search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poor"

    • ராமச்சந்திரன் (வயது 15) மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக இவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நடுவலூர் பள்ளக்காடு பகுதியில், ஜெயராமன் என்பவர் மகன் ராமச்சந்திரன் (வயது 15) மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக இவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட ராமச்சந்திரன் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுவன் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவரும் காயமடைந்தார். அவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தகவல் அறிந்த அங்கு வந்த உறவினர்கள் பலியான ராமச்சந்திரன் உடலை பார்த்து கதறி அழுது புரண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • லாட்டரி சீட்டு விற்பனை காட்டன் சூதாட்டம் என்ற பெயரில் அமோகமாக நடைபெற்று வருகிறது.
    • 3-ம் நம்பர் லாட்டரியும், காட்டன் சூதாட்டமும் எளிய மக்களின் வருவாய் அனைத்தையும் பிடுங்கி, அவர்களை நடுத்தெருவில் நிற்கச் செய்கிறது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை காட்டன் சூதாட்டம் என்ற பெயரில் அமோகமாக நடைபெற்று வருகிறது.

    பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பஜார் பகுதியில் வீடுகளை வாடகைக்கு எடுத்து காட்டன் சூதாட்டத்தை நடத்தி வருகின்றனர். தினமும் கூலி வேலைக்கு செல்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், காய்கறி, பூ, பழம் விற்கும் சிறு வியாபாரிகள், கட்டிட வேலை செய்பவர்கள் என இவர்களை குறிவைத்தே காட்டன் சூதாட்டம் நடத்தப்படுகிறது.

    இதில் நூற்றுக்கணக்கான ஏஜெண்டுகள் இருப்பதாகவும், இதில், பல கோடி ரூபாய் புரளுவதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் காட்டன் ஜாக்பாட் என்ற பெயரில் நடத்தி வரும் சூதாட்டத்தை போலீசாரும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த காட்டன் சூதாட்டம் விற்பனை மதியம் 1.30 மணிக்கு மேல் தான் சூடு பிடிக்க தொடங்குகிறது.

    அந்த சமயத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் அவர்களது வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு அந்த சூதாட்டம் நடக்கும் தெருவில் சென்று லாட்டரி சீட்டுகளை அங்கு இருக்கும் ஏஜென்ட்கள் மூலமாக மாறி மாறி எழுதி விட்டு செல்கின்றனர்.

    சூதாட்ட கும்பல் தங்களிடம் எழுத வரும் நபர்களிடம் இருந்து பல ஆயிரம் ரூபாய் அளவிற்கு பணத்தை கட்டணமாக பெற்றுக் கொள்கின்றனர்.

    குறிப்பாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகளவில் காட்டன் சூதாட்டம் மூன்றாம் நம்பர் லாட்டரி விற்பனை அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.

    "அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு, ராணிப்பேட்டை விஷாரம் என மாவட்டம் முழுக்க காட்டன் குதாட்டமும், மூன்று நம்பர் லாட்டரியும் கொடிகட்டிப் பறக்கின்றன. இந்த காட்டன், 3-ம் நம்பர் லாட்டரி இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசம் கிடையாது. காட்டன் என்பது 2 எண்கள் எழுதித்தர வேண்டும். உதாரணமாக, ஒரு பெட்டிக்கடைக்கு சென்று 35 எனச்சொன்னால் 10 ரூபாய் வாங்கிக்கொண்டு அந்த எண்ணை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தந்துவிடுவார்கள் நாம் சொன்ன எண் தேர்வாகியிருந்தால் 700 ரூபாய் கிடைக்கும். ஒரு எண்ணுக்கு 10 ரூபாய் என்பதால் பலரும் 35, 44. 55 என 10 முதல் 20 விதமான இரட்டை இலக்க எண்களை எழுதி அதற்கான பணத்தைத் தந்துவிடுவார்கள்.

    இதில் ஒப்பன், குளோஸ் என மற்றொரு வகை உள்ளது. ஓப்பன் என்றால், 2 எண்களில் முதல் எண்ணை மட்டும் குறிப்பிடுவது. அதாவது 1 முதல் 9 வரை என ஏதாவது ஒரு எண்ணை சொல்லி பணம் கட்டுவது. உதாரணமாக 4-ம் எண் மீது பணம் கட்டியிருந்தால் இதில் 40, 41, 42 என வந்தாலும் முதலில் 4 வந்தால் அதற்கு பரிசு தருவார்கள்.

