search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி பரிசு"

    • தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது
    • ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு, பட்டாசு வழங்கப்பட்டது

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மொபைல் கடை நடத்தி வருபவர் ஹபிபுல்லா. சமூக ஆர்வலர்.

    இவர் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு தன்னால் முடிந்த உதவியும், சமூக வலைதளம் மூலம் நண்பர்கள் உதவியுடன் சாலையோரம் வசிக்கும் எளியவர்களுக்கு உணவு, உடை வழங்கி வருகிறார்.

    இந்நிலையில் ஹபிபுல்லா தீபாவ ளியை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி ஸ்ரீராக வேந்திரர் பிருந்தாவனத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு பட்டாசு வழங்கினார்.

    கோவில் நிறுவனர் ஜெகதீ சன் நகர்மன்ற உறுப்பினர் தேவி சீராளன், சமூக செயற்பாட்டாளர் சீராளன் கோவில் அர்ச்சகர் அச்சிதராவ் உள்ளிட்டோர் ஹபிபுல்லாவிற்கு தீபாவளி வாழ்த்துகளை கூறி ஸ்ரீராகவேந்திரர் படத்தை வழங்கினர்.

    • திருப்பூர் மாவட்டம்,மங்கலம் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைபணியாளர்கள், தண்ணீர் திறப்பாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் , மங்கலம் ஊராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மங்கலம்:

    தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூர் மாவட்டம்,மங்கலம் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைபணியாளர்கள், தண்ணீர் திறப்பாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.தூய்மை பணியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தீபாவளிபரிசை மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகி எபிசியண்ட்மணி, மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களான முகமதுஇத்ரீஸ், ராதாநந்தகுமார்,ராஜாபரமேஸ்வரன்,ரபிதீன்,பால்ராஜ்,அர்ஜூனன்,மங்கலம் ஊராட்சி செயலாளர் நாகராஜ் மற்றும் மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் , மங்கலம் ஊராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நீட் தேர்வுக்கு எதிராக தொண்டர்கள் கையெழுத்திட்டனர்
    • ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கினர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் மேற்கு ஒன்றியம், மதனாஞ்சேரி கிராமத்தில் உள்ள தளபதி அறிவாலயத்தில் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ். ஞானவேலன் தலைமையில் நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி தொடங்கிய நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் வடிவேல் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக தனது கையெழுத்திட்டு, நீட் க்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து பொது மக்கள், மாணவர்கள், திமுக தொண்டர்கள் கையெழுத்திட்டனர்.

    பின்னர் மேற்கு ஒன்றிய செயலாளர் விஎஸ்.ஞானவேலன் தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு, இனிப்பு மற்றும் பணமுடிப்பு என சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், அவைத் தலைவர் ராமநாதன், துணை செயலாளர் குமார், பொதுக்குழு உறுப்பினர் பெருமாள், மாவட்ட பிரதிநிதி சிவகுமார், பொன்னம்பலம், வெங்கடேசன் மற்றும் ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • இனிப்பு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கீழ்பென்னாத்தூர்:

    தீபாவளி முன்னிட்டு, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு பட்டாசு மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி கீழ்பென்னாத்தூரில் (வ)ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் தலைமையில் நடந்தது.

    ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, கீழ்பென்னாத்தூர் நகர செயலாளர் சி.கே.அன்பு, பேரூராட்சி தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்திருந்த பட்டாசு, இனிப்பு உள்ளிட்ட தீபாவளி பரிசினை கீழ்பென்னாத்தூர் ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    ஒன்றிய நிர்வாகிகள் சிவக்குமார், குப்புசாமி,தேவேந்திரன், மணிகண்டன், லோகநாதன், பேரூராட்சிதுணை தலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி, திமுக நகர நிர்வாகிகள் பழனி, இளங்கோ, ராஜேஷ், ராஜாராம், வினோத், சின்னா உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

