search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்லாமியர்கள்"

    • மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அறிவித்தார்.

    இதற்கிடையே கோவை- சாரமேடு கரும்பு கடை மற்றும் குமரி-வேர் கிளம்பி பகுதிகளில் பிறை தெரிந்ததாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அறிவிக்கப்பட்டது.

    அந்த வகையில், தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    தொடர்ந்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    அந்த பதிவில், "ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த சந்தர்ப்பம் இரக்கம், ஒற்றுமை மற்றும் அமைதியின் உணர்வை மேலும் பரப்பட்டும். அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கட்டும். ரமலான்! " என குறிப்பிட்டுள்ளார்.

    • ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்க தொடங்கினர்.
    • நோன்பு காலம் தொடங்கியதை அடுத்து உலக புகழ்பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    ஆண்டுதோறும் ரமலான் பிறைதொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாதத்தின் இறுதி நாளில் சகோதரத்துவத்தையும், ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் வகையில் ரமலான் பண்டிகை கொண்டாட ப்படுகிறது.

    அதன்படி, பிறை தென்பட்டதால் வளைகுடா நாடுகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிலும் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்தார். அதனை தொடர்ந்து, ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்க தொடங்கினர்.

    நோன்பு காலம் தொடங்கியதை அடுத்து உலக புகழ்பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதிகாலை முதல் நோன்பை கடைபிடிக்க உள்ள இஸ்லாமியர்கள், இந்த நோன்பு காலங்களில் பசியுடன் இருந்து, வீண் விவாதங்களை தவிர்த்து இறை பக்தியுடன் ஜகாத் எனும் ஏழைகளுக்கும், வசதியற்றவர்களுக்கும் கருணையோடு உதவி செய்வது இப்பண்டிகையின் சிறப்பாக உள்ளது.

    நாகை மாவட்டத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் நடைபெற்ற தாராவீஹ் என்ற சிறப்பு தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

    • ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள்.
    • ரமலான் மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    பிறை தெரிந்ததை தொடர்ந்து, இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கியதாக தலைமை காஜி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள்.

    ரமலான் மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இந்தநிலையில், இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அனைவருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட ரம்ஜான் வாழ்த்துக்கள். இந்த புனித மாதம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், செழிப்பையும் கொண்டு வரட்டும்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கினர்
    • நாட்டில் உள்ள அனைவரும் சகோதரத்துடன் தொப்புள் கொடி உறவாய் வாழ வேண்டும் என இரு தரப்பினரும் கேட்டுக் கொண்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூரில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கினர். நாட்டில் அனைவரும் சகோதரத்துடன் வாழ வேண்டுமென இந்துக்களும் இஸ்லாமியர்களும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

    இந்த பழமையான கோயிலை சுமார் 7 கோடி ரூபாய் செலவில் புரணமைக்கும் பணிகளில் கோயில் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வந்தனர். அதன்படி கோயில் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த 17-ம் தேதி முதல் வரும் 19-ம் தேதி வரை கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாகலூர் பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாய் வீட்டு சீதனமாக சீர்வரிசை பொருள்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    இதில், ஒரு லட்சம் ரூபாய் பணம், பட்டுச்சேலை, பழங்கள், இனிப்புகள், மலர் மாலைகள் உள்ளிட்ட பொருள்களை தாம்பூலத் தட்டில் எடுத்து வந்த இஸ்லாமியர்கள் அதனை கோயில் நிர்வாகத்தினரிடம் வழங்கினர்.

    இதைத் தொடர்ந்து இஸ்லாமியர்களும், இந்துக்களும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தனர். பாகலூர் பகுதியில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் ஒற்றுமையாக இருப்பதை போல நாட்டில் உள்ள அனைவரும் சகோதரத்துடன் தொப்புள் கொடி உறவாய் வாழ வேண்டும் என இரு தரப்பினரும் கேட்டுக் கொண்டனர்.

    • உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
    • தஞ்சை இர்வீன்பாலம் அருகே உள்ள ஜும்மா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது.

    தஞ்சாவூர்:

    இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.