    அதாவது 10 ரூபாய் கட்டினால் 350 ரூபாய் கிடைக்கும். குளோஸ் டைப் என்பது, கடைசி எண் 1 முதல் 9 வரை ஏதாவது ஒரு எண்ணை குறித்துத் தர வேண்டும். உதாரணமாக 5 என வைத்துக் கொள்வோம் 45, 55, 65, 15 என எது வந்தாலும் கடைசியில் 5 என முடிந்தால் பாதித் தொகை கிடைக்கும்.

    நீங்கள் 10 ரூபாய்தான் கட்டவேண்டும் என்கிற கட்டாயமில்லை. 100. 500 கூட கட்டலாம். பரிசுத்தொகை அப்படியே 10 மடங்கு அதிகமாகத் தருவார்கள் 3-ம் நம்பர் லாட்டரி என்பது, ஒரு எண்ணுக்கு 10 ரூபாய் செலுத்த வேண்டும்.

    உதாரணமாக, 567 என எழுதித் தந்தால் 567 குலுக்கலில் வந்தால் அந்த எண்ணை எழுதித் தந்தவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 5 மட்டுமே வந்தது என்றால் 30 ரூபாய் தருவார்கள். S6 என 2 எண்கள் வந்திருந்தால் 500 ரூபாய் தருவார்கள்.

    100 ரூபாய்க்கு டோக்கன் எழுதினால். எழுதும் புரோக்கருக்கு 30 ரூபாய் கிடைப்பதால், தொழிலாளர்கள் அதிகம் புழங்கும் காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட், பஸ் நிலையங்களில் உள்ள கடைகள் மற்றும் தனி அறைகளை எடுத்தும் பலர் எழுதுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    3-ம் நம்பர் லாட்டரியும், காட்டன் சூதாட்டமும் எளிய மக்களின் வருவாய் அனைத்தையும் பிடுங்கி, அவர்களை நடுத்தெருவில் நிற்கச் செய்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • வாடிப்பட்டியில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • அரிசி, காய்கறி, சேலை, இனிப்புகளை மாநில இணைத்தலைவர், மாநில பொருளாளர் வழங்கினர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் செந்தில்பாண்டி தலைமை தாங்கினார். தென்மண்டல இளைஞரணி துணை செயலாளர் செந்தில், மாவட்ட தலைவர் எம்.கே.கணேசன், மாவட்ட இளைஞரணி தலைவர் கே.என்.கணேசன் முன்னிலை வகித்தனர். வாடிப்பட்டி ஒன்றிய தலைவர் கருப்பையா வரவேற்றார். இதில் ஏழைகளுக்கு அரிசி, காய்கறி, சேலை, இனிப்புகளை மாநில இணை தலைவர் ஆறுமுகநாட்டார், மாநில பொருளாளர் கே.என்.நாகராஜன் ஆகியோர் வழங்கினர்.

    இதில் விவசாய அணி ஒன்றிய தலைவர் வையாபுரி, மகளிரணி நிர்வாகிகள் வள்ளி, மல்லிகா, மதுரை நகர தலைவர் காளி, மாவட்ட செயலாளர்கள் மருது, திண்டுக்கல் ராமு தேவர், அந்தோணி, தொழிற் சங்க செயலாளர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் மருதுபாண்டி நன்றி கூறினார்.

    • ஏழைகளுக்கு உணவுப்பொருள்களை தொகுத்து வழங்கினார்.
    • எம் .கே. இ. உமர் மற்றும் அவரது துணைவியார் ஹாரித் உமர் ஆகியோர் மேற்பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    கீழக்கரையை சேர்ந்த மர்ஹூம் பி.எஸ். அப்துல் ரகுமான். மர்ஹூம் தாசிம் பீவி அப்துல் காதர் ஆகியோர்களின் நினைவாக புனித ரமலான் மாதத்தில் ஏழை எளியவர்களுக்காக ஒரு மாத காலத்திற்கான உணவுப் பொருள்கள் வழங்குவது வழக்கம். அதேபோல் இந்த வருடம் (ரூ. 4500 மதிப்புள்ள) 30 வகையான உணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை அனைத்து ஜமாத் பகுதிகளை சேர்ந்த சுமார் 1500 ஏழை எளிய மக்களுக்கு சீதக்காதி அறக்கட்டளையின் செயலாளர் மற்றும் டிரஸ்டி மற்றும் தாசிம் பீவி அப்துல் காதர் அவர்களின் மகன்கள் ஹாலித் புகாரி. செய்யது முஹம்மது புகாரி ஆகியோர் பியேரல் மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்தில் கடந்த மூன்று நாட்களாக வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் எம் .கே. இ. உமர் மற்றும் அவரது துணைவியார் ஹாரித் உமர் ஆகியோர் மேற்பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் பொது துணை மேலாளர் சேக் தாவுது மற்றும் தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி முதல்வர் சுமையா ஆகியோர் செய்திருந்தனர்.

