ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

வாடிப்பட்டியில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அரிசி, காய்கறி, சேலை, இனிப்புகளை மாநில இணைத்தலைவர், மாநில பொருளாளர் வழங்கினர்.
ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
Published on

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் செந்தில்பாண்டி தலைமை தாங்கினார். தென்மண்டல இளைஞரணி துணை செயலாளர் செந்தில், மாவட்ட தலைவர் எம்.கே.கணேசன், மாவட்ட இளைஞரணி தலைவர் கே.என்.கணேசன் முன்னிலை வகித்தனர். வாடிப்பட்டி ஒன்றிய தலைவர் கருப்பையா வரவேற்றார். இதில் ஏழைகளுக்கு அரிசி, காய்கறி, சேலை, இனிப்புகளை மாநில இணை தலைவர் ஆறுமுகநாட்டார், மாநில பொருளாளர் கே.என்.நாகராஜன் ஆகியோர் வழங்கினர்.

இதில் விவசாய அணி ஒன்றிய தலைவர் வையாபுரி, மகளிரணி நிர்வாகிகள் வள்ளி, மல்லிகா, மதுரை நகர தலைவர் காளி, மாவட்ட செயலாளர்கள் மருது, திண்டுக்கல் ராமு தேவர், அந்தோணி, தொழிற் சங்க செயலாளர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் மருதுபாண்டி நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com