என் மலர்

  நீங்கள் தேடியது "bakrid festival"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய மாதம் துல் ஹஜ் 10-ம் நாள் பக்ரீத் பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது.
  • இஸ்லாத்தின் புனித நூலான குரான் சொல்லும் வழியில் பயணிப்போம் நாட்டில் அமைதியை நிலைநாட்டி மதநல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவோம்.

  பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கண்ணியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து விஜய் வசந்த் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

  உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய மாதம் துல் ஹஜ் 10-ம் நாள் பக்ரீத் பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது.

  இறைவனின் கட்டளையை ஏற்றுத் தவம் இருந்து பெற்ற பிள்ளை என்றும் பாராமல் தனது மகனான இஸ்மாயிலை கடவுளுக்குப் பலியிட நினைத்த இறைத்தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தைப் போற்றும் தினமாகக் கொண்டாடப்படும் இந்த புனித நாளில் நபிகள் கூறிய அறவழியில் பயணிப்போம்.

  ஒரு தாய் பிள்ளை போல் வாழ்ந்து வரும் நம்மைத் துண்டாட நினைக்கும் தீய சக்திகளிடம் இருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாப்பது இன்றைய தலைமுறையின் தலையாகக் கடமையாக உள்ளது. இஸ்லாத்தின் புனித நூலான குரான் சொல்லும் வழியில் பயணிப்போம் நாட்டில் அமைதியை நிலைநாட்டி மதநல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவோம்.

  நாட்டில் நல்ல மனம் கொண்ட மக்களுக்கு எல்லாம் கிடைத்திட இறைவனை வேண்டி துவா செய்வோம். அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிரதமர் மோடி இஸ்லாமிய மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
  • மனித குலத்தின் நன்மைக்காக கூட்டு நல்வாழ்வு மற்றும் செழுமைக்கான உணர்வை மேம்படுத்த வேண்டும்.

  இஸ்லாமியர்களின் பெருநாளான பக்ரீத் பண்டியை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, காலை முதலே இஸ்லாமியர்கள் பள்ளி வாசலில் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  பக்ரீத் பண்டிகையையொட்டி நாட்டின் முக்கியத் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  அந்த வகையில், பிரதமர் மோடி இஸ்லாமிய மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

  ஈத் முபாரக்! ஈத்-உல்-அதா நல்வாழ்த்துக்கள். மனித குலத்தின் நன்மைக்காக கூட்டு நல்வாழ்வு மற்றும் செழுமைக்கான உணர்வை மேலும் மேம்படுத்துவதற்கு இந்த பண்டிகை நம்மை ஊக்குவிக்கட்டும்.

  இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அன்னூரில் சாரல் மழை பெய்து வரும் நிலையில் சந்தையில் அதிகாலை முதலே ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது.
  • வெள்ளாடு, குரும்பாடு, செம்மறியாடு, மலையாடு உட்பட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

  கோவை:

  கோவை மாவட்டம், அன்னூர் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள மக்கள் விவசாயத்துடன் சேர்ந்து ஆடு வளர்ப்பையும் செய்து வருகின்றனர்.

  அன்னூரை சுற்றியுள்ள பகுதிகளில் புல்வெளிகள் நிறைந்த மேய்ச்சல் நிலங்கள் அதிகம் உள்ளதால் ஆடுகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன.

  அன்னூரில் வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தையானது வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும். அன்னூர் சந்தையில் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனை செய்வது வழக்கம்.

  இந்த நிலையில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி வார இறுதி நாளான இன்று, அன்னூர் சந்தையில் ஆடு விற்பனை களைகட்டியது. அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தினர். கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களிலிருந்தும் கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்தும் ஆடுகளை வாங்க ஏராளமான வியாபாரிகள் குவிந்துள்ளனர்.

