாளர் அப்துல் பாசித், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை மேற்கு கிளை தலைவர் சேக் அப்துல் காதர், செயலாளர் பீர் முஹம்மது, பொருளாளர் அகமது மீரான், துணைச்செயலாளர் அப்துல் ஹமீது, துணைச்செயலாளர் முஹம்மது கான், மருத்துவ அணி திப்புசுல்தான் நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    வாழ்த்துக்களை பரிமாறினர்

    பெரும்பாலான இடங்களில் சிலர் தங்களது வீடுகளிலும் தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்ததும் முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை பரிமாறி உற்சாகம் அடைந்தனர்.

    மேலும் ஏழைகளுக்கு அரிசி, இறைச்சி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பல்வேறு இடங்களில் ஆடு, மாடு போன்றவற்றின் இறைச்சியை குர்பானியாக வழங்கினர். பிரியாணி போன்ற உணவு பொட்டலங்களும் வழங்கினர். இதனையொட்டி பள்ளிவாசல்கள், திடல்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • ஈஸ்டர் தினத்தையொட்டி கிறிஸ்தவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
    • கொச்சியில் நடந்த பாரதிய ஜனதா கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கிறிஸ்தவ மக்களிடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தி அவர்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தையொட்டி கேரள மாநில பாரதிய ஜனதா தலைவர்கள், நிர்வாகிகள், பிஷப்புகள் மற்றும் கிறிஸ்தவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். சினேக யாத்திரை என்ற பெயரில் நடந்த இந்த முயற்சிக்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாக பாரதிய ஜனதாவினர் தெரிவித்தனர்.

    இதன் தொடர்ச்சியாக அடுத்தவாரம் 22-ந்தேதி கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகையையொட்டி பாரதிய ஜனதாவினர் முஸ்லீம்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவிக்க முடிவு செய்து உள்ளனர்.

    கொச்சியில் நடந்த பாரதிய ஜனதா கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

    • ஜமாத் தலைவர் அபுல்ஹசன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
    • இப்தார் நிகழ்ச்சியில் முஸ்லிம் ஜமாத்தினர், சர்வ சமயத்தினர் கலந்துகொண்டனர்.

    சேரன்மகாதேவி:

    சேரன்மகாதேவியில் குத்பா முகைதீன் பள்ளிவாசலில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, ஜமாத் தலைவர் அபுல்ஹசன் தலைமை தாங்கினார். செயலர் ஷேக் செய்யது அலி முன்னிலை வகித்தார். இளைஞர் நற்பணி மன்ற உறுப்பினர் முகம்மது இஸ்ஹாக் ஹுசைன் தொடங்கி வைத்தார்.

    இதில் சிறப்பு விருந்தினராக சேரன்மகாதேவி இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் கலந்து கொண்டார். இமாம் மீரான்கனி,பங்குத்தந்தை மரிய பிரான்சிஸ், சேகரகுரு கிப்சன் ஜான்தாஸ், , அரிமா சங்கத்தினர் முருகேசன், அமல்ராஜ், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெருமாள் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில், முஸ்லிம் ஜமாத்தினர், சர்வ சமயத்தினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை தக்வா பள்ளிவாசல் இமாம் குலாம் முகைதீன் ஜமாலி தொகுத்து வழங்கினார். ஜமாத் துணைச் செயலர் செய்யது அப்பாஸ் வரவேற்றார். இளைஞர் நற்பணி மன்றச் செயலர் இம்தியாஸ் நன்றி கூறினார்.

    மதுரையில் இன்று பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. முஸ்லிம்கள் ஏழைகளுக்கு குர்பானி வழங்கினர். #bakridfestival

    மதுரை:

    இஸ்லாமியர்களின் தியாகத்திருநாள் பக்ரீத் பண்டிகை மதுரையில் இன்று கொண்டாடப்பட்டது. மதுரை கோரிப்பாளையம், காஜிமார் தெரு, மகபூப் பாளை யம், ஆரப்பாளையம், அண்ணாநகர் உள்ளிட்ட அனைத்து பள்ளி வாசல் களிலும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

    அரசரடியில் உள்ள ஈத்கா மைதானத்தில் டவுன் காஜியார் தலைமையில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    ஏழைகளுக்கு உதவிடும் திருநாள் பக்ரீத் பண்டிகை என்பதால் மதுரையில் முஸ்லிம்கள் ஏழைகளுக்கு குர்பானி வழங்கினர். இதற்காக நூற்றுக்கணக்கான ஆடுகள் வெட்டப்பட்டன. #bakridfestival

