என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருத்துறைப்பூண்டி ஸ்ரீராகவேந்திரர் கோவிலில் தீபாவளி பரிசை ஹபிபுல்லா வழங்கினார்.
இந்து கோவிலில் தீபாவளி பரிசு கொடுத்த இஸ்லாமியர்
- தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது
- ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு, பட்டாசு வழங்கப்பட்டது
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மொபைல் கடை நடத்தி வருபவர் ஹபிபுல்லா. சமூக ஆர்வலர்.
இவர் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு தன்னால் முடிந்த உதவியும், சமூக வலைதளம் மூலம் நண்பர்கள் உதவியுடன் சாலையோரம் வசிக்கும் எளியவர்களுக்கு உணவு, உடை வழங்கி வருகிறார்.
இந்நிலையில் ஹபிபுல்லா தீபாவ ளியை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி ஸ்ரீராக வேந்திரர் பிருந்தாவனத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு பட்டாசு வழங்கினார்.
கோவில் நிறுவனர் ஜெகதீ சன் நகர்மன்ற உறுப்பினர் தேவி சீராளன், சமூக செயற்பாட்டாளர் சீராளன் கோவில் அர்ச்சகர் அச்சிதராவ் உள்ளிட்டோர் ஹபிபுல்லாவிற்கு தீபாவளி வாழ்த்துகளை கூறி ஸ்ரீராகவேந்திரர் படத்தை வழங்கினர்.
Next Story