    அதன்படி இன்று உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

    தஞ்சை கீழவாசல் அறிஞர் அண்ணா மண்டப வளாகத்தில் இன்று காலை பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

    தொழுகை முடிந்த பின்னர் ஒருவருக்கொ ருவர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    இதேபோல் தஞ்சை இர்வீன்பாலம் அருகே உள்ள ஜும்மா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது.

    இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.

    பின்னர் அவர்கள் அனைவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

    இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றன.

    பின்னர் இஸ்லாமியர்கள் பலர், தங்கள் வீடுகளில் ஆடுகளை குர்பானி கொடுத்து அவற்றை 3 சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்து விட்டு 3-வது பங்கை தங்கள் தேவை களுக்கு பயன்படுத்தினர்.

    மேலும் உறவினர்கள், நண்பர்களுக்கும் உணவு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    • பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
    • ஆடுகளை பலியிட்டு இறைச்சியை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து கொண்டாடினர்.

    கும்பகோணம்:

    தியாகத்திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் பள்ளிவாசல் மற்றும் சிறப்பு திடலில்  அதிகாலை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    கும்பகோணம், மேலக்காவேரி, திருப்பனந்தாள், தத்துவாஞ்சேரி, கோணுளாம்பள்ளம், கருப்பூர், செறுகடம்பூர், சிக்கல் நாயக்கன்பேட்டை, திருலோகி,கதிராமங்கலம், சோழபுரம், திருமங்கலக்குடி, ஆடுதுறை, அவனியாபுரம் என  பல்வேறு மசூதிகளில் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.

    இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

    ஆடுகளை பலியிட்டு இறைச்சியை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து கொண்டாடினர்.

    இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர், சிறுமியர்களும்  அதிகாலை முதலே  திடலில் குவிந்தனர்.

    சரியாக 7.00 மணியளவில் பெருநாள் தொழுகையை நடத்திய இமாம்கள் ஆற்றிய உரையில் இறை நம்பிக்கை மனிதனை நல்லவனாக ஆக்குவதற்கு உதவியாக இருக்கின்றது.

    இறை தூதர்கள் உலகில் இறைவனுடைய இறை பணிகளை நடைமுறை படுத்துவதற்காகவே இறைவன் அனுப்பினான் இதில் முக்கிய பங்கு ஆற்றியவர்களில் இப்ராஹிம் நபி அவர் தன் மகன் இஸ்மாயிலை இறைவனுக்காக அறுத்து பலியிட முயன்ற போது இறைவனுக்கு மனிதர்களை நரபலி கொடுப்பது கூடாது என்பதற்காக அதற்கு பரிகாரமாக இஸ்லாமியர்கள் கால்நடை போன்ற  பிராணிகளை அறுத்து  இறைவனுக்காக குர்பானி என பலியிடுகின்றார்கள் என்றார்.

    ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.

    • திருவாருர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் நடுத்தெரு திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
    • ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் ஒரே இடத்தில் தொழுகை செய்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாருர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை நாச்சிகுளம் நடுத்தெரு திடலில் நாச்சிகுளம் கிளை செயலாளர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது.

    ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் ஒரே இடத்தில் தொழுகை செய்தனர்.

    அதே தொடர்ந்து

    நாச்சிகுளம் தவ்ஹீத் பள்ளி இமாம் முகமது தெளபிக் ஹஜ் பெருநாள் குறித்து உரை நிகழ்த்தினார்.

    அதன் பின் ஒருவொரை ஒருவர் கட்டி அனைத்து வாழ்த்துகளை பரிமாரிக் கொண்டனர்.

    இதில் மாவட்ட பொருளாளர் ஹாஜா முகைதீன் மாவட்ட துனை தலைவர் அஸாருதீன் கிளை பொருளாளர் கமருதீன் கிளை துனை தலைவர் செய்யது அபுபக்கர் கிளை துனை செயலாளர் மைதீன் கல்பான் அமீரக பொறுப்பாளர் மூசா மீரான் சாதிக் பாட்சா என 500க்கும் மேற்பட்டோர் இச்சிறப்பு தொழுகையில் கலந்துக் கொண்டனர்.