    • கறிவேப்பிலை சாதம், வெஜிடபுள் சாதம், குஸ்கா போன்ற உணவுகளும், விழா மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு உணவுகளும் வழங்கப்படுகிறது.
    • அரசு மருத்துவமனையிலுள்ள உட்புற நோயாளிகளின் உதவியாளர்கள் மற்றும் பசியால் வாடும் ஏழை எளிய மக்கள் பயனடைகின்றனர்.

    தஞ்சாவூர்:

    புனித அன்னை தெரசாவின் அன்பு வழியைப் பின்பற்றி தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேசன் 2002ஆம் ஆண்டு முதல் சாதி, மதம், இனம், மொழி கடந்து அனைத்துத் தரப்பினருக்கும் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறது.

    மதர் தெரசா பவுண்டேசன் கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் கொரோனா நோய் தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்துகள், மளிகை சாமான்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியது.

    அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா மற்றும் இதர நோய்களினால் பாதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் உள் நோயாளிகளின் உதவியாளர்கள் தினமும் பசியால் வாடுவதை கண்டு அவர்களுக்கு அன்னை தெரசா அமுதசுரபி அன்னதான திட்டத்தின் மூலம் இலவசமாக மதிய உணவு வழங்கி வருகிறது .

    இத்திட்டத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

    இத்தொடர் திட்டத்தை தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தொடக்கி வைத்து, ஏழை எளிய மக்களுக்கு இடைவிடாமல் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் இலவசமாக அன்னதானம் வழங்கிவரும் பவுண்டேசன் பணியினை பெரிதும் பாராட்டினார்.

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் (பொ) மருதுதுரை முன்னிலை வகித்தார். மதர் தெரசா பவுண்டேசன் சேர்மன் சவரிமுத்து தலைமை தாங்கினார்.

    பசியால் வாடும் ஏழை எளிய மக்கள் 500-க்கும் மேற்பட்டோருக்கு இத்திட்டத்தின் மூலம் ஒரு நாள் கூட தவறாமல் தினந்தோறும் தொடர்ந்து மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டதின் மூலம் தக்காளி சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம். கொத்தமல்லி சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம், புதினா சாதம், தேங்காய் சாதம், கறிவேப்பிலை சாதம், வெஜிடபுள் சாதம் மற்றும் குஸ்கா போன்ற உணவுகளும், விழா மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு உணவுகளும் வழங்கப்படுகிறது.

    மாதாக்கோட்டை சாலையில் அமைந்துள்ள அன்பு இல்லம், தஞ்சை நகர் பகுதிகள், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம் ஆகிய இடங்களில் அன்ன தானம் வழங்கப்ப டுகிறது.

    இத்திட்டத்தின் மூலம் ஆதரவற்றவர்கள், கைவிடப்பட்டவர்கள், சாலை ஓரங்களில் வசிப்ப வர்கள், நோயுற்றவர்கள், முதியவர்கள், கூலித்தொ ழிலாளர்கள், அரசு மருத்துவ மனையிலு ள்ள உட்புற நோயாளிகளின் உதவியாளர்கள் மற்றும் பசியால் வாடும் ஏழை எளிய மக்கள் ஆகியோர் பயனடைகின்றனர்.

    இந்நிகழ்ச்சியில் மதர் தெரசா பவுண்டேசன் அறங்காவலர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் பயனாளர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட இயக்குநர் ரத்தீஷ்குமார், நிர்வாக மேலாளர் மெர்சி, தளவாட மேலாளர் ஜெரோம், மக்கள் தொடர்பு அலுவலர்கள் நாகராணி, விஜி, ரேணுகா மற்றும் தன்னார்வ தொண்டர்கள் மகேஷ்வரன், சூசைராஜா, கிறிஸ்டி, வர்ஷினி, ஷர்மிளா ஆகியோர் செய்திருந்தனர்.

