என் மலர்tooltip icon

    இந்தியா

    அசாம் 90% இஸ்லாமிய மக்கள் கொண்ட மாநிலமாக மாறிவிடும் - பாஜக வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை
    X

    அசாம் 90% இஸ்லாமிய மக்கள் கொண்ட மாநிலமாக மாறிவிடும் - பாஜக வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை

    • அசாமில் பாஜக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது.
    • ஏஐ வீடியோவை பாஜக கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    அசாமில் பாஜக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அசாமில் பாஜக ஆட்சி இல்லையென்றால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்று ஒரு ஏஐ வீடியோவை அம்மாநில பாஜக கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    அந்த வீடியோவில், அசாமில் பாஜக ஆட்சி இல்லையென்றால் மாட்டுக்கறி உணவு சட்டபூர்வமாக மாறும். பாகிஸ்தானுடன் தொடபுடைய காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும். டீ எஸ்டேட் முழுவதும் முஸ்லிம்கள் இருப்பார்கள். கவுகாத்தி விமான நிலையம் கிரிக்கெட் மைதானத்தில் முஸ்லிம்கள் நிறைந்திருப்பார்கள். சட்டவிரோத முஸ்லிம் குடியேறிகள் நம் மாநிலத்தின் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பார்கள். அசாம் 90% இஸ்லாமிய மக்கள் கொண்ட மாநிலமாக மாறிவிடும்" என்று முஸ்லிம்கள் மீது வெறுப்பு பரப்பும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிறிதளவும் தயக்கமின்றி மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தும் செயலில் பாஜக ஈடுபடுவதாக அசாம் மாநில அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்த கண்டனங்களை பாஜக சிறிதும் பொருட்படுத்தவில்லை. அதன் விளைவாக அசாம் மாநில பாஜக அமைச்சர் அந்த வீடியோவை மீண்டும் பகிர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×