    முத்தலாக் ஒழிப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு இஸ்லாமியர்களை ஆதரிப்பதாக கூறும் காங்கிரஸ் முஸ்லிம் ஆண்களுக்கு மட்டுமான கட்சியா? என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார். #PMmodi #CongressstandsforMuslim
    லக்னோ:

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று காங்கிரஸ் கட்சியை முஸ்லிம்களுக்கான கட்சி என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம், அசம்கர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பொதுகூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-

    காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான கட்சி என காங்கிரஸ் தலைவர் கூறியதாக நாளிதழ் செய்தியில் நான் படித்து தெரிந்துகொண்டேன்.
    இதுதொடர்பாக கடந்த இரு நாட்களாக விவாதமும் நடந்து வருகின்றது. இயற்கை வளங்களின்மீது சொந்தம் கொண்டாட முஸ்லிம்களுக்கு முன்னுரிமை உள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்னர் தெரிவித்து இருந்ததால் தற்போது  காங்கிரஸ் தலைவரின் கருத்தை அறிந்து நான் ஆச்சரியப்படவில்லை.

    ஆனால், காங்கிரஸ் முஸ்லிம் ஆண்களுக்கு மட்டுமான கட்சியா? என நான் கேட்க விரும்புகிறேன். அந்த கட்சியில் முஸ்லிம் பெண்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளுக்கு ஏதும் இடமுள்ளதா? என்பதையும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

    முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவான முத்தலாக் மசோதாவையும், பாராளுமன்றத்தையும் அவர்கள் முடக்கியது ஏன்? பாராளுமன்றம் இன்னும் நான்கைந்து நாட்களில் மீண்டும் கூடவுள்ளது. முத்தலாக், நிக்காஹ் ஹலாலா விவகாரங்களால் பாதிக்கபட்டவர்களை சென்று சந்தியுங்கள். அதன் பின்னர் உங்கள் கண்ணோட்டத்தை பாராளுமன்றத்தில் பதிவு செய்யுங்கள் என நான் தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு  அவர் கூறினார். #PMmodi #CongressstandsforMuslim 
    ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்டரிய மன்ச் சார்பில் டெல்லியில் 19-ம் தேதி இப்தார் விருந்து அளிக்கப்படவுள்ளது. #RSSMuslimwingIftar #MuslimRastriyaManchIftar #Iftar
    புதுடெல்லி:

    குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு இரு மதத்தினருக்கு இடையிலான கலவரமும் உயிரிழப்புகளும் ஏற்பட்டபோது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இஸ்லாமியர்களின் எதிரி அல்ல என்னும் பிரசாரத்தை பரப்புரை செய்யவும், இரு மதத்தினரிடையே நல்ல புரிதலையும், ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காகவும் முஸ்லிம் ராஷ்டரிய மன்ச் என்னும் துணை அமைப்பை அந்நாள் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் சுதர்சனம் ஏற்படுத்தினார்.

    சுமார் 2 ஆயிரம் இஸ்லாமிய குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு நிதியுதவி அளித்து வருவதாகவும், தலாக் என்னும் விவாகரத்து செய்யப்பட்ட சுமார் ஆயிரம் இஸ்லாமிய விதவை பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தந்து வருவதாகவும், ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்களை வழங்குவதாகவும் இந்த முஸ்லிம் ராஷ்டரிய மன்ச் அமைப்பினர் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. பற்றி ஒருபிரிவு மக்களிடையே உள்ள கருத்து வேறுப்பாட்டை களையும் வகையில் முஸ்லிம் ராஷ்ரரிய மன்ச் சார்பில் டெல்லியில் 19-ம் தேதி இப்தார் விருந்து நடத்தப்படவுள்ளதாக இந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் முஹம்மத் அப்சல் தெரிவித்துள்ளார்.

    முஸ்லிம் மதகுருக்கள் மற்றும் ஆர்,எஸ்.எஸ். தலைவர்கள் கலந்துகொள்ளும் இந்த இப்தார் விருந்தில் பங்கேற்க வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கும், பிறநாடுகளின் தூதர்களுக்கும் அழைப்பு அனுப்பப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #RSSMuslimwingIftar  #MuslimRastriyaManchIftar #Iftar  
    ×