    • நுகர்வோர் பேரவையின் திருச்செந்தூர் வட்டார கிளை சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் நோன்பின் நன்மைகள் குறித்து எடுத்துக்கூறப்பட்டது.

    உடன்குடி:

    தமிழ்நாடு நுகர்வோர் பேரவையின் திருச்செந்தூர் வட்டார கிளை சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி குலசேகரன்பட்டினத்தில் நடந்தது. தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநில தலைவர் ஏ.வி.பி. மோகனசுந்தரம் தலைமை தாங்கி நோன்பின் நன்மைகள், மகிமைகள், மற்றும் சமத்துவம், சகோதரத்துவம் மனித நேயம் ஆகிய செயல்பாடுகளுடன் ஒவ்வொரு மனிதனும் எப்படி செயல்பட வேண்டும், சகோதர தத்துவத்துடன் எப்படி வாழ வேண்டும் என்று பேசினார்.

    ஆத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் கமால்தீன் முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் வட்டார தலைவர் ரஹ்மத்துல்லா வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினராக அரசு வக்கீல் சந்திரசேகர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் குலசேகரன்பட்டினம் நகரத்தலைவர் ஆறுமுகராஜா, செயலாளர் மரிய இருதயராஜ், உடன்குடி ஒன்றிய ஆலோசகர் பேச்சுமுத்து, ஆத்தூர் கவுன்சிலர் கேசவன் மற்றும் திருமணி உட்பட பலன் கலந்து கொண்டனர். வட்டார தலைவர் ரஹமத்துல்லா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். முடிவில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    • ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிககளை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • மேம்பாட்டு குழு நிறுவனர் காத்துன் பீவி தலைமை தாங்கினார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் அன்னை பாத்திமா இஸ்லாமிய மகளிர் மேம்பாட்டு குழு சார்பில் ஏழை, எளியோருக்கு ரம்ஜான் பண்டிகையை யொட்டி புத்தாடைகள் மற்றும் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    மேம்பாட்டு குழு நிறுவனர் காத்துன் பீவி தலைமை தாங்கினார். சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவின் டிரஸ்டி ஓஜிர்கான், தலைவர் அக்பர்கான், செயலாளர் ஆரிப்கான், பொருளாளர் ரபிக் முன்னிலை வகித்தனர்.

    பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் வீராங்கனை பாத்திமா பீவி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கலந்து கொண்டு இஸ்லாமி யர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

    இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், கவிஞர் மோகன் தாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வட்டச் செயலாளர்கள் பாலமுருகன் தவிடன், பாண்டுரங்கன், வேல்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாக்கிலிப்பட்டி பாலமுருகன், சவுந்தர், அக்பர்அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேர்த்திருவிழா நிகழ்வுகள் உற்சாகமாக நடைபெற்று வருகிறது.
    • அம்மனுக்கு சாத்த பட்டுசேலை மற்றும் பழங்கள் கொண்ட சீர் வரிசை தட்டுடன் கோவிலுக்கு வந்தனர்.

    உடுமலை :

    மதங்களின் பெயரால் பல கலவரங்கள்,பல போராட்டங்கள் நடந்து வரும் இன்றைய சூழலில் தொப்புள் கொடி உறவுக ளாக வாழ்ந்து வரும் உடுமலை மக்கள் வியக்க வைக்கிறார்கள்.

    ஆண்டுதோறும் நடைபெறும் உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை அனைத்து மதத்தினரும் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.குறிப்பாக தேர்த்திருவிழாவன்று தேரோடும் வீதிகளில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் நின்று தேருக்கு வரவேற்பளிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.தற்போது தேர்த்திருவிழா நிகழ்வுகள் உற்சாகமாக நடைபெற்று வருகிறது.இந்தநிலையில் இஸ்லாமியர்கள் ஊர்வ லமாக வந்து மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கிய நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்று ள்ளது.உடுமலை பூர்வீக பள்ளி ஜமாத்தை சார்ந்த இஸ்லாமியர்கள் நேற்று உடுமலை நகர்மன்றத் தலைவர் மத்தீன் தலை மையில் அம்மனுக்கு சாத்த பட்டுசேலை மற்றும் பழங்கள் கொண்ட சீர் வரிசை தட்டுடன் கோவி லுக்கு வந்தனர்.அவர்களை கோவில் பரம்பரை அற ங்காவலர் யு.எஸ்.எஸ் ,ஸ்ரீதர்உள்ளிட்ட நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.மேலும் அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.சீர்வரிசைத் தட்டுக்களை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கிய இஸ்லாமியர்கள் தேர்த்தி ருவிழா சிறக்க வாழ்த்து க்களை தெரிவித்தனர்.