    இதேபோல், கீழ்பென்னாத்தூர் தெற்கு ஒன்றியம் இராசன்தாங்கலில் கீழ்பென்னாத்தூர் தெற்குஒன்றிய செயலாளர் இரா.இராஜேந்திரன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு, திமுக தெற்கு-ஒன்றிய நிர்வாகிகளுக்கு பட்டாசு, இனிப்பு வகைகள் கொண்ட தீபாவளி பரிசினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    • தேர்ந்தெடுத்த ஊழியர்கள் தொடங்கிய காலத்திலிருந்தே பணியாற்றுகிறார்கள்
    • என் பணியாளர்கள் எனக்கு ஊழியர்கள் அல்ல; நட்சத்திரங்கள் என்றார் பாடியா

    அரியானாவின் பஞ்ச்குலா (Panchkula) நகரில் உள்ள பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனம், மிட்ஸ்கார்ட் (MitsKart). அதன் நிறுவனர் எம்.கே. பாடியா (M.K. Bhatiya).

    தீபாவளி நெருங்கும் நேரத்தில் தனது ஊழியர்களுக்கு சிறப்பாக பரிசளித்து அவர்களை மகிழ்விக்க நினைத்தார் பாடியா. இதற்காக பணியாளர்களில் 12 பேரை தேர்வு செய்தார். அதில் 3 வருடங்களுக்கு முன் "ஆஃபீஸ் பாய்" (office boy) எனப்படும் கடைநிலை ஊழியராக சேர்ந்தவரும் ஒருவர். நிறுவனத்தை தொடங்கிய காலத்திலிருந்தே இவர்கள் அனைவரும் பாடியாவின் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள்.

    இவர்களை மகிழ்விக்க நினைத்த பாடியா, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும் டாடா பன்ச் (Tata Punch) காரை பரிசளித்தார். இந்த டாடா பன்ச் காரின் ஆரம்ப மாடலின் விலை ரூ.6.50 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.



    "என்னை பொறுத்தவரை என் பணியாளர்கள் வெறும் ஊழியர்கள் அல்ல; அவர்கள்தான் நிறுவனத்தின் நட்சத்திரங்கள். கடுமையாக உழைத்து, நிறுவனத்திற்கு விசுவாசமாக இருக்கும் பணியாளர்கள் எங்கிருந்தாலும் தங்கள் கனவுகளை சுலபமாக நிறைவேற்றி கொள்ளலாம்" என அவர்களுக்கு பரிசளிப்பது குறித்து பாடியா கூறினார்.

    பாடியா பரிசாக காரை வழங்கும் வீடீயோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • பல்லடம் நகராட்சி பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளி பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல பல்லடம் நகராட்சி பணியாளர்கள் 350 பேருக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தீபாவளி பரிசை நகராட்சி தலைவர் கவிதா மணி ராஜேந்திரகுமார் வழங்கினார். இதில் நகராட்சி ஆணையாளர் விநாயகம், நகராட்சி பொறியாளர் ஜான் பிரபு,வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், சுகாதார ஆய்வாளர் சங்கர், நகர்மன்ற உறுப்பினர்கள், திமுக நகரச் செயலாளர் ராஜேந்திர குமார், மதிமுக. நகர செயலாளர் பாலசுப்பிரமணியம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் அருள்புரத்தில் உள்ள தி.மு.க. கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில். ஒன்றிய திமுக. செயலாளர் சோமசுந்தரம் ஏற்பாட்டில் 126 கிளைக் கழக செயலாளர்கள் உள்ளிட்ட 300 பேருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு உள்ளிட்ட தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கணபதிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், துணைத் தலைவர் முத்துக்குமார், பொதுக்குழு உறுப்பினர் தங்கவேல், மாணவரணி சேகர்,திமுக. நிர்வாகிகள் மேனகா துரைசாமி, ஸ்ரீ சிவா, கந்தசாமி, பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதே போல பல்லடம் அருகேயுள்ள கரடிவாவி ஊராட்சியை சேர்ந்த கரடிவாவிபுதூர் ஏ.டி. காலனி, இந்திரா நகர், கிருஷ்ணாநகர் உள்ளிட் பகுதியில் வசிக்கும் 500 குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சத்து60 ஆயிரம் மதிப்பில் வேட்டி,சட்டை, சேலை, இனிப்பு, காரம் அடங்கிய தீபாவளி பரிசு தொகுப்பை கரடிவாவி ஊராட்சி மன்றத் தலைவர் ரஞ்சிதா பகவதிகிருஷ்ணன் தனது சொந்த செலவில் வழங்கினார்.

    ×