  அன்னூரில் சாரல் மழை பெய்து வரும் நிலையில் சந்தையில் அதிகாலை முதலே ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. சந்தை தொடங்கியதும் மழையில் நனைந்தவாறு வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

  வெள்ளாடு, குரும்பாடு, செம்மறியாடு, மலையாடு உட்பட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குட்டிகள் 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் வரையிலும், திடகாத்திரமான உடல்வாகுடன் சற்று எடை அதிகம் உள்ள ஆடுகள் 8 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

  அதே போல சந்தையில் நாட்டுக்கோழிகள் மற்றும் இறைச்சி வெட்டும் மரக்கட்டைகளும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளாக பக்ரீத் பண்டிகைக்கு அன்னூர் ஆட்டுச்சந்தையில் பெரிய அளவில் விற்பனை நடைபெறாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு சுமார் 50 முதல் 70 லட்சம் ரூபாய் அளவுக்கு விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  சந்தைக்கு வியாபாரிகள் அதிக அளவு வந்து செல்வதால் டீக்கடை, ஓட்டல் மற்றும் சிறு கடைகளிலும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல சந்தையில் அதிக அளவிலானோர் கூடியுள்ளதால் அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டி செல்லும் சாலையில் அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பக்ரீத் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் அன்று அசைவ ஓட்டல்களில் பிரியாணி விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இப்போதே அசைவ ஓட்டல்களில் ஆர்டர்கள் குவிகிறது.
  • குடும்பமாக சாப்பிட பக்கெட் பிரியாணி, தந்தூரி, கிரில் போன்ற கோழி வகை உணவுகளும் அதிகளவு தயாரிக்க முன்னணி ஓட்டல்கள் தயாராகி வருகின்றன.

  சென்னை:

  பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை குர்பானி கொடுப்பது வழக்கம்.

  வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முஸ்லிம்கள் தயாராகி வருகின்றனர்.

  அவரவர் வசதிக்கேற்ப ஆடு, மாடு அல்லது ஒட்டக இறைச்சியை வாங்கியோ அல்லது உயிருடன் வாங்கி கூறுபோட்டு உறவினர்கள், நண்பர்கள் குடும்பத்துக்கு பிரித்து கொடுப்பார்கள்.

  இதனால் பக்ரீத் பண்டிகைக்கு முன்னதாகவே ஆடு விற்பனை களை கட்ட தொடங்கி விடும். சென்னையில் புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, அம்பத்தூர் ஆகிய 4 இடங்களில் உள்ள இறைச்சி கூடங்களில் குர்பானி ஆடு விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

  நேற்று முதல் ஆடுகளை வாங்கி செல்கின்றனர். சென்னையில் சுமார் 50 ஆயிரம் ஆடுகள் குர்பானிக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து ஆடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

  புளியந்தோப்பு ஆட்டிறைச்சி கூடத்தில் மட்டும் 20 ஆயிரம் ஆடுகள் விற்பதற்கு தயாராக உள்ளன.

  இதுகுறித்து ஆட்டிறைச்சி வியாபாரிகள் சங்க கவுரவ தலைவர் ஸ்ரீராமலு கூறியதாவது:-

  குர்பானி ஆடு விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. குறைவாகத்தான் விற்பனை நடக்கிறது. பக்ரீத்துக்கு 4 நாட்களுக்கு முன்னதாகவே ஆடுகளை வாங்கி செல்வார்கள். 15 கிலோ எடையுள்ள ஆடு ரூ.10,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உயிருடன் கிலோ ரூ.650 வீதமும், கறியாக கிலோ ரூ.600 வீதமும் விற்பனை செய்கிறோம்.

  ஞாயிற்றுக்கிழமை பக்ரீத் வருவதால் ஆட்டு இறைச்சி விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை 10 ஆயிரம் ஆடுகள் வெட்டப்பட்டும். இந்த வாரம் கூடுதலாக விற்பனையாகும் என்பதால் ஆடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  சென்னையில் பல்வேறு இடங்களில் குர்பானி ஆடுகள் விற்பனை இப்போதே மும்முரமாக நடந்து வருகின்றன. ஒரு சில இடங்களில் ஒட்டக இறைச்சியும் விற்கப்படுகிறது.

  மாடுகளும் அதிகளவு வெட்டுவதற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மாட்டு இறைச்சி கிலோ ரூ.400 வரை விற்கப்படுகிறது. ஆட்டு இறைச்சி கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்கப்படுவதால் மாட்டு இறைச்சியை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். பக்ரீத் பண்டிகைக்கும் மாட்டு இறைச்சி விற்பனை அமோக இருக்கும் என்பதால் வியாபாரிகள் அதிகளவு மாடுகளை கொண்டு வந்துள்ளனர்.