    ஏழை மக்களின் குறைந்தபட்ச வருமானத்துக்கான உத்தரவாதம் அளிப்போம் என்ற ராகுலின் அறிவிப்பு ஏழைகள் வாழ்வில் திருப்புமுனையாக அமையும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். #RahulGandhi #PChidambaram #basicincomeforthepoor
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சத்தீஸ்கர் மாநிலம், அட்டல் நகரில் நடைபெற்ற விவசாயிகள் சம்மேளனத்தில் கலந்து கொண்டார்.

    காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்புமிக்க ஒரு முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் உலகிலேயே முதன்முறையாக ஏழை மக்களுக்கு அடிப்படை வருமானம் நிர்ணயிக்கப்படும். 

    இதன்மூலம் நாட்டிலுள்ள ஒவ்வொரு ஏழை குடிமகனுக்கும் குறைந்தபட்ச வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தால் நாட்டில் பசியும், ஏழ்மையும் இருக்காது. இந்த திட்டத்தை உலகிலேயே முதன்முறையாக எங்கள் அரசு இந்தியாவில் அறிமுகப்படுத்தும் எனவும் வாக்குறுதி அளித்தார்.

    ராகுல் காந்தியின் இந்த அறிவிப்புக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வரவேற்பு தெரிவித்துள்ள மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம், ‘வரலாற்று சிறப்புமிக்க இந்த அறிவிப்பு ஏழைகள் வாழ்வில் திருப்புமுனையாக அமையும்’ என தெரிவித்துள்ளார்.

    ‘உலகம் தழுவிய அளவில் அடிப்படை வருமானம் என்பது தொடர்பான கொள்கையைப்பற்றி கடந்த இரண்டாண்டுகளாக விரிவாக விவாதித்துள்ளோம். நாட்டின் இன்றைய நிலவரப்படி ஏழை மக்களின் நலன்கருதி இந்த கொள்கையை நாம் நடைமுறைப்படுத்த வேண்டிய காலகட்டம் வந்துள்ளது.

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற 2004-2014 ஆண்டுகளுக்கு இடையில் 14 கோடி மக்களை ஏழ்மையின் பிடியில் இருந்து விடுவித்து, உயர்த்தி இருக்கிறோம். இப்போது, இந்தியாவில் இருந்து ஏழ்மை நிலையை துடைத்தெறியும் நடவடிக்கையை மேற்கொள்ள உறுதி ஏற்றுள்ளோம்.

    இந்த திட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் விரிவாக குறிப்பிடுவோம்’ என அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதி அறிக்கை தயாரிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ள ப.சிதம்பரம் கூறியுள்ளார். #minimumbasicincome #basicincomeforthepoor #RahulGandhi #guaranteedminimumincome #PChidambaram
    பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் உலகிலேயே முதன்முறையாக ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச வருமானம் நிர்ணயிக்கப்படும் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #minimumbasicincome #basicincomeforthepoor #RahulGandhi
    ராய்ப்பூர்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சத்தீஸ்கர் மாநிலம், அட்டல் நகரில் நடைபெற்ற விவசாயிகள் சம்மேளனத்தில் கலந்து கொண்டார். விவசாயிகளின் வங்கிக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு ராகுல் காந்தி வழங்கினார். அம்மாநில முதல் மந்திரி பூபேஷ் பாகேல் உள்ளிட்டவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ரபேல் ஊழலில் தொடர்புடைய அனில் அம்பானி, விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி போன்ற தொழிலதிபர்களுக்கு ஒரு இந்தியா, ஏழை விவசாயிகளுக்கு ஒரு இந்தியா என மத்தியில் ஆளும் பா.ஜ.க. இரண்டு இந்தியாக்களை உருவாக்க முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினார்.

    காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்புமிக்க ஒரு முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் உலகிலேயே முதன்முறையாக ஏழை மக்களுக்கு அடிப்படை வருமானம் நிர்ணயிக்கப்படும். 

    இதன்மூலம் நாட்டிலுள்ள ஒவ்வொரு ஏழை குடிமகனுக்கும் குறைந்தபட்ச வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தால் நாட்டில் பசியும், ஏழ்மையும் இருக்காது. இந்த திட்டத்தை உலகிலேயே முதன்முறையாக எங்கள் அரசு இந்தியாவில் அறிமுகப்படுத்தும் எனவும் வாக்குறுதி அளித்தார். #minimumbasicincome #basicincomeforthepoor #RahulGandhi
    தனியார் மருத்துவமனைகள் ஏழை-எளியவர்களுக்கும் உயர்சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #EdappadiPalaniswami
    சென்னை:

    அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையத்தை துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு இன்று தொடங்கி வைத்தார். விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவது மட்டுமல்லாமல், மிகச் சிறந்த மனிதவளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்துவதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு ஒரு முன்மாதிரி மாநிலமாக சிறந்து விளங்கி வருகிறது.

