search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gurbani"

    • பக்ரீத் பண்டிகையை முஸ்லிம்கள் தியாக திருநாளாக கொண்டாடி வருகிறார்கள்.
    • மசூதிகளில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    திருப்பூர்:

    உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் 2 பெருநாளை கொண்டாடுவார்கள். ஒன்று ரம்ஜான் பண்டிகை. மற்றொன்று பக்ரீத் பண்டிகை ஆகும். பக்ரீத் பண்டிகையை முஸ்லிம்கள் தியாக திருநாளாக கொண்டாடி வருகிறார்கள்.

    அதன்படி இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. புத்தாடை அணிந்து மசூதிகளுக்கு சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.

    திருப்பூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் சார்பாக திருப்பூர் பெரிய கடை வீதி நொய்யல் வீதி அரசுப்பள்ளி வளாகத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

    மாவட்டத்தலைவர் நூர்தீன் தலைமையில் நடந்த சிறப்பு தொழுகையில், மாவட்ட ச்செயலாளர் யாசர் அரபாத், மாவட்ட பொருளாளர் சிராஜித், மாவட்ட துணை தலைவர் ஜாகீர் அப்பாஸ் , மாவட்ட துணைச்செயலாளர் காஜா பாய் ஆகியோர் உரை யாற்றினர்.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 28 கிளைகளில் தொழுகை நடைபெற்றது. இதே போல் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம், உடுமலை உள்பட பல்வேறு இடங்க ளில் உள்ள மசூதிகளில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    காலை 7 மணியில் இருந்து சிறப்பு தொழுகை தொடங்கியது. தொழுகை முடிந்த பிறகு பிரார்த்தனை செய்தனர். உறவினர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். தொழுகைக்கு பிறகு குர்பானி கொடுக்கப்பட்டது. ஆடுகள் தனி நபராகவும், மாடுகள் கூட்டு குர்பானியாகவும் கொடுக்கப்பட்டது.

    குர்பானி கொடுக்கப்பட்ட ஆட்டு இறைச்சியின் ஒரு பங்கை தாங்கள் வைத்து கொண்டனர். மற்ற 2 பங்குகளை உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் பிரித்துக் கொடுத்தனர்.

    சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் விதமாக தியாக திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக அதிகாலையிலேயே எழுந்து புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்றோம்.

    பின்னர் ஆட்டு கிடாய்களை குர்பானி கொடுத்து அந்த இறைச்சியின் ஒரு பங்கை ஏழை-எளிய மக்களுக்கும், ஒரு பங்கை உற்றார், உறவினர்களுக்கும், ஒரு பங்கு எங்களுக்கும் என்று பிரித்து கொடுத்து உற்சாகமாக கொண்டாடினோம்.

    உலக மக்கள் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று சிறப்பு தொழுகையில் வேண்டிக்கொண்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மதுரையில் இன்று பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. முஸ்லிம்கள் ஏழைகளுக்கு குர்பானி வழங்கினர். #bakridfestival

    மதுரை:

    இஸ்லாமியர்களின் தியாகத்திருநாள் பக்ரீத் பண்டிகை மதுரையில் இன்று கொண்டாடப்பட்டது. மதுரை கோரிப்பாளையம், காஜிமார் தெரு, மகபூப் பாளை யம், ஆரப்பாளையம், அண்ணாநகர் உள்ளிட்ட அனைத்து பள்ளி வாசல் களிலும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

    அரசரடியில் உள்ள ஈத்கா மைதானத்தில் டவுன் காஜியார் தலைமையில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    ஏழைகளுக்கு உதவிடும் திருநாள் பக்ரீத் பண்டிகை என்பதால் மதுரையில் முஸ்லிம்கள் ஏழைகளுக்கு குர்பானி வழங்கினர். இதற்காக நூற்றுக்கணக்கான ஆடுகள் வெட்டப்பட்டன. #bakridfestival

    ×