என் மலர்
இந்தியா

பக்ரீத் பண்டிகை - டெல்லி ஜூம்மா மசூதியில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
- தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளையும் பரிமாறி உற்சாகம் அடைந்தனர்.
- பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர்.
நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். பக்ரீத் பண்டிகை தியாகத்துக்கான பெருநாளாக கொண்டாடப்படுகிறது.
இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று காலையிலேயே இஸ்லாமியர்கள் நாடு முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளையும் பரிமாறி உற்சாகம் அடைந்தனர்.
திறந்தவெளி மைதானங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு மைதானங்களில் நடந்த தொழுகையிலும் இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
டெல்லியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பாராளுமன்றத் தெருவில் உள்ள ஜமா மசூதியில் மக்கள் தொழுகை நடத்தினர்.
இதேபோல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், பீகார் மாநிலம் பாட்னா, உத்தரபிரதேச மாநிலம் சம்பலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மக்கள் தொழுகை நடத்தினார்கள்.
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பாளையம் ஜும்ஆ மசூதியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.