    தாய்சேய் நலம் மற்றும் குடும்ப நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும், நோய்களைத் தடுப்பதற்காகவும் பல முன்னோடித் திட்டங்களை அரசு திறம்பட செயல்படுத்தி வருகிறது.

    உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்துதல், மருத்துவ மனித வளத்தை பெருக்குதல் போன்றவைகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

    இதன் காரணமாக இந்தியாவில் உயரிய மருத்துவ சேவை பெற வசதியுள்ள இடமாக தமிழ்நாடு கருதப்படுகிறது.

    வளர்ந்த நாடுகள் அடைந்துள்ள சுகாதார குறியீடுகளை, 2023-ம் ஆண்டுக்குள் அடைய வேண்டும் என்ற இலக்கு அம்மாவால் வெளியிடப்பட்ட “தொலைநோக்கு திட்டம் 2023”ல் சேர்க்கப்பட்டுள்ளது.

    தாய்மார்கள் இறப்பு விகிதம், குழந்தை இறப்பு விகிதம் போன்ற சுகாதார குறியீடுகளில் ஐக்கிய நாடுகளின் மில்லினியம் வளர்ச்சி இலக்குகளை ஏற்கனவே அடைந்த நிலையில், மற்ற மாநிலங்களுக்கு முன்னதாகவே தேசிய இலக்குகளையும் தமிழ்நாடு அடைந்துள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் காப்பீட்டுத் திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 27.73 லட்சம் பயனாளிகள் 5,426.74 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

    2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நமது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    சமீபத்தில், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இரண்டு கைகளையும் இழந்த ஒருவருக்கு, கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்தியாவிலேயே அரசு மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பது ஒரு சாதனையாகும்.



    புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு அரசு, அரசு மருத்துவமனைகளை வலுப்படுத்தி வருகிறது. புற்றுநோய் உட்பட தொற்றா நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

    மதுரை, கோயம்புத்தூர், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 60 கோடி ரூபாய் செலவில் 4 மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஏழை மக்களுக்கு தரமான, உயரிய சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படுகின்றது.

    இந்தியாவில் பிற மாநிலங்களில் மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளிலிருந்தும் நோயாளிகள் தமிழ்நாட்டிற்கு சிகிச்சை பெறுவதற்காக வருகின்றனர். இதனால், தமிழ்நாடு மருத்துவ சுற்றுலாவின் தலைமையிடமாக விளங்குவது மட்டுமன்றி, நமது நாட்டிற்கு அந்நிய செலாவணியையும் ஈட்டித்தருகிறது.

    ஏழை எளிய மக்களுக்கு உயரிய சிகிச்சைகள் தேவைப்பட்டு, அவர்கள் தனியார் மருத்துவமனைகளை அணுக வேண்டிய சூழ்நிலையில், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்து அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதை இத்தருணத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன்.

    அப்பல்லோ மருத்துவமனையின் பணி தொடர எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அப்பல்லோ மருத்துவமனை குழு தலைவர் பிரதாப் ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். #EdappadiPalaniswami

    ராஜஸ்தான் ரே‌ஷன் கடையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு கிலோ கோதுமை ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் என்று முதல் மந்திரி சோக் கெலாட் அறிவித்துள்ளார். #AshokGehlot
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக அசோக் கெலாட் பதவி ஏற்றார்.

    தேர்தல் வாக்குறுதியில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் அறிவித்தது. அதன்படி விவசாய கடன் தள்ளுபடி செய்யும் பணி நடந்து வருகிறது.

    இந்தநிலையில் ரே‌ஷன் கடையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு கிலோ கோதுமை ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்தார்.

    சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் அசோக் கெலாட் பேசியதாவது:-

    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு கிலோ கோதுமை ஒரு ரூபாய்க்கு ரே‌ஷன் கடையில் வழங்கப்படும். இதன்மூலம் ரூ.1.53 கோடி மக்கள் பயன் அடைவார்கள். சிறிய மற்றும் வயதான விவசாயிகள் தற்போது பென்‌ஷன் திட்டத்தில் சேர்க்கப்படாமல் உள்ளனர். அவர்களும் பென்‌ஷன் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்

    பால் கொள்முதல் விவசாயிகளுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.2 போனஸ் வழங்கப்படும் 5 ஆயிரம் பால் பூத்துக்கள் திறக்கப்படும். விவசாயிகள் சிறப்பு சலுகையாக சிறிய கால கடன்தொகை வழங்கப்படும். மத்திய கூட்டுறவு வங்கி, நில வளர்ச்சி வங்கியில் விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். முற்பட்டோர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். ராஜஸ்தானில் 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #AshokGehlot

    விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் விஜயகாந்த நீடூழி வாழ வேண்டி தங்க தேர் இழுத்து தேமுதிகவினர் வழிப்பட்டனர்.
    திருச்சி:

    திருச்சி மாநகர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் அதன் தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. திருச்சி அரியமங்கலத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமை தாங்கி கட்சி கொடியேற்றி, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சிக்கு அவை தலைவர் அலங்கராஜ் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் விஜயகாந்த நீடூழி வாழ வேண்டி தங்க தேர் இழுத்து வழிப்பட்டனர். நிகழ்ச்சிக்கு உறையூர் பகுதி செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். இன்று மதியம் திருச்சி மலைக்கோட்டை பகுதி தே.மு.தி.க. சார்பில் 11-வது வார்டு சறுக்குபாறை அய்யனார் கோவிலில் விஜயகாந்த் பெயருக்கு அர்ச்சனை செய்து கிடா வெட்டி விருந்து அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளர் நூர்முகமது தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் பழனி முன்னிலை வகித்தார். ஏர்போர்ட் பகுதி சார்பில் பகுதி செயலாளர் குமார் ஏற்பாட்டில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் டி.வி. கணேஷ் வழங்கினார். 

    நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் வி.கே. ஜெயராமன், பொருளாளர் மில்டன் குமார், தலைமை பொது குழு உறுப்பினர்கள் கணேஷ், ராமு,ராஜ்குமார், முகேஷ், பெருமாள்,பகுதி செயலாளர்கள் வெல்டிங் சிவா,கருணாகரன், தொழிற் சங்கம் திருப்பதி, தமிழ் செல்வன், முன்னாள்மாவட்ட செயலாளர்  தங்கமணி, மகளிரணி செயலாளர் பிரித்தா விஜய் ஆனந்த், குமாரசரவணன், மாவட்ட இளைஞரணி சுப்புடு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    மதுரையில் இன்று பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. முஸ்லிம்கள் ஏழைகளுக்கு குர்பானி வழங்கினர். #bakridfestival

    மதுரை:

    இஸ்லாமியர்களின் தியாகத்திருநாள் பக்ரீத் பண்டிகை மதுரையில் இன்று கொண்டாடப்பட்டது. மதுரை கோரிப்பாளையம், காஜிமார் தெரு, மகபூப் பாளை யம், ஆரப்பாளையம், அண்ணாநகர் உள்ளிட்ட அனைத்து பள்ளி வாசல் களிலும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

    அரசரடியில் உள்ள ஈத்கா மைதானத்தில் டவுன் காஜியார் தலைமையில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    ஏழைகளுக்கு உதவிடும் திருநாள் பக்ரீத் பண்டிகை என்பதால் மதுரையில் முஸ்லிம்கள் ஏழைகளுக்கு குர்பானி வழங்கினர். இதற்காக நூற்றுக்கணக்கான ஆடுகள் வெட்டப்பட்டன. #bakridfestival

    ஐக்கிய அரபு அமீரகத்தில் அடிப்படை தேவைகளைக்கூட நிறைவேற்ற இயலாத சூழலில் தவிக்கும் இந்திய குடும்பத்தினருக்கு உதவ பலர் முன்வந்துள்ளனர். #UAE
    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் மதுசூதனன் என்ற 60 வயது இந்தியர் தனது 5 பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் மிகவும் ஏழ்மையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இவர் குறித்து சமீபத்தில் செய்தி வெளியானது. அதில் தானும் தன் குடும்பத்தினரும் சிறைக்கைதி போல வாழ்ந்து வருவதாகவும், தங்களுக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த செய்தி மிக வேகமாக பரவியது. இந்நிலையில், வேலை வாய்ப்பின்றி இருக்கும் மதுசூதனனின் பிள்ளைகளுக்கு பணி வழங்க பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பேசிய அந்நாட்டின் உயர்த்தூதர் சுமதி வாசுதேவ், மதுசூதனனின் 5 பிள்ளைகளுக்கும் பாஸ்போர்ட் புதுப்பித்து தருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.#UAE
    ×