ஆத்தூர் அருகே 15 வயது சிறுவன் பரிதாப சாவு

ராமச்சந்திரன் (வயது 15) மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக இவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
ஆத்தூர் அருகே 15 வயது சிறுவன் பரிதாப சாவு
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நடுவலூர் பள்ளக்காடு பகுதியில், ஜெயராமன் என்பவர் மகன் ராமச்சந்திரன் (வயது 15) மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக இவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட ராமச்சந்திரன் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

தகவல் அறிந்த கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுவன் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவரும் காயமடைந்தார். அவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தகவல் அறிந்த அங்கு வந்த உறவினர்கள் பலியான ராமச்சந்திரன் உடலை பார்த்து கதறி அழுது புரண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com