    மதங்களைக் கடந்து மனித நேயத்துடன் ஒருவரு க்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழச் செய்தது.பல இடங்களில் மத ரீதியான மோதல்கள் நடந்து வரும் நிலையில் மதங்களை விட மனிதமே பெரிது என உடுமலை மக்கள் உதாரண மாக வாழ்வது இந்த நிகழ்வால் உறுதிப்படுத்த ப்பட்டுள்ளது.

    • பாபநாசம் அருகே பள்ளியில் ரமலானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெண்கள் உள்பட ஏராளமான இஸ்லாமியர்கள், கலந்து கொண்டனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள ராஜகிரி மதரஸாயே ஹிதாயத்துன் நிஸ்வான் பள்ளியில் ரமலானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பாபநாசம் பெரிய பள்ளிவாசல் ஜமாத் துணைத்தலைவர் ஏ.ஹாஜாமைதீன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கௌரவ ஆலோசகர் எம்.ஜெ.அப்துல்ரவூப், ராசகிரி பெரி பள்ளிவாசல் பரிபாலன சபை தலைவர் யூசுப்அலி, ஆர்டிபி கல்லூரி தாளாளர் தாவூத்பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பெரிய பள்ளிவாசல் இமாம் முஹம்மது இஸ்மாயில் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.ஜமாத்துல் உலமா சபை மாநில துணை தலைவர் ஜீயாவுதீன் பார்கவி நோம்பை திறந்து பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் நிஸ்வான் பள்ளியின் தலைவர் நூர்முஹம்மது, செயலாளர் முஹம்மது பாரூக், பொருளாளர் முஹம்மதுரபி, மற்றும் பாபநாசம் ராசகிரி, பண்டா ரவாடை ஜமாத்தார்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெண்கள் உள்பட ஏராளமான இஸ்லாமியர்கள், கலந்து கொண்டனர்.

    • ரம்ஜான் நோன்பை தொடங்கிய இஸ்லாமியர்கள் தொடங்கினர்.
    • பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

    ராமநாதபுரம்

    இஸ்லாமிய மக்களின் 5 முக்கிய கடமைகளில் நோன்பு நோற்பது முக்கிய மானதாக கருதப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு இருந்து ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

    ரம்ஜான் மாதத்தில் முதல் பிறை பார்த்த பின்னர் நோன்பு உறுதி செய்யப்படும். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு பிறை தென்பட்டது. இதையடுத்து இன்று (24-ந் தேதி) முதல் நோன்பு நோற்கும்படி இஸ்லாமிய மக்களுக்கும், அனைத்து பேஷ் இமாம்க ளுக்கும் மாவட்ட அரசு சலாஹூத்தீன் தகவல் தெரிவித்தார்.

    முன்னதாக நேற்று இரவு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்க ளிலும் தராவீஹ் எனப்படும் சிறப்பு தொழுகை நடை பெற்றது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் பெண்களுக்கான தொழுகை பெண்கள் பள்ளிவாசல்களிலும், அரபி மதராசக்களிலும் நடை பெற்றன.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் ராமநாதபுரம், கீழக்கரை, தொண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் இன்று முதல் நோன்பு விரதத்தை தொடங்கினர். அதிகாலை முதல் மாலை 6 மணி வரை உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். பின்பு மாலையில் தொழுகை செய்து பள்ளிவாசல்களில் வழங்கப்படும் நோன்பு கஞ்சி உட்கொண்டு விர தத்தை முடித்துக் கொள் வார்கள். இதே போல் தொடர்ந்து 30 நாட்கள் நோன்பு விரதத்தை இஸ்லா மியர்கள் கடைப்பிடிப்பார்கள்.

    ×