என் மலர்
நீங்கள் தேடியது "வெறுப்புப் பேச்சு"
- நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான விஜய் ஷா ராஜினாமாவை பாஜக ஏற்குமா?.
- விஜய் ஷா இந்த மோசமான சிந்தனைக்காக பதவி உயர்வு பெறுவார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்து கவனம் ஈர்த்தவர் கர்னல் சோபியா குரேஷி. இந்நிலையில் அவரின் இஸ்லாமிய மத அடையாளத்தை வைத்து மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா தரம் தாழ்ந்த கருத்து ஒன்றை தெரிவித்தார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் குன்வார் விஜய் ஷா, "பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களை அழிக்க, அவர்களது சகோதரியை அனுப்பி வைத்தோம். எங்களின் விமானத்தில் அவர்களின் சகோதரியை அனுப்பி வைத்து, அவர்களை அழிக்க வைத்தார் மோடி. எங்கள் சகோதரிகளை நீங்கள் விதவைகளாக்கினால், உங்களின் சகோதரிகளை கொண்டு உங்களை அழிக்க வைப்போம்" என்று பேசினார்.
அவர் பேசிய வீடியோ வைரலான நிலையில் பாஜக அமைச்சர் ஆயுதப்படைகளை அவமதித்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
பீகார் காங்கிரஸ் எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்தியப் பிரதேச பாஜக அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷி பயங்கரவாதிகளின் மகள் என்று அவமானகரமான கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மகள் கர்னல் சோபியா குரேஷி நமது பெருமை, ஆனாலும் அவரைப் பற்றி இதுபோன்ற ஒரு அவமானகரமான கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நமது துணிச்சலான ஆயுதப் படைகளுக்கு அவமானம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் விஜய் ஷா, ராஜினாமாவை பாஜக ஏற்குமா?.
இந்த அற்ப சிந்தனைக்கு பிரதமர் மோடியும் பாஜக தலைவர்களும் மன்னிப்பு கேட்பார்களா?. அல்லது, எப்போதும் போல, விஜய் ஷாவும் இந்த மோசமான சிந்தனைக்காக பதவி உயர்வு பெற்று, அவருக்கு ஆதரவாக பேரணிகள் நடத்தப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
- மத சுதந்திரம் 2023 என்ற அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டார்.
- சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படுகிறது.
கடந்த வாரம் 200 நாடுகளை உள்ளடக்கிய மத சுதந்திரம் 2023 என்ற அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், இந்தியாவில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் அதிகரிப்பதாகவும், மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்கள், வெறுப்புப் பேச்சு, சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில், அமெரிக்காவின் இந்த மத சுதந்திரம் 2023 அறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், "மத சுதந்திரம் குறித்து அமெரிக்காவின் அறிக்கை ஒருதலைபட்சமானது, இந்தியாவில் மத, சமூக கட்டமைப்பை புரிந்துகொள்ளாமல் தவறான தகவல்களை வைத்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை இந்தியா நிராகரிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
- கோவில் தலைமை பூசாரி நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையாக பேசியிருந்தார்.
- கோவில் தாக்கப்படுவது என்பது சனாதன தர்மத்தின் மீதான தாக்குதல்.
உத்தரப் பிரதேச மாநிலம் கசியபாத்தில் உள்ள தாஸ்னா தேவி கோவில் தலைமை பூசாரி நரசிங்கானந்த் [Narsinghanand] நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்த விவகாரம் சர்ச்சை ஆன பின் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனால் அவரின் கருத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தாஸ்னா தேவி கோவில் முன் ஏராளமானோர் திரண்டு நேற்று இரவு போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் போராட்டம் நடத்தியவர்களில் 10 முதல் 20 பேரை சுட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
காசியாபாத்தில் லோனி தொகுதி பாஜக எம்எல்ஏ நாணந்த் கிசோர் குர்ஜார் பேசுகையில்,அவர்கள் கோவில் மீது கல்லெறிந்துள்ளனர். கோவில் தாக்கப்படுவது என்பது சனாதன தர்மத்தின் மீதான தாக்குதல். இது மொத்த இந்துத்துவா மீதுமான தாக்குதல். போராட்டத்தில் லத்தி சார்க் செய்து போலீஸ் நாடகமாடியுள்ளது.
10 முதல் 20 பேரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றிருந்தால் அதன்பின் அவர்களுக்கு போராடும் துணிச்சல் வந்திருக்காது என்று பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் கண்டனங்களை குவித்து வருகிறது.