  பக்ரீத் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் அன்று அசைவ ஓட்டல்களில் பிரியாணி விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இப்போதே அசைவ ஓட்டல்களில் ஆர்டர்கள் குவிகிறது. குடும்பமாக சாப்பிட பக்கெட் பிரியாணி, தந்தூரி, கிரில் போன்ற கோழி வகை உணவுகளும் அதிகளவு தயாரிக்க முன்னணி ஓட்டல்கள் தயாராகி வருகின்றன.

  சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பார்சல் உணவு அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் பிரியாணி விற்பனை குறிப்பிடும் வகையில் உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அனைத்து மதத்தினருக்கும் பிரியாணி வழங்குவதும் இஸ்லாமியா்களின் வழக்கம்.
  • ஆடுகளின் எடையைப் பொறுத்து ரூ.15 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையில் விற்பனை

  திருப்பூர் :

  இஸ்லாமியா்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை ஜூலை 10 ந் தேதி கொண்டாடப்படுகிறது.

  இந்த பண்டிகைக்கு ஆடுகள் குா்பானி கொடுக்கப்பட்டு இறைச்சியை பகிா்ந்தளிப்பது வழக்கம். அந்நாளில் அனைத்து மதத்தினருக்கும் பிரியாணி வழங்குவதும் இஸ்லாமியா்களின் வழக்கம். இந்நிலையில், திருப்பூரில் குா்பானி கொடுப்பதற்காக பெரிய அளவிலான செம்மறியாடுகள் வரத்து தொடங்கியுள்ளது.

  இதில் ஆடுகளின் எடை மற்றும் உயரம், நிறம், கொம்பின் நீளம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆடுகளை விலை பேசி வாங்கிச் செல்கிறாா்கள். கா்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான செம்மறியாடுகள் வாகனங்கள் மூலமாக திருப்பூா் கொண்டுவரப்பட்டுள்ளன.ஆடுகளின் எடையைப் பொறுத்து ரூ.15 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையில் விற்பனையாகும் என்று ஜம்ஜம் நகரை சோ்ந்த இஸ்மாயில் என்பவா் தெரிவித்துள்ளாா்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் இன்று பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. முஸ்லிம்கள் ஏழைகளுக்கு குர்பானி வழங்கினர். #bakridfestival

  மதுரை:

  இஸ்லாமியர்களின் தியாகத்திருநாள் பக்ரீத் பண்டிகை மதுரையில் இன்று கொண்டாடப்பட்டது. மதுரை கோரிப்பாளையம், காஜிமார் தெரு, மகபூப் பாளை யம், ஆரப்பாளையம், அண்ணாநகர் உள்ளிட்ட அனைத்து பள்ளி வாசல் களிலும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

  அரசரடியில் உள்ள ஈத்கா மைதானத்தில் டவுன் காஜியார் தலைமையில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

  ஏழைகளுக்கு உதவிடும் திருநாள் பக்ரீத் பண்டிகை என்பதால் மதுரையில் முஸ்லிம்கள் ஏழைகளுக்கு குர்பானி வழங்கினர். இதற்காக நூற்றுக்கணக்கான ஆடுகள் வெட்டப்பட்டன. #bakridfestival

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு பக்ரீத்தொழுகை நடத்தப்பட்டது.
  ஈரோடு:

  இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த இறைத் தூதர் இப்ராகிமின் தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் உன்னத நாள் தான் பக்ரீத் திருநாள் ஆகும்.

  இறைவனின் அருளை பெறுவதற்காக அனைத்தையும் தியாகம் செய்யும் உயர்ந்த எண்ணத்தை விதைக்கும் நன்னாளாகவும் இந்நாள் விளங்குகிறது.

  இன்று காலையிலேயே இஸ்லாமியர்கள் அவர்கள் பகுதிக்கு உட்பட்ட பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையில் ஈடுப்பட்டனர்.

  ஈரோடு மாவட்டத்திலும் இன்று பக்ரீத் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதிகாலையிலயே எழுந்து குளித்து, புத்தாடைகள் அணிந்து பள்ளிவாசல்களுக்கு சென்று சிறப்பு தொழுகைகளில் ஈடுப்பட்டனர்.

  பக்ரீத்தையொட்டி ஆட்டை பலியிட்டு அதை மூன்று பங்குகளாக பிரித்து ஒரு பங்கை ஏழைகளுக்கு கொடுத்தனர். இரண்டாவது பங்கை உறவினர்களுக்கு கொடுத்தனர். மூன்றாவது பங்கை தங்களுக்கு வைத்து கொண்டனர்.

  ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் ஈரோடு மாவட்ட அரசு காஜி முகமது கிபாயத்துல்லா தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

  இதே போன்று ஈரோடு மாநகரில் உள்ள ஜானகியம்மாள் லே-அவுட் பள்ளிவாசல்,புது மஜித் வீதியில் உள்ள சுல்தான் பேட்டை பள்ளிவாசல், அசோகபுரம் , திருநகர் காலனி, கே.எஸ்.நகர், சம்பத்நகர், டவுண் போலீஸ் நிலையம் எதிரே உள்ள பள்ளிவாசல், மரப்பாலம், ரெயில்வே காலனி, முத்தம்பாளையம், திண்டல் புதுகாலனி, பெரிய அக்ரஹாரத்தில் உள்ள ஈத்கா மைதானம் என மாநரில் உள்ள 43 பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

  இதே போன்று சத்தியமங்கலத்தில் உள்ள போட்டு வீராம்பாளையத்தில் 1,500 இஸ்லாமியர்கள் பங்கேற்ற சிறப்பு தொழுகை நடந்தது. அந்தியூர் பர்கூர் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகையும் நடந்தது. புளியம்பட்டி மெயின் ரோட்டில் உள்ள பெரிய பள்ளிவாசல், சின்ன பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

  இதே போன்று பெருந்துறை, கோபி, அம்மாபேட்டை, மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 250 பள்ளிவாசல்களிலும் , 42 ஈத்கா மைதானத்திலும் சிறப்பு தொழுகை நடந்தது.

  கொடுமுடியில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.

  இதனையொட்டி ஈரோடு- கரூர் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள மசூதியில் இருந்து ஹஸ்ரத் முகமது யாசின், ஹஸ்ரத் சாதிக் பாட்சா தலைமையில் முத்தவல்லி அபுபக்கர் முன்னிலையில் இஸ்லாமியர்கள் ஊர்வலமாக சென்றனர்.

  ஊர்வலம் கொடுமுடி பழைய பஸ் நிலையம் வழியாக சென்று சுல்தான் பேட்டையில் உள்ள சுல்தான் மாகல்லா பள்ளிவாசலுக்கு வந்தனர். பள்ளிவாசல் பின்புறம் அமைந்துள்ள மண்டபத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

  பக்ரீத் பண்டிகையையொட்டி கோபியில் முஸ்லிம்கள் பங்கேற்ற ஊர்வலம் இன்று நடந்தது. ஈரோடு- சத்தி மெயின் ரோட்டில் உள்ள பெரிய பள்ளி வாசல் முன்பு இந்த ஊர்வலம் தொடங்கியது.

  கடை வீதி, மார்க்கெட் வழியாக சென்ற இந்த ஊர்வலம் ஈத்கா பள்ளி வாசலில் முடிவடைந்தது. அங்கு முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

  ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு பக்ரீத்தொழுகை நடத்தப்பட்டது.

  பெருந்துறையில் குன்னத்தூர் ரோட்டில் உள்ள மஜித் வீதியில் உள்ள மசூதியிலும். இதேபோல் புதிய மசூதியிலும் இன்று முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

  பெருந்துறை சிப்காட் தொழில் பேட்டையில் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களில் பெரும் பாலோனோர் முஸ்லிம்கள் ஆவார்கள்.

  இவர்களும் இன்று பக்ரீத்தையொட்டி சிறப்பு தொழுகை நடத்த திரண்டனர். ஆனால் மசூதியில் போதிய இடம் இல்லாததால் இந்த 2 மசூதியிலும் ஷிப்டு முறையில் முஸ்லீம்கள் தொழுகை நடத்தினர்.

  ஒரு ஷிப்டுக்கு 1000 பேர் என அவர்கள் சிறப்பு பக்ரீத் தொழுகையில் ஈடுபட்டனர்.  #tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தஞ்சையில் ஆத்துபாலம் அருகே உள்ள ஜிம்மா பள்ளிவாசலில் அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது.

  தஞ்சாவூர்:

  தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் இன்று சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை இன்று கொண்டாடி வருகின்றனர்.

  பக்ரீத் நாளில் புத்தாடை அணிந்தும், ஏழை எளிய மக்களுக்கு இறைச்சியை தானம் செய்யும் நாளாக இதனை இஸ்லாமிய மக்கள் கொண்டாடுகின்றனர்.

  இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த இறைத் தூதர் இப்ராகிமின் தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் உன்னத நாள் இப்பக்ரீத் திருநாள் ஆகும்.

  இந்த நாளில் இஸ்லாமியப் பெருமக்கள் இறை உணர்வோடும், தியாகச் சிந்தனையோடும் பக்ரீத் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.

  இதைத் தொடர்ந்து தஞ்சையில் ஆத்துபாலம் அருகே உள்ள ஜிம்மா பள்ளிவாசலில் அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது. ஈஸ்வரி நகரில் அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் இன்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. கீழ வாசலில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்தி கொண்டனர்.

  இதேபோல் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, பூதலூர், வல்லம், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வார சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
  செஞ்சி:

  விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் ஆட்டு சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தைக்கு விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் ஆடு மற்றும் மாடுகளை விற்பனைக்கு கொண்டுவந்து விற்பனை செய்வார்கள்.

  இந்த சந்தையில் ஒரு நாளைக்கு ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்படும். இன்று வெள்ளிக்கிழமை சந்தை கூடியது. வருகிற 22-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

  இதையொட்டி இன்று அதிகாலை முதலே விவசாயிகள் செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகளை விற்பனை செய்ய கொண்டு வந்தனர். மேலும் வியாபாரிகள் சிலர் வெளியூர்களில் இருந்து ஆடுகளை வாங்கி, இங்கு அதிக விலைக்கு விற்பதற்காக கொண்டு வந்தனர்.

  இதனால் சந்தை முழுவதும் ஆடுகளாக காணப்பட்டது. இதனால் ஆடு விற்பனை சூடுபிடித்தது. ஆடுகளை வாங்க விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, மதுரை, புதுவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்து குவிந்தனர்.

  அவர்கள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர். ஒரு குட்டி ஆடு ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. நன்கு வளர்ச்சி அடைந்த ஆடுகள் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. ஆடுகளை மொத்தமாக சில வியாபாரிகள் வாங்கி சென்றனர். அதுபோல் மாடுகளும் அதிக அளவில் விற்பனை ஆனது.

  இன்று மட்டும் 15 ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும், ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன என ஆடு வியாபாரி ஒருவர் கூறினார்.

  ஆடுகளை வாங்கிய வியாபாரிகள் அனைவரும் வேன்கள், மினி லாரிககளில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வருகிற 22-ந்தேதி பக்ரீத் பண்டிகையை கொண்டாடப்படுவதையொட்டி அய்யலூர் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
  வடமதுரை:

  திண்டுக்கல் அய்யலூரில் வியாழக்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை கூடுவது வழக்கம். மாவட்டத்தில் மிகப்பெரிய ஆட்டுச்சந்தை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்த வியாபாரிகள் வருகின்றனர். வருகிற 22-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக முஸ்லீம்கள் கூட்டு குர்பானிக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். ஆடுகளை வாங்கிச் சென்று ஒருவாரம் வளர்த்து பண்டிகை நாளில் பலிகொடுத்து வழிபடுவார்கள். இதற்காக கரூர், அரவக்குறிச்சி, நத்தம், புத்தாநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான முஸ்லீம்கள் அய்யலூர் சந்தைக்கு வந்திருந்தனர்.

  விவசாயிகளும் அதிகளவில் கால்நடைகளை சந்தைக்கு கொண்டு வந்திருந்தனர். செம்மறி ஆட்டுக்கிடா ரூ.10ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது. விலை அதிகரித்துகாணப்பட்ட போதும் ஆட்டுக்கிடாய்களை வாங்க போட்டிபோட்டனர். இதனால் விரைவாகவே ஆடுகள் விற்றுத்தீர்ந்தது. நாட்டுக்கோழி விலையும் அதிகரித்து கிலோ ரூ.350-க்கு விற்பனையானது.
  இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், வழக்கத்தைவிட இந்த ஆண்டு ஆடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்திருந்தன. இருந்தபோதும் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது சந்தையில் விளக்கு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் சந்தைக்கு வருவோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதிகாலை நேரத்தில் இருள் சூழ்ந்து காணப் படுவதால் கொள்ளை பயமும் உள்ளது. எனவே அய்யலூர் சந்தைக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்றனர்.

  ×