என் மலர்tooltip icon

    இந்தியா

    பெங்களூரு: ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல மறுத்த இஸ்லாமிய ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய கும்பல்
    X

    பெங்களூரு: 'ஜெய் ஸ்ரீ ராம்' சொல்ல மறுத்த இஸ்லாமிய ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய கும்பல்

    • வசீம் மற்றும் சமீர் மறுத்தபோது, தாக்குதல் தொடங்கியது.
    • வசீமின் உடலின் உள்பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும், வலது காதில் கேட்கும் திறன் இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட மறுத்ததற்காக ஒரு முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்டார்.

    ஜூன் 22 அன்று, சம்பிகேஹள்ளிக்கு அருகிலுள்ள ஹெக்டே நகரில் தனது நண்பரும் மெக்கானிக்குமான சமீருடன் தனது ஆட்டோவில் வசீம் (35) சென்றுகொண்டிருந்தார். அவர்கள் ஓய்வெடுக்க ஒரு காலியான இடத்தில் வாகனத்தை நிறுத்தினர்.

    அருகில் மது அருந்திக் கொண்டிருந்த சுமார் எட்டு பேர் எங்களிடம் வந்து அவர்களின் பெயர்களைக் கேட்டார்கள். பின்னர் அவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிடச் சொன்னார்கள். வசீம் மற்றும் சமீர் மறுத்தபோது, தாக்குதல் தொடங்கியது. சமீர் ஓடிவிட்டார். அவர்கள் வசீமை சுற்றி வளைத்து அடித்தனர்.

    வசீம் அகமது பலத்த காயங்களுடன் பெங்களூருவின் ஏலஹங்கா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், தாக்குதலின் காரணமாக வசீமின் உடலின் உள்பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும், வலது காதில் கேட்கும் திறன